Sunday, November 29, 2009

Senthil Pandian

Hi da machi..
 
yesterday i had attended pandi's brother marriege. that time i met our old friend pandi and discussed our old memories.
 
The following matter to be published in our blog. and please find the attachment for your reference.
 
Luv karthik


செந்தில்பாண்டியன்

இந்த பெயர் சொன்னதும் யாருக்கும் அறிமுகம் தேவை இருக்காது. பஞ்சாயத்து ஸ்கூலில் இருந்து இராணி மெய்யம்மை வரை ஒன்றாக படித்தோம். பாண்டியை பற்றி தனிப்பட்ட முறையில் சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிப்பு. என் நினைவுகளை பின்னோக்கி பார்த்தால் அனேகமாக 4ம் கிளாஸில் இருந்து தான் ஞாபகம் வருகிறது. அப்பொழுது என்னுடன் சிலரையும் சேர்த்து பாண்டியின் அப்பாவிடம் ட்யூசன் சென்றோம். கண்டிப்புக்கு தர்மராஜ் வாத்தியார்தான் என்பது அனைவரும் அறிந்ததே. கணக்கு ஒழுங்கா போடலைன்னா தலையிலேயே குட்டுவார். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். இதில் ஒரு ருசிகர தகவல் என்னவென்றால் என் அண்ணாவும் ஒரு காலத்தில் சில வருடங்கள் அவரிடம் ட்யூசன் படித்திருக்கிறார். குருனாதன் டீக்கடைக்கு பின்னால் இருந்தது அவர்களின் வீடு. அதற்கப்புறம் ஏ.வி.ராமசாமி வீட்டிற்கருகில் குடி வந்தனர். நானும் பாண்டியும், மணிராஜும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறோம். கிரஷர் தாண்டி மருந்து குடோன் வரைகூட தனியாக சென்றிருக்கிறோம். அந்த குடோனில் ஒரு மாமரம்கூட இருக்கும். அப்புறம் மைன்ஸ் வழியாக வந்து ஆஸ்பத்திரி வழியாக காலணி வருவோம். 9ம் கிளாஸ் படிக்கும் போது முழுப்பரீட்சை சமயம் பாண்டிக்கு அம்மை வந்து விட்டது. பாவம். ரொம்ப கஷடப்பட்டுதான் பரீட்சை எழுதினான். படிப்பில் எப்பொழுதும் தான் ஒரு சூரப்புலி என காட்டிக்கொண்டதில்லை. மனப்பாடம் செய்யும் வழக்கமும் அவனிடம் இல்லை. நான் 10வது படிக்கும்போது எனக்கு கணக்கு மட்டும் வராது. மற்ற எல்ல பாடங்களிலும் 50 மார்க்கை தாண்டும் நான் கணக்கில்மட்டும் 20க்கு மேல் போனதில்லை. அந்த சமயம் பாண்டி எனக்கு சில எளிய முறைகளில் பாடம் படிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தான். படிப்பதை விட சொல்லிக்கொடுக்கும்பொழுது அதிகமாக நியாபகத்தில் இருக்கிறது என அவன் சொன்னது எனது நினைவில் இன்றும் இருக்கிறது. அந்த சமயங்களில் ஒரு நன்றியைக்குட சொல்லாத என்னிடமும் எதிர்பார்க்காத அவனிடமும் வெகுளித்தனமான ஒரு நட்பு இருந்தது. வகுப்பில் அவன் என்றுமே முதல் ரேங்க் வாங்கியது இல்லை. அனேகமாக அசோகன், சரவணன், சுதர்சனுக்கு பிறகு ஸ்ரீராமும் பாண்டியும் ரேங்க் எடுப்பர். நான் எப்பவுமே ரேங்க் எடுத்தது இல்லை. கடைசி ரிவிசன் டெஸ்ட்டில் கணக்கில் ஜஸ்ட் பாஸ் ஆனபோது 16வது ரேங்க் எடுத்து இருந்தேன். ஆனால் பப்ளிக் பரீட்சையில் கணக்கில் 70 மார்க் எடுத்தேன் எனப்து ருசிகர தகவல். வரலாறு பாடத்தில் 83 வரை எடுத்தேன். பத்தாவது முடித்தபின் எல்லோரும் பிரிந்தோம். பாண்டி மட்டும் திருச்சியில் ஈ.ஆரில் சேர்ந்தான். சரவணன் சோழவந்தான் போனான். நான் காரைக்குடி. இப்படி பிரிந்தாலும் லீவில் குவாரியில் சேர்ந்துவிடுவோம். பாண்டி மதுரை போன பின்புதான் நமக்குள் கேப் விழுந்து விட்டது. சென்னை போன பின்பு சுத்தமாக தொடர்பு விட்டுப்போனது. நான் கோவையில் கம்ப்யூட்டர் செண்டர் வைத்து இருந்தபோது ஒரு நாள் +2 ரிசல்ட் வந்த சமயம் இண்டர்னெட்டில் இவன் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்திருந்ததை பார்த்தேன். என் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள என் அருகில் யாரும் இல்லை என்பது என் அன்றைய சோகம். அதற்கப்புறம் நீ...நீண்ட வருடங்களுக்குப்பின் நேற்று அவன் தம்பி கல்யாணத்தில் பார்த்தேன். முன்பை விட நல்ல உயரமாகி இருந்தான். முகம் அப்படியே இருந்தது. வாழ்க்கை என்பது இயந்திரகதி ஆகிவிட்ட நிலையில் இது போன்ற சந்திப்புகள் அளிக்கும் சந்தோஷம் மட்டுமே நமது நாட்களை உற்சாகமாக நகர்த்தும். தற்சமயம் டேராடூனில் இருப்பதாக சொன்னான். ரிஷிகேஷ் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவனை சென்று பார்க்க இயலும். பாண்டியை பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் குணாவும் இரமேஷும் கூடவே வருகின்றனர். ஏன் என தெரியவில்லை. அருள் முருகனும் நினைவில் வந்து போகிறான். பாண்டியின் பையனை பார்த்தேன். வட்ட முகம். அகிலேஷ் என பெயர் வைத்து இருக்கிறான். அவன் அகிலத்தையே ஆள வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

நண்பர்களே.. கருத்துக்களை பகிர்வோமா??

மிக்க அன்புடன்
கார்த்திக்.

Saturday, November 28, 2009

வாசுகி முருகேசன் விபத்தில் மரணம்

அன்பு நண்பர்களே!

நேற்று கரூர் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ வும் இன்னாள் தி.மு.க மாவட்ட செயலாளருமான திருமதி. வாசுகி முருகேசன் அவர்கள் பல்லடம் அருகே சூலூரில் ஒரு வாகன விபத்தில் மரணமடைந்தார். அன்னாரது மறைவை ஒட்டி துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தி.மு.க நிர்வாகிகள் கரூர் வந்துள்ளனர். மாவட்ட தலை நகர் முழுவது அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன (உணவகங்கள் உள்பட). கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடக்காது என தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் ஒரே பெண் மாவட்ட செயலாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாராது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

Tuesday, November 10, 2009

Marriage Invitation - Bobby Prasath, Chettinad Cements.

Dear Senior Friends, I m stepping in to the married life, We Hearty welcome your valuable presence on the occasion, Pl. don't miss to attend my marriage, i m eagerly expecting U...............! 
 
 
Thanks & Regards,
 
BOBBY