வருடம் தோறும் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நம்மில் பலர் புலம்புவது
வெயிலின் கொடுமையைத்தான். இந்த ஆண்டும் விதி விலக்கில்லாமல் வெயில் பின்னி
எடுத்துவிட்டது. கரூரில் 105 டிகிரி என உச்சம் தொட்டது. அக்கினி நட்சத்திரத்தினை
எண்ணிப்பார்க்கையில் கண்ணில் நீரே வந்துவிட்டது.
ஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையினால் வந்த கரு மேகங்களின் கூட்டம் கன
மழையை அளித்து மண்ணை குளிர்வித்தது. மழை வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பளீர்
என இருந்த வானத்தை மேகக்கூட்டம் கவர்ந்ததை புகைப்படம் எடுத்தேன். இந்த மேகத்தினை
பார்க்கும்போது எப்படி மழை பொழிந்திருக்கும் என உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.
வாழ்க மழை. நீரின்றி அமையாது உலகு. வருணபகவானுக்கு நன்றி.
No comments:
Post a Comment