Saturday, November 27, 2010

கிரிக்கெட்

தலைப்பை பார்த்ததும் நான் ஏதோ சச்சினை பற்றியோ கங்குலியை பற்றியோ எழுதப்போகிறேன் என நீங்கள் நினைத்தால்.. ஐயாம் சாரி. நான் எழுதப்போவது நம்ம கிரிக்கெட்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாக நான் பார்த்த நம்ம ஊர் கிரிக்கெட்டை பற்றி எழுதப்போகிறேன். ஆனால் இங்கே நான் ஒன்றை குறிப்பிட விரும்புவது என்னவென்றால் நான் 18 வயது வரை மட்டை பிடித்தவன் கிடையாது.. வெறும் பார்வையாளன் தான். அதனால் நான் நிறைய விசயங்களை மனதில் கொண்டவன்.

அனேகமாக கிரிக்கெட் ரத்ததிலேயே ஊறி இருந்தது நம்ம ஸ்ரீராம்க்குதான். சும்மா ஓடி வரும்போது கூட பவுலிங் போடும் ஆக்சன் அவனிடம் இருக்கும். நிறைய புள்ளி விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். அவன் சொல்லித்தான் ஜிம்பாப்வே என்னும் ஒரு நாடு இருப்பதே எனக்கு தெரியும். வெகு ஆரம்ப காலங்களில் ராம்குமார் வீட்டு வாசலில்தான் கிரிக்கெட் நடக்கும். அரச மரம் தாண்டினால் ஃபோர். காம்பவுண்ட் தாண்டினால் இரண்டு. இப்படி நமக்கு நாமே பவுண்டரி லைன் போட்டு விளையாட்டு ஆரம்பிக்கும். முதலில் விருவிருப்பாக நடக்கும் போட்டி முடியும் போது தொய்வாக இருக்கும். ஸ்ரீதர் அண்ணா கூட ஆரம்ப நாட்களில் அங்கு விளையாடி நான் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் 2 டீம்களாக பிரிந்த நமது நண்பர்கள் ஒரு கட்சி அனல் வீட்டு சைடிலும் அடுத்த பெரிய கட்சி பெரிய கிரவுண்டுக்கும் போனது. முருகேசன் அண்ணா, கிரி அண்ணா குரூப் எல்லாம் அங்கே விளையாடுவார்கள். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு கிரிக்கெட் போட்டி எல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு. மைக் செட் வைத்து பெரிய பெரிய டீம்களை எல்லாம் அழைத்து வந்து மேட்ச் நடத்துவார்கள். அனேகமாக அந்த குரூப்பின் அடுத்த செட்டில்தான் பக்காவாக நடத்தப்பட்டது. அதில் செந்தில்தான் காப்டன். அடேங்கப்பா.. கொஞ்ச ஆட்டமா ஆடுவாரு அவரு.. பேட்டிங்கும் தெரியாது.. பவுலிங்கும் பர்ஃபெக்ட் கிடையாது.. கீப்பிங்கும் சுமார்தான். ஆனால் வாய்... வாய் ஒன்றை மட்டுமே முதலீடாக கொண்டு கேப்டனான பெருமை நம்ம செந்திலுக்குதான். ரூல்ஸ் எல்லாம் விரல் நுனியில் இருக்கும். ரூல்ஸ் மட்டும் தான் தெரியும். எதையும் விவாதத்தில் ஜெயிக்கும் திறமை செந்திலுக்கு உண்டு. முருகன் அண்ணா, சங்கர், பன்னீர்தான் கமெண்ட்ரியில் இருப்பார்கள். ரகுராம் மாமாவும் ஸ்ரீதர் அண்ணாவும் அம்பெயர்களாக இருப்பார்கள். குமாரும், அனலும்தான் வேகப்பந்தில் ஜொலித்தார்கள். ராமசுப்புவும் நல்லாத்தான் பவுலிங் போடுவாப்ல. விடிஆர் லெக் ஸ்பின்னும், ப்ரித்வி & சுமன் ஆப் ஸ்பின்னும் நன்றாக போடுவார்கள். ப்ரித்வி நல்லா பேட்டிங்கும் செய்வான். நான் மனோகர், மணிராஜ் எல்லாம் கடைசி காலகட்டங்களில் டீமில் எண்ட்ரி ஆனோம். மணிராஜ் பேட்டிங்கிலும், நான் பவுலிங்கிலும், மனோகர் பீல்டிங்கிலும் பேர் சொல்லும்படி விளையாடினோம். சூப்பர்னு சொல்ல முடியாமல் போனாலும் சுமாராக நான் ஆப் ஸ்பின் போடுவேன். நிறைய முக்கியமான விக்கெட்களை போல்டாக்கி இருக்கிறேன். என்னை அரவணைத்து சொல்லிக்கொடுத்ததில் விடிஆர்க்கும் அனலுக்கும் பெரும் பங்கு உண்டு.

எரியோட்டில் ஒரு மேட்ச் விளையாடப்போனோம். அதில் தோற்றுப்போனோம். அந்த விளையாட்டில் என்னை ஆட வைப்பதாக கூறி கடைசியில் வெளியில் உட்கார வைத்துவிட்டார்கள். அதற்காகவே அடுத்து திண்டுக்கல்லில் நடந்த லீக் மேட்சில் எனக்கு அனல் சிபாரிசின் பேரில் இடம் கிடைத்தது. அதில் பால்ராஜின் சிறப்பான ஆட்டத்தில் நாம் வென்றோம். அதை சிறப்பாக நீச்சல் குளத்தில் குளித்து கொண்டாடினோம் (அக்சயா வித்யாலயா பள்ளியில்).

தரகம்பட்டி, காணியாளம்பட்டி என நிறைய மேட்ச் ஆடி இருந்தாலும் எதிலும் பெரியதாக ஜெயித்தது இல்லை. ஒருமுறை சேர்வைகாரன்பட்டியில் ஜெயித்தோம்.

பெரிய அளவில் சுந்தரம் நினைவு சுழற்கோப்பை போட்டி குவாரியில் நடந்த போது குளச்சலில் இருந்து சுரேஷின் பெரிய டீம் வந்து விளையாடி கரூர் டீமை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது. அது மறக்க முடியாத மேட்ச். டைட்டஸ், ஜாகீர், கான் இப்படி நிறைய நண்பர்களும் நமக்கு கிடைத்தார்கள்.

பெரிய அளவில் சாதிக்கவில்லை எனினும் ஆரம்பத்தில் இருந்தே சுப்பன், பாசித், புஸ் சரவணன், பன்னீர், ஆறுமுகம், ராமசுப்பு, அம்பி என நமது அனைத்து நண்பர்களின் தினசரி வாழ்க்கையில் கிரிக்கெட் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. என் அண்ணா, சங்கர், மதி அண்ணா, சரவணன் மற்றும் சில நண்பர்கள் ஊருக்கு வரும் சமயங்களில் எல்லாம் விளையாட்டில் கலந்து கொண்டது உண்டு. வெளியூரில் இருந்து நம்ம ஊருக்கு வந்து சிறப்பான விளையாட்டின் மூலம் சுரேஷ் (குளச்சல்), புலியூர் சுரேஷ், புலியூர் சந்திரமோகன் போன்ற நண்பர்களும் நம்மில் இணைந்தது உண்டு.

வேறு எந்த நண்பர்களது பெயர்கள் ஏதேனும் விடுபட்டு போய் இருந்தால் நியாபகப்படுத்துங்கள்.

இன்னும் நமக்கெல்லம் பேட், பேடு முதலிய அனைத்து விளையாட்டு உபரகணங்களையில் வாங்கி கொடுத்து நம்மை ஊக்குவித்த ராமனாதன் சார் மற்றும் கம்பெனியையும் மறக்க முடியாது.

இந்த கட்டுரையை திரு. இராமனாதன் ஐயா (ஜி.எம்) அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வழக்கம்போல படித்துவிட்டு அடுத்த சைட்டிற்கு போவதற்கு முன் உங்கள் இடுகைகளை இட்டுவிட்டு செல்லுங்கள். நன்றி.

Monday, November 22, 2010

படித்ததில் பிடித்தது - அம்மாவின் கைகள்

சில வருடங்களுக்கு முன்பு**, **வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின்
வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின்
புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று
நினைத்து**,**அதைப்பற்றிக்
கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது**,**அதேபோன்ற கைகளின்
புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.
*

*

**அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார்.
புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது**, **அது வயதான ஒரு பெண்ணின் கைகள்
என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள்
சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக
இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை**, **ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே
இருந்தது.**

**அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என்
அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின்
கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்**?" **என்று கேட்டேன்.**

"**அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின்
கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட**, **அந்தக் கைகளைக்
காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.**

**அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.
இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால்**, **இதே கை களால் வளர்க்கப்பட்டவன்
உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த
நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.**

**அப்பா பொறுப்பற்ற முறையில்**, **குடித்து**, **குடும்ப வருமானத்தை அழித்து**
32**வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று
பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக
வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது**,*
*பாத்திரம் கழுவுவது**, **துணி துவைப்பது**, **நாய்களைப் பராமரிப்பதுபோன்ற
வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும்
வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம்
செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.**

**இரவு வீடு திரும்பிய பிறகு**, **சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து
உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர்
இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள்
அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில்
யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
**

**அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம்**, **நம்பிக்கை
கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி
நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே
இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை
வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை
உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில்
மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.**

**ஆனால்**, **நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க
முடியாமல்**,**விடுவிடுவென
எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே
இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ**, **அணைத்துக்கொள்ளவோ இல்லை.
அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை.
வீட்டில் சாமி கும்பிடவோ**, **கோயிலுக்குப் போய் வழிபடவோ**, **அதிக ஈடுபாடு
காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும்
என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.**

**சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.
ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன்.
கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று
போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று
அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல
சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால்
திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா
கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது
என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து
சுற்றவும்**, **புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள்
சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான்
செய்திருக்கிறார்கள். ஆனால்**,**அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே
இல்லை.**

**கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து**, **நோயாளியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு
**, **ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன்
பிறகு**, **என்னைத்
திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி**, **ராணுவத்தில் வேலைக்குச்
சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே
வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும்**, **அம்மா ஒருபோதும்
எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும்
என்று நினைத்து**, **தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.**

**முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன்**, '**எனக்கு ஒரே ஒரு வாட்ச்
வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று
ஆசைப்பட்டேன். ஆனால்**, **அது நடக்கவே இல்லை. அதன் பிறகு**, **எனக்குள் இருந்த
கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே
எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை
அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச்
சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா**?' **என்று கேட்டார்.**

**அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல
அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய
ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா**, **நான் திருமணம் செய்து
டெல்லி**, **பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில்
எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நான் கூடவே இருந்தேன்.**

'**நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே
இல்லை**?' **என்று கேட்டேன். அம்மா**, '**அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன்
என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால்**, **அன்று நான் கோபப்பட்டு இருந்தால்**, *
*என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்**' **என்று சொல்லி**, **தன் கையை
என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.**

**அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது.
எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து
தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
பிறகு ஒருநாள்**, **எனது கேமராவை எடுத்து வந்து**, **புகைப்படம்
எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால்**, **இந்தக் கைகள் என்னை
வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக்
கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர**, **வேறு நான் என்ன
செய்துவிட முடியும்**?" **என்றார்.**

**ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு
வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை.
உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான்
இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும்**, **ஆதரவு தரவும்
**, **அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம்.
அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.**

**இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன்.
சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன்.
அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம்
அத்தனை கைகளையும் வணங்கி**, **தீராத நன்றி சொன்னது.**

'**கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு
சேர்ந்துகொள்ளத்தான்**' **என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம்
உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்**
?

**முடிவு நம்மிடமே இருக்கிறது!*



"Be Happy and Make Others Happy".

Thursday, November 18, 2010

List of RTO districts in Tamilnadu

TN-01 Chennai Central (Ayanavaram} [PIN Codes 600006,07,08,10,23,31,34,81,105]
TN-02 Chennai West (Anna Nagar) [PIN Codes 600029,30,40,49,101,102,106, Mugappair East & West]
TN-03 Chennai North East (Tondiarpet)
TN-04 Chennai East (Basin Bridge) [PIN Codes 600001,03,09,13,19,21,79,81,104,108,112]
TN-05 Chennai North (Vyasarpadi) [PIN Codes 600011,12,38,39,82,99,110,118]
TN-06 Chennai South East (Mandaveli)
TN-07 Chennai South (Thiruvanmiyur) [PIN Codes 600002 (except Anna Salai), 600004,05,18,20,22,25,28,36,42,85,86,90,96,113,28, Palavakkam, Kotivakkam]
TN-09 Chennai West (K.K. Nagar) [PIN Codes 600015,17,24,32,33,35,78,83,89,97,98]
TN-10 Chennai South West (Valasarawakkam) [PIN Codes 600026,87,89,92,93,94,111, Porur, Ramapuram]
TN-18 Red Hills, Chennai
TN-19 Chengalpattu
TN-20 Tiruvallur
TN-21 Kanchipuram
TN-22 Meenambakkam
TN-23 Vellore
TN-24 Krishnagiri
TN-25 Thiruvannamalai
TN-27 Salem Central
TN-28 Namakkal
TN-29 Dharmapuri
TN-30 Salem West
TN-31 Cuddalore
TN-32 VillupuramUlundurpet
TN-33 Erode
TN-34 Thiruchengode
TN-36 Gobichettipalayam
TN-37 Coimbatore South (Attupalam,Podanur,ukkadam,Kuniamuthur,)
TN-38 Coimbatore North([[Chinniampalayam,Kalapatti,, Peelamedu ,Nanjundapuram

Singanallur,Selvapuram,Chinniampalayam,Ramanathapuram,Race cource,Sulur west,Sitra(airport),Nellambur,Somanur,Irugur]])
TN-39 Tiruppur North
TN-40 Mettupalayam
TN-41 Pollachi
TN-42 Tiruppur South, Udumalpet
TN-43 Uthagamandalam, The Nilgiris
TN-45 Tiruchirapalli
TN-46 Perambalur
TN-47 Karur
TN-48 Sri Rangam (Tiruchirapalli)
TN-49 Thanjavur
TN-50 Mannargudi
TN-51 Nagapattinam
TN-52 Sankagiri
TN-54 Salem East
TN-55 Pudukottai
TN-56 Perundurai
TN-57 Dindigul
TN-58 Madurai South & Tirumangalam
TN-59 Madurai North
TN-60 Periyakulam (Theni)
TN-61 Ariyalur
TN-63 Sivagangai
TN-64 Madurai Central
TN-65 Ramanathapuram
TN-66 Coimbatore Central (R S puram,Gandipuram(Cross cut road,Dr.Najappaa road,Bharatiyar road,100 feet road),Flower market,saibaba colony,Sivananda Colony)
TN-67 Virudhunagar
TN-68 Kumbakonam
TN-69 Tuticorin
TN-70 Hosur
TN-72 Tirunelveli
TN-73 Ranipet (Vellore)
TN-74 Nagercoil
TN-75 Marthandam
TN-76 Tenkasi
TN-/N State Transport Undertakings
TN-/G State Government Vehicles

Sunday, November 14, 2010

மைனா விமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம். ஆனால் நல்ல படங்களுக்கே உண்டான சோகமான முடிவு. என்ன... நாம் முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

இதுவரை மனிதர்களின் காலடி கூட படாத இடங்களில் எல்லாம் கேமரா பயணப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யாருமே நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பனின் ஊர் போடி மெட்டு. அவனின் ஏரியாவில் இந்த படத்தின் கதை நடக்கிறது. கோவைக்காரர்களுக்கு சற்றிலும் குறையாத குசும்புக்காரர்கள் போடிக்காரர்கள். நையாண்டி அவர்களுக்கு கைவந்த கலை. இந்த படத்திலும் அவர்களது நையாண்டியை நன்கு ரசிக்கலாம். சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் இறுக்கமாக நகரும் கதையை சற்று இயல்பாக்குவதே இவர்கள்.

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், அருமையான நடிப்பால் நம்மை தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

இந்த மாதிரி படங்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவிடம் கொடுத்து விட வேண்டும். பின்னி பெடலெடுத்து விடுவார். இமானும் குறைச்சல் இல்லை. ஆனால் மேஸ்ட்ரோவின் கைவண்ணமே தனி. பாடல்கள் நன்கு படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம்.

எல்லாரும் பாக்கலாம்.

Monday, November 1, 2010

தீபாவளி வந்தாச்சுப்பா…

“தீபாவளி” இந்த வார்த்தையை கேட்டதும் உடம்பு சிலிர்த்தடங்குவது என்னால் மறக்க முடியவில்லை. கட்டுரை எழுதி நாளாகிவிட்டது. இந்த முறை எழுதிவிடுவது என்கிற முனைப்புடன் பொட்டியை தட்ட ஆரம்பித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பே சில்லு வண்டுகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊசிப்பட்டாசுகள் வெடிக்க ஆரம்பிக்கும்போதே தீபாவளி களை கட்டி விடுகிறது. குவாரி முருகன் டெக்ஸ்டைல்சும், மாஸ் டைலரும் பிஸி என சொல்வது மிக ஆச்சரியமாக நிகழும். நன்கு தைக்க தெரிந்த ஒரே டைலர் என்பதாலும் துபாயில் துணி தைத்தவர் என்பதாலும் அனேகமாக ஊரில் துணி எடுத்து தைக்கும் நபர்களின் ஒரே சாய்ஸ் அவர்தான். துணிக்கடையே இல்லை என்று ஒரு பேச்சு வந்துடக்கூடாதுன்னு நம்ம ஊர் மக்களையும் நம்பி ஒரு துணிக்கடை இருக்குன்னா அது நம்ம முருகன் கடைதான். (கடை பேர்ல ஒரு டவுட் இருக்கு. தெரிஞ்சவங்க கிளியர் பண்ணலாம்).

தீபாவளின்னாலே பட்டாசுதானே! முதலில் கவுண்டர் கடையில் லூஸுல விக்கும் பட்டாசுதான் சக்கை போடு போட ஆரம்பிக்கும். அப்புறம் ஒவ்வொரு கடை வாசலிலும் ஒரு கட்டிலை விரிச்சி பட்டாசு விற்கப்படும். டைலர் மாஸ் கூட பட்டாசு விற்றார். பின்னாளில்தான் எனக்கு தெரியும் பட்டாசு வியாபாரம் கொள்ளை லாபம் என்று. தீபாவளிக்கு முதல் நாள் அதிக பட்சம் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டு குஜிலியம்பாறை போய் ஒரு குரூப் பட்டாசு வாங்கும். அனேகமாக என் அண்ணா செட்டில் இருக்கும் அனைவரும் போய் வாங்கி வருவர். ஒரு கூடை நிறைய பட்டாசுடன் வீட்டுக்கு வந்ததும் கண்கள் விரிய அதை எடுத்து தொட்டுப்பார்த்துக்கொள்வேன். காலைலதான் வெடிக்கனும்னு அப்பா சொன்னதும் சிறு முகவாட்டத்துடன் இருந்தாலும் எப்படா விடியும்னு இருப்பேன். எதிர்வீடு ஸ்ரீராம் & கோ ஏற்கனவே 200 ரூபாய்க்கும் மேல் வாங்கிய பட்டாசுடன் காத்திருப்பார்கள். நாங்கள் எங்கள் வீட்டில் எழுந்து கங்கா ஸ்னானம் முடித்து சாமி கும்பிட்டுவிட்டு வெடிக்க வருவதற்குள் ஒரு ரவுண்டு வெடித்து முடித்து காபி குடித்துக்கொண்டு இருப்பர்கள் செல்லப்பா மாமா வீட்டில். அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் பட்டாசு குப்பையை எந்த வீடும் மிஞ்சியதில்லை.

ஸ்ரீராம் வீட்டிற்கு ஆப்பக்கூடலில் இருந்து வரும் சொந்தக்காரர்களான ராஜூ, முகுந்த், (இன்னொருத்தர் பேர் மறந்து போச்சே) எல்லாரும் 7 மணி அளவில் பிள்ளையார் கோவிலுக்கு போய் கும்பிட்டுவிட்டு அங்கும் வெடி வெடித்து விட்டு வருவர். அப்பொழுதெல்லாம் சன் டிவி இல்லை என்பதால் டிடி மட்டுமே பொழுதை போக்கி வந்தது. அதிக பட்சம் ஒரு பட்டிமன்றமும், ஒரு சினிமாவும் போட்டுவிட்டு கல்லா கட்டி விடுவர். அதனால் நமக்கு நிறையவே நேரம் இருந்தது. 10 மணி அளவில் அனேகமாக எல்லா பட்டாசும் காலியாகி இருக்கும். பிஜிலி வெடி, ஓலை பட்டாசு மட்டும் கையில் இருக்கும். டொப்பு டொப்புன்னு அதை வெடிக்கிறது தான் ரொம்ப நேரம் நடக்கும். ரயில் வெடி, டபுள் ஷாட், ட்ரிபிள் ஷாட், சரவெடி, டாம்டாம், லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு இப்படி ரக பட்டாசுகளே அன்னாளில் பிரசித்தம். இன்று இருப்பது போல வானத்தில் ஜாலங்கள் காட்டும் மத்தாப்பு வகை பட்டாசுகள் அபூர்வம். இதில் குண்டு செந்தில் ஒரு முறை வெடித்த புல்லாங்குழல் வெடி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. சுந்தரம் அண்ணா மட்டும் ஒரே ஒரு 1000வாலாவை வெடித்து விட்டு வாசலை குப்பையாக்கிவிடுவார். வெங்காய வெடிகூட ஒரு சில முறை வெடித்து பார்த்தது உண்டு. ஆனால் இது மிக டேஞ்சரான வெடி என்பதால் அரசாங்கம் விற்க தடை விதித்து விட்டது.

எல்லா பட்டாசும் காலியான பின்பு எல்லோர் வீட்டு வாசலில் இருக்கும் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து வந்து ஒரு பேப்பரில் மருந்தினை கொட்டி நாலு மூலையிலும் நெருப்பு வைத்து அது “புஸ்”னு வருவதை கைகொட்டி ரசித்தது ஒரு காலம். ஒரு துப்பாக்கியும் சில பொட்டு வெடிகளும் இருந்து விட்டால் மனசுக்குள் ஜெய்சங்கர்னு எல்லாருக்கும் நினைப்பு வந்துடும்.

தீபாவளி அன்று சில சமயங்களில் மழை வந்து கெடுத்து விடும். ஒரு வயசு வந்ததும் தீபாவளி அன்று கிரிக்கெட் பிரபலமானது. அது இல்லை எனில் எங்காவது ட்ரிப் போவது (பொன்னனியாறு டேம், அழகாபுரி டேம்) என்.
தீபாவளி அன்று கறிக்கடைகளில் பெரியவர்கள் கூட்டம் அலைமோதும். அன்று அனேகர் வீட்டில் கறிக்குழம்புதான். இன்னும் 4 நாளில் தீபாவளி வரப்போகிறது. இதுவரைக்கும் ஒரு பட்டாசு கூட வெடித்து நான் பார்க்கவில்லை (சத்தம் கேட்கவும் இல்லை). தீபாவளி அன்று கூட காலையில் வெள்ளென எழுந்து மேற்சொன்ன கலாச்சார வடிவில் இங்கு யாருமே கொண்டாடுவதில்லை. தீபாவளி அன்று இரவுதான் வான வேடிக்கைகளை பார்க்க இயலும். டிவி அனேகரது பொழுதுகளை தின்றுவிட்டது. நமது அற்புதமான நேரத்தை கபளீகரம் செய்தது டிவிதான்.

இன்று கண்ணுக்கு அழகாக எவ்வளவு காஸ்ட்லியான வெடிகள் வெடிக்கப்பட்டும் அதை பார்க்கும் எனக்கு சிறு வயதில் டாம் டாம் வெடித்ததின் சிலிர்ப்பு ஏனோ வரவில்லை.

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.