Tuesday, June 28, 2011

யரோ சொன்ன தத்துவங்கள்

கவலையின்றி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்

அன்பையும் மகிழ்ச்சியையும் பிறர்க்கு அளிப்பத்ன் மூலமே அதனை பிறரிடமிருந்து நாம் பெற முடியும்.

எண்ணம்போல் வாழ்க்கை. நல்ல விசயங்களையே எண்ணுங்கள்.

நமக்கும் ஒரு காலம் வரும் என நம்பிக்கையோடு இருங்கள்.

முடிவு என நீங்கள் நினைத்தது ஒரு துவக்கமாக அமையலாம்.

வாழ்க வளமுடன்!!! வளர்க நலமுடன்!!!!

பிறரால் செய்ய முடிந்த ஒரு விசயம், அது நம்மாலும் முடியும் என நம்புங்கள்.

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது
ஊமையாய் இரு.

புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு.

எளிதில் வெற்றி பெறலாம்.

*அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

"நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.'' - விவேகானந்தர்.

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே!
மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே!
அழுகையில் ஒருவரையும் நம்பாதே!

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றியடைய தேவையானவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றியடையதேவையானவை பொறுமையும் தன்னம்பிக்கையும் தான்.

-அரிஸ்டாடில்


“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, நீயே உனக்கு கொடுத்துக் கொள்ளும் தண்டனை - புத்தபிரான்.

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.

புக‌ழ், பெருமை, க‌ல்வி, ஆயுள், ஆற்ற‌ல், ந‌ல்லுள்ளம், வெற்றி, இள‌மை, ந‌ன்ம‌க்க‌ள், பொருள், பொன், துணிவு, நெல், நுக‌ர்ச்சி, அறிவு, நோயின்மை – அனைத்தும் பெற்று பெறுவாழ்வு வாழ்க

Thursday, June 23, 2011

சினிமாவிற்கு முன் செய்து கொண்டிருந்த தொழில்

நடிகர்கள்.................................தொழில்

ஜெமினி கணேசன்..................................... போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த்................................... .... அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன்.............................. சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்.............................. பத்திரிகையாளர்
ஆனந்தராஜ்.............................. சாராய வியாபாரம்
சிவகுமார்.............................. ஓவியர்
ரஜினிகாந்த்.............................. பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ்.............................. காய்கறி வியாபாரம்
நாகேஷ்.............................. ரயில்வே குமாஸ்தா
பாண்டியன்.............................. வளையல் கடை
விஜயகாந்த்.............................. அரிசி கடை
ராஜேஷ்.............................. பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர்ராஜன்............................. . பேக்கரி
பாக்யராஜ்.............................. ஜவுளிக்கடை
அஜீத்குமார்.............................. டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்.............................. உணவு விடுதி
பாரதிராஜா.............................. மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்.............................. ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன்.............................. கணக்காளர்
பாலச்சந்தர்.............................. கணக்காளர்
விசு .............................. டி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விஜய்.............................. ஓட்டல் பணியாளர்
மோகன்.............................. வங்கி ஊழியர்
ராஜீவ்.............................. ஓட்டல் கேட்டரிங்
தியாகராஜன்.............................. இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்.............................. எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்து.............................. மொழி பெயர்ப்பாளர்
சரத்குமார்.............................. பத்திரிகை அலுவலக நிர்வாகி
சேரன் .............................. சிம்சன் நிறுவன தொழிலாளி
எஸ்.வி.சேகர் .............................. மேடை நாடக ஒலி அமைப்பாளர்