Thursday, July 23, 2009

கில்லி ம‌ச்சி in டெல்லி

Hai saro,
 
Pl. find the attached Delhi trip photos for publish.....
 
Bye...
 
CRK
 
 


Tuesday, July 21, 2009

என்ன‌மா think ப‌ண்றாங்க‌யா...

கேள்வியும் நானே, பதிலும் நானே
---------------------------------
1. விஜய் அரசியல் பிரவேசம் பற்றி?
உள்ளூருல ஓணான் பிடிக்க முடியலையாம்.. இதுல வெளியூருல போய் டைனோசர் பிடிப்போம்ங்கற கதையா இருக்கு.. மொதல்ல ஐயாவ சினிமால ஒழுங்கா நடிக்க சொல்லுங்க...

2. குளிர் 100 பார்த்தாச்சா??
வெளிய வெக்கைய்யா இருக்குன்னு தியேட்டருக்கு போனா, உள்ள படம் செம மொக்கயா இருக்கு.. DVD யில் கூட பார்க்க முடியாத அழியாக்காவியம்

3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்

4. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுமாமே??
அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...

5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன்

6. விஜயகாந்த்தை எதிர்த்து வடிவேலு போட்டி போட போறேன்னு சொன்னாரே??
அட போங்க நீங்க வேற.. அவரு ஷூட்டிங் நினச்சி பேசுன வசனத்த இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?? சின்னப்புள்ள தனமா இல்ல?? ராஸ்கல்...

7. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல வீஜய் நடிச்சா நல்லா இருக்கும்ல??
ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், வீஜய் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு??

8.ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா??
சாகாம இருக்கணும்...

9.வாழ்க்கை பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்

==========================***********************=======================

மொக்கைச்சாமி:
--------------
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

===============================**************===============================

Sunday, July 5, 2009

நினைவுகள்.. கனவுகள்

நண்பர்களே!
நமது குவாரியில் எடுக்கப்பட்ட சில படங்களை உங்கள் பார்வையில் கொண்டு வருகிறேன். பார்த்து பரவசப்பட வேண்டியது மட்டுமல்ல.. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமும் கூட..





நமது இராஜு மேனேஜர் மற்றும் குகன் ஆஸ்பிடல் இராஜேந்திரன், விவிஆர் டாக்டர், மற்றும் நமது கம்போண்டர் நரசிம்மன்னுடன் எனது அப்பா...



நமது தசரதராமன் மாமாவுடன் பழைய குவாரி ஆபிஸர்களுடன் எனது அப்பா...





நமது முருகன் மாமாவுடன் எனது அப்பா...




மறக்க முடியாத நமது குவாரி குரூப்... அனேகமாக என்னிடம் மட்டுமே இருந்த இந்த போட்டோ யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. சுப்ரமணி கல்யாணத்தின்போது எடுக்கப்பட்டது. தேதி தவறாக பதிந்துள்ளது. எடுக்கப்பட்ட ஆண்டு 2004.



எனது அண்ணா காந்தி.. பைராம்கான்.. தனுஷ்கோடி.. ஆறுமுகம் (சுப்புரத்தினம் பையன்), வீரப்பன்.. SCHOOL DRAMA வில்... எடுக்கப்பட்ட ஆண்டு 1988


SECURITY மணி மற்றும் மாசியுடன் எனது அப்பா...




சுதர்சன், ஸ்ரீராம், ஜாய், சுமன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி (பிரசாத்) நான் மற்றும் நாடக குழுவினர்.. கதாகாலட்சேபம் (ஆண்டு 1990)








கதிரவன் மாமா பொண்ணு சுதாவுடன் எனது அம்மா அப்பா...

என்ன நேயர்களே!! கனவு மலர்ந்ததா?