“தீபாவளி” இந்த வார்த்தையை கேட்டதும் உடம்பு சிலிர்த்தடங்குவது என்னால் மறக்க முடியவில்லை. கட்டுரை எழுதி நாளாகிவிட்டது. இந்த முறை எழுதிவிடுவது என்கிற முனைப்புடன் பொட்டியை தட்ட ஆரம்பித்தேன்.
ஒரு வாரத்திற்கு முன்பே சில்லு வண்டுகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊசிப்பட்டாசுகள் வெடிக்க ஆரம்பிக்கும்போதே தீபாவளி களை கட்டி விடுகிறது. குவாரி முருகன் டெக்ஸ்டைல்சும், மாஸ் டைலரும் பிஸி என சொல்வது மிக ஆச்சரியமாக நிகழும். நன்கு தைக்க தெரிந்த ஒரே டைலர் என்பதாலும் துபாயில் துணி தைத்தவர் என்பதாலும் அனேகமாக ஊரில் துணி எடுத்து தைக்கும் நபர்களின் ஒரே சாய்ஸ் அவர்தான். துணிக்கடையே இல்லை என்று ஒரு பேச்சு வந்துடக்கூடாதுன்னு நம்ம ஊர் மக்களையும் நம்பி ஒரு துணிக்கடை இருக்குன்னா அது நம்ம முருகன் கடைதான். (கடை பேர்ல ஒரு டவுட் இருக்கு. தெரிஞ்சவங்க கிளியர் பண்ணலாம்).
தீபாவளின்னாலே பட்டாசுதானே! முதலில் கவுண்டர் கடையில் லூஸுல விக்கும் பட்டாசுதான் சக்கை போடு போட ஆரம்பிக்கும். அப்புறம் ஒவ்வொரு கடை வாசலிலும் ஒரு கட்டிலை விரிச்சி பட்டாசு விற்கப்படும். டைலர் மாஸ் கூட பட்டாசு விற்றார். பின்னாளில்தான் எனக்கு தெரியும் பட்டாசு வியாபாரம் கொள்ளை லாபம் என்று. தீபாவளிக்கு முதல் நாள் அதிக பட்சம் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டு குஜிலியம்பாறை போய் ஒரு குரூப் பட்டாசு வாங்கும். அனேகமாக என் அண்ணா செட்டில் இருக்கும் அனைவரும் போய் வாங்கி வருவர். ஒரு கூடை நிறைய பட்டாசுடன் வீட்டுக்கு வந்ததும் கண்கள் விரிய அதை எடுத்து தொட்டுப்பார்த்துக்கொள்வேன். காலைலதான் வெடிக்கனும்னு அப்பா சொன்னதும் சிறு முகவாட்டத்துடன் இருந்தாலும் எப்படா விடியும்னு இருப்பேன். எதிர்வீடு ஸ்ரீராம் & கோ ஏற்கனவே 200 ரூபாய்க்கும் மேல் வாங்கிய பட்டாசுடன் காத்திருப்பார்கள். நாங்கள் எங்கள் வீட்டில் எழுந்து கங்கா ஸ்னானம் முடித்து சாமி கும்பிட்டுவிட்டு வெடிக்க வருவதற்குள் ஒரு ரவுண்டு வெடித்து முடித்து காபி குடித்துக்கொண்டு இருப்பர்கள் செல்லப்பா மாமா வீட்டில். அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் பட்டாசு குப்பையை எந்த வீடும் மிஞ்சியதில்லை.
ஸ்ரீராம் வீட்டிற்கு ஆப்பக்கூடலில் இருந்து வரும் சொந்தக்காரர்களான ராஜூ, முகுந்த், (இன்னொருத்தர் பேர் மறந்து போச்சே) எல்லாரும் 7 மணி அளவில் பிள்ளையார் கோவிலுக்கு போய் கும்பிட்டுவிட்டு அங்கும் வெடி வெடித்து விட்டு வருவர். அப்பொழுதெல்லாம் சன் டிவி இல்லை என்பதால் டிடி மட்டுமே பொழுதை போக்கி வந்தது. அதிக பட்சம் ஒரு பட்டிமன்றமும், ஒரு சினிமாவும் போட்டுவிட்டு கல்லா கட்டி விடுவர். அதனால் நமக்கு நிறையவே நேரம் இருந்தது. 10 மணி அளவில் அனேகமாக எல்லா பட்டாசும் காலியாகி இருக்கும். பிஜிலி வெடி, ஓலை பட்டாசு மட்டும் கையில் இருக்கும். டொப்பு டொப்புன்னு அதை வெடிக்கிறது தான் ரொம்ப நேரம் நடக்கும். ரயில் வெடி, டபுள் ஷாட், ட்ரிபிள் ஷாட், சரவெடி, டாம்டாம், லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு இப்படி ரக பட்டாசுகளே அன்னாளில் பிரசித்தம். இன்று இருப்பது போல வானத்தில் ஜாலங்கள் காட்டும் மத்தாப்பு வகை பட்டாசுகள் அபூர்வம். இதில் குண்டு செந்தில் ஒரு முறை வெடித்த புல்லாங்குழல் வெடி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. சுந்தரம் அண்ணா மட்டும் ஒரே ஒரு 1000வாலாவை வெடித்து விட்டு வாசலை குப்பையாக்கிவிடுவார். வெங்காய வெடிகூட ஒரு சில முறை வெடித்து பார்த்தது உண்டு. ஆனால் இது மிக டேஞ்சரான வெடி என்பதால் அரசாங்கம் விற்க தடை விதித்து விட்டது.
எல்லா பட்டாசும் காலியான பின்பு எல்லோர் வீட்டு வாசலில் இருக்கும் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து வந்து ஒரு பேப்பரில் மருந்தினை கொட்டி நாலு மூலையிலும் நெருப்பு வைத்து அது “புஸ்”னு வருவதை கைகொட்டி ரசித்தது ஒரு காலம். ஒரு துப்பாக்கியும் சில பொட்டு வெடிகளும் இருந்து விட்டால் மனசுக்குள் ஜெய்சங்கர்னு எல்லாருக்கும் நினைப்பு வந்துடும்.
தீபாவளி அன்று சில சமயங்களில் மழை வந்து கெடுத்து விடும். ஒரு வயசு வந்ததும் தீபாவளி அன்று கிரிக்கெட் பிரபலமானது. அது இல்லை எனில் எங்காவது ட்ரிப் போவது (பொன்னனியாறு டேம், அழகாபுரி டேம்) என்.
தீபாவளி அன்று கறிக்கடைகளில் பெரியவர்கள் கூட்டம் அலைமோதும். அன்று அனேகர் வீட்டில் கறிக்குழம்புதான். இன்னும் 4 நாளில் தீபாவளி வரப்போகிறது. இதுவரைக்கும் ஒரு பட்டாசு கூட வெடித்து நான் பார்க்கவில்லை (சத்தம் கேட்கவும் இல்லை). தீபாவளி அன்று கூட காலையில் வெள்ளென எழுந்து மேற்சொன்ன கலாச்சார வடிவில் இங்கு யாருமே கொண்டாடுவதில்லை. தீபாவளி அன்று இரவுதான் வான வேடிக்கைகளை பார்க்க இயலும். டிவி அனேகரது பொழுதுகளை தின்றுவிட்டது. நமது அற்புதமான நேரத்தை கபளீகரம் செய்தது டிவிதான்.
இன்று கண்ணுக்கு அழகாக எவ்வளவு காஸ்ட்லியான வெடிகள் வெடிக்கப்பட்டும் அதை பார்க்கும் எனக்கு சிறு வயதில் டாம் டாம் வெடித்ததின் சிலிர்ப்பு ஏனோ வரவில்லை.
அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Thanks Karthik, Advance diwali wishes... convey my wishes to every one
ReplyDeleteவாடா புது மாப்பிள்ளை... எப்படி இருக்கு திருமண வாழ்க்கை..? தலை தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்? வீட்டம்மாவை கேட்டதாக சொல்லவும்
ReplyDeleteHi Karthi!...
ReplyDeletehappy deepavali to you..good to see your messages..thanks to keep this blog ALIVE..
will call you on deepavali day..
hi sriram..good to see you here..
happy "thala" deepavali to you 2..
வாடா சரவணா.. என்ன இந்த பக்கம் ஆளையே காணோம்?
ReplyDeleteஎல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
thank buddy....
ReplyDeleteI can see some one from Bellevue, Washington (Live Traffic Feed), Is there any of our friend there?
happy diwali to everyone...!
ReplyDeleteKarthi talks abt his street diwali hero!!
my street diwali hero Mr Murugesan.. early morning 5, he start to blast.. then evening fireworks... we juz see and enjoy...
hi sriram that person is my anna gandhi who is from seattle.
ReplyDeletehi annal.. murugesan always crazy... ;-)