ஏதோ தெலுங்கு படம்னு நெனச்சுதான் உள்ளே போனேன். டைட்டில் பாத்தப்பவே விதயாசம் தெரிஞ்சுபோச்சு..இது விவகாரமான படம்தான்னு. நடிச்சிருந்த பசங்கள்ல யாருக்கும் 20 வயசு தாண்டாது. எங்கதான் புடுச்சாங்கன்னு தெரில.. அடேங்கப்பா ஒவ்வ்ருத்தன் மூஞ்சிலயும் கொலவெறிதான். டப்பான்னு ஒரு கேரக்டர்... படத்துல இவன் அராத்துதான் ஜாஸ்தி. ஆளுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்ல.. அப்புறம் வசனம் நம்ம சிங்க்பபுலி. மாயாண்டி குடும்பத்தார் படத்துல வந்த லூசுதான். பின்னிட்டாப்ல. மீ, மை ப்ரெண்ட்.. ஒரு டீம் வொர்க்..ன்னு கொலை செய்யறதை என்னமோ பி.பி.ஓ ஆபிசராட்டம் சொல்லுவான் பாரு.. தியேட்டரே அதுருல்ல.
தேவகோட்டைல ஆரம்பிச்சு ரேணிகுண்டால முடியுது படம். என்னதான் கேமரா யூஸ் பண்ணி இருப்பாங்கன்னு தெரியல.. நல்ல விசுவல் வந்து இருக்கு. பிண்ணனி மிரட்டுது. “மாட்டுத்தாவணி” பாட்டு மட்டும் முணுமுணுக்கலாம். மத்த பாட்டு மனசில நிக்கல. எல்லாருமே புதுமுகம் ஹீரோயின் உள்பட. ஆனால் எல்லாரும் படத்துல பட்டய கிளப்பிட்டாய்ங்க.. ஹீரோயினுக்கு பார்ட் ரொம்ப கம்மிதான். பொண்ணுக்கு 13 வயசிருந்தாலே அதிகம்தான். விட்டா 10 வயசு பொண்ணைக்கூட ஹீரோயினா ஆக்கிருவாங்க போல..
எல்லாரும் ஒரு தடவை போய் பாக்க வேண்டிய படம்தான். என்ன ஒன்னு.. கொலை செய்யும் போதெல்லாம் தியேட்டர்ல வர்ற விசில் சத்தத்தை பார்த்தா எல்லாருக்குள்ளும் ஒரு கிரிமினல் ஒளிஞ்சு இருக்கான். அது மட்டும் கிளியரா தெரியுது.
செலவே இல்லாமல் ஒரு செம ஹிட் படம்.
Hi karthi,
ReplyDeletegood review about this movie...but so far i have not seen the movie..may be this week end will try to see...