Wednesday, February 23, 2011

இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.

ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம்
கொடுக்கும்.
முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால்
வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.

நீண்ட மோதிர விரல் கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆலீவ் எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு ஏற்படுவதைத் தடுத்து
நிறுத்துமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை.
இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை
பயன்படுத்துவது தான் காரணமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை
உடலெங்கும் செலுத்துகிறது.

1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில்
செய்யப்பட்டது.

பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.
காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை, ஞாபகம்,
நினைவு, மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமை தான்
ஏற்படுகிறது.

சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்த நாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட
மைதானத்தை விட பெரியதாகும்.

ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
உலகம் முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5
கோடியாகும்.

வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும்
நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.

2 comments:

  1. good info..
    //பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.//
    but according to tamil film industry boys heart beats faster whenever he sees figures...why is it so!!

    he he hee....

    ReplyDelete
  2. கார்த்திகேயன்February 23, 2011 at 4:56 PM

    அது மச்சி.. ஒரு தடவை தான் துடிக்கும். கல்யாணம் பண்ணியாச்சுன்னு வை.. துடிப்பெல்லாம் அடங்கி விடும்.

    ReplyDelete