Monday, January 13, 2014
Friday, January 3, 2014
பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்
பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்
திங்கள்தோறும் வாழைப்பழம், புல், அகத்திக்கீரை பசுவிற்கு அளித்தால் தாய்
மற்றும் தகப்பன்வழி நமக்கு வந்த தோஷங்கள் நீங்கும்.
செவ்வாய்தோறும் தண்ணீருடன் புல் கொடுத்தால் இடம், நிலம் வீடு அமையும்
புதன் தோறும் பசுவிற்கு புல் கொடுத்துவந்தால் நல்ல வேலை கிடைக்கும்
வியாழன் தோறும் அரிசிக்கஞ்சி அளித்தால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்
வெள்ளிதோறும் பசுவிற்கு உணவளித்து பூஜை செய்தால் மஹாலட்சுமியின் அருள்
கிடைக்கும்
சனிதோறும் அகத்திக்கீரையுடன் புல் மற்றும் தண்ணீர் அளித்தால் இந்த
ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தொலையும்
ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிக்க நல்ல கண் பார்வை கிடைக்கும்.
கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
அஷ்டமி தோறும் பசுவினை ஒருமுறை வலம் வந்து உணவளித்தால் கொடுத்த கடன் /
வாராக்கடன் கிடைக்கும்
துவாதசி தோறும் பசுவிற்கு உணவளிக்க ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன்
கிட்டும்.
தினமும் பசுவினை குளிப்பாட்டி பராமரித்து உணவளித்து நோய்களில் இருந்து
காத்து கன்றுக்கு அளித்த பால் போக மீதமுள்ள பால் கறந்து தெய்வத்திற்கு
அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் லஷ்மியின்
அருள் கிடைக்கும். அதனால்தான் வீட்டில் நம் முன்னோர்கள் பசுவினை காலம் காலமாக
வளர்த்து வந்தார்கள். கன்றுக்கு பசிக்கு பால் தராமல் தான் கறந்து பருகினால்
மிகப்பெரிய பாவம் என்றும் அந்த பாலினால் அபிஷேகம் செய்தால் பலன்கள் எதுவும்
கிட்டாது எனவும் சாஸ்திரம் சொல்கிறது.
Subscribe to:
Posts (Atom)