Saturday, May 16, 2009

தேர்தல் களம்

அனைவருக்கும் வணக்கம்..

நமது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கரூர் தொகுதி அதிமுக விற்கு சாதகமாக முடிந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேசிபி 49000 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். குறிப்பாக மருங்காபுரி மற்றும் கடவூர் சட்டமன்ற தொகுதிகளில் விஜயகாந்தின் தேமுதிக குறிப்பிடத்தக்க ஓட்டுக்களை பிரித்ததால் இந்த விளைவு. வைகோ போட்டியிட்ட விருது நகர் தொகுதியில் தேமுதிக 125000 வாக்குகளை பிரித்துள்ளது. அங்கு வைகோ தோல்வி அடைந்துள்ளார். காங்கிரசின் மாணிக்க தாகூர் வெற்றி.

அதைவிட மதுரையில் விஜயகாந்த் பெற்ற ஓட்டுக்கள் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. தமிழக அளவில் தேமுதிக ஒவ்வொரு தொகுதியிலும் தலா 40000 முதல் 50000 வரை ஓட்டுக்கள் பெற்று இருக்கிறது. பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியே..

நாடாளும் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளன. காங்கிரஸ் மிக குறைந்த ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரம் வெறும் 3000 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். திருச்சியில் அதிமுக தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸை வெறும் 4000 வாக்குகள் வித்யாசத்தில் வென்று இருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை தவிர அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றி பெரும்பாண்மையை நிருபித்துள்ளது. பெரம்பலூரில் நெப்போலியனும், நீலகிரியில் இராசாவும், இராமநாதபுரத்தில் ரித்தீஷும் வெற்றி பெற்று இருக்கின்றனர். ஈரோட்டில் மதிமுக வெற்றி பெற்றுள்ளது. தென் சென்னை, பொள்ளாச்சி, கரூர், திருச்சி, திருப்பூர், சேலத்தில் அதிமுக வென்றுள்ளது. தங்கபாலு, இளங்கோவன், மணிசங்கர் அய்யர், சாருபாலா தொண்டைமான் போன்ற காங்கிரஸ் அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்று இருக்கிறார்.

மு.க.அழகிரி மதுரையில் 140000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். திண்டுக்கல்லில் சித்தன் (காங்) வெற்றி. தேனியில் ஆரூண் (காங்) வெற்றி. கன்யாகுமரியில் ஹெலன் டேவிட்சன் (திமுக) வெற்றி. ஆரணியில் கிருஷ்ணசாமி (காங்) வெற்றி. இராமநாதபுரத்தில் திரு நாவுக்கரசர், கன்யாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன் இருவரும் பி.ஜே.பி யில் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் பொன்.இராதாகிருஷ்ணன் மதியம் வரை முன்னனியில் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருவர் போட்டியிட்டனர். அதில் சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் ஒரு இலட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். விழுப்புரத்தில் அந்த கட்சி அதிமுகவிடம் தோல்வி அடைந்துள்ளது.

அனைத்து தொகுதிகளின் அடிப்படையில் தேமுதிக 15% ஓட்டுக்கள் பெற்று இருக்கிறது. இது கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 3% அதிகம். சரத்குமார் கட்சி, கார்த்திக் கட்சி டெபாசிட் பெறவில்லை. கொங்கு பேரவையும் டெபாசிட் பெறவில்லை. புதிய தமிழகம், டி.இராஜேந்தரின் இலட்சிய திமுகவும் தோல்வி அடைந்துள்ளது.

வாழ்க ஜன(பண) நாயகம்.

8 comments:

 1. i also able to watch "sun news live". i expect ADMK party will get 10.. 12 got..but i didnot expect KCP like this!!!! Anyway All over India ,, Good to Congress...

  ReplyDelete
 2. very good information karthi...so again SINGH IS KINGH back to the power!!!!
  DMK again back to the pavillion!!

  ReplyDelete
 3. இந்திய ராணுவத்தோடு இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் விடுதலை புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டதாக தகவல் அறிவோம்..தமிழினமும் சேர்ந்து தான் அழிந்து விட்டன..நமது காங்கிரஸ் உதவியோடு தான் நடந்துள்ளது,, ஆனால் அதற்கு துணைபோனது ஒரு தமிழன்..எத்தனை தமிழன் இறந்தாலும், தமது குடும்பத்தில் அனைவரும் பதவி சுகம் அனுபவித்தாக வேண்டும் என காய்களை லாவகமாக நகர்த்துகிற சுயநலவாதி... கருணாநிதியை தமிழனின் வரலாறு என்றுமே மன்னிக்காது...

  ReplyDelete
 4. Friends.. my mother reached sattle safely today morning. She will be there upto august.

  ReplyDelete
 5. Hi saravanan,

  WISH U MANY MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY. I WISH U WILL GET IT ALL IN YOUR LIFE WHAT YOU EXPECT.

  SORRY YA. I HV NO WAY TO CONVEY U EARLY. NOW ONLY I GOT CHANCE.

  ReplyDelete
 6. Hi karthi,

  very happy. How is Priya?

  ReplyDelete
 7. Hi Annal,

  How are you? yes ur right. Alagiri is one of the biggest rowdi in Madurai. But he won the election. (1,00,000 votes difference).

  Nallavangalukku kalam illai.

  ReplyDelete
 8. guys..i am back to dubai..
  karthi..good to hear that your mom reached US safely..hope she will have nice time there..

  yes anal, very sad to hear the end part of LTTE....

  dhamaya, good to see you here..thanks for your wishes...

  ReplyDelete