Saturday, November 28, 2009

வாசுகி முருகேசன் விபத்தில் மரணம்

அன்பு நண்பர்களே!

நேற்று கரூர் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ வும் இன்னாள் தி.மு.க மாவட்ட செயலாளருமான திருமதி. வாசுகி முருகேசன் அவர்கள் பல்லடம் அருகே சூலூரில் ஒரு வாகன விபத்தில் மரணமடைந்தார். அன்னாரது மறைவை ஒட்டி துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தி.மு.க நிர்வாகிகள் கரூர் வந்துள்ளனர். மாவட்ட தலை நகர் முழுவது அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன (உணவகங்கள் உள்பட). கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடக்காது என தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் ஒரே பெண் மாவட்ட செயலாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாராது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

2 comments:

  1. கார்த்திகேயன்November 28, 2009 at 2:20 PM

    அன்பழகன், ஸ்டாலின், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், வெள்ளகோவில் சுவாமினாதன், ஐ.பெரியசாமி, நெப்போலியன், பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்து தி.மு.க பிரமுகர்களும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

    ReplyDelete
  2. yeah.. even i had seen in TV news..Stalin was crying on her funeral..

    But i dont know who is she actually..but understand that she got a good political background....

    ReplyDelete