Wednesday, March 24, 2010

தத்துவம் மச்சி தத்துவம்

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.

Tuesday, March 16, 2010

Sriram`s - Marriage



Hi Sriram!
We are all happy to hear that you gonna get into the new life on coming June 21st 2010! First of all On behalf of "QuarryBirds" let me Convey our best wishes to you and your fiance!

As we all sailed in the same boat from kinder-karten to SSLC, I guess no need to give intro again and make this letter as so formal..ha ha ha!
Just i want to let you know that we all love you for your charming personality, polite in charecter and kind hearted deeds..

To the Bride and Groom, may good luck and happiness fill all your future days.

wishing you a very Good Luck!

Saturday, March 6, 2010

எனக்கு நானே தாத்தாவான கதை

ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவனை சந்தித்தேன். மிகவும் சோகமாக இருந்தான். ஏன் என்று கேட்டேன். குடும்ப பிரச்சினைகள் என்றான். அப்படியா! என் கதை கேள் என்றேன்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளம் விதவையை அவளின் மகளுடன் சந்தித்தேன். சில நாட்களுக்குபின் அந்த விதவையை மணந்து கொண்டேன். எனக்கு ஒரு வளர்ப்பு மகள் கிடைத்தாள். ஒரு காலச்சுழற்சியில் எனது வளர்ப்பு மகளை எனது அப்பா திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் என் அப்பா எனக்கு மருமகனானார். என் வளர்ப்பு மகள் எனக்கு வளர்ப்பு அம்மா ஆனாள். என் மனைவி அவள் மாமனாருக்கு மாமியாரானாள். சில வருடங்களில் என் வளர்ப்பு மகளான என் வளர்ப்பு அம்மா ஒரு மகனை பெற்றாள். அவன் என் அப்பாவிற்கு பிறந்தவனாகையால் எனக்கு ஒன்றுவிட்ட தம்பியானான். மேலும் எனது வளர்ப்பு மகளுக்கு பிறந்ததால் எனக்கு பேரனும் ஆனான். இந்த குழப்பம் என் மனைவி ஒரு மகளை பெற்றதும் மாறியது. இப்போது என் மகனின் ஒன்று விட்ட தங்கையான அதே சமயம் என் மருமகனான என் அப்பாவிற்கு அத்தையும் ஆனாள் என் மகள். இந்த் நிலையில் நான் அதாவது என் வளர்ப்பு அம்மாவின் மருமகனானேன். எனது மனைவி அவளுக்கே அத்தையானாள். நான் எனக்கே தாத்தாவானேன்.

இப்பொழுது சொல்.. நீ குடும்ப பிரச்சினையில் இருக்கிறாயா? அல்லது எனது குடும்ப பிரச்சினை பெரியதா??

எப்பூடி.. நாங்களும் கதை சொல்லுவோம்ல..