Sunday, April 10, 2011

பொன்னர் சங்கர் - விமர்சனம்





கலைஞர் கைவண்ணத்தில் ஏற்கனவே புத்தமாக வந்து விட்ட அண்ணமார்சாமி வரலாறு கதைதான் இந்த பொன்னர்-சங்கர்.

அந்த புத்தகத்தை படித்த மக்களுக்கும் ரெகுலராக வீரப்பூர் திருவிழாவிற்கு சென்று வருபவர்களும் இந்த கதை சற்று ஏமாற்றம் தரலாம். ஏனென்றால் இந்த கதை சினிமாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்ட விதம்தான்.

கதைப்படி கிளைமாக்ஸில் சங்கர் இறந்துவிட தங்கை அருக்காணித்தங்கம் தீர்த்தம் தெளிவித்து உயிர்ப்பிப்பதுதான் இவ்வளவு நாள் இந்த கதை உயிரோட்டமாக இருக்க காரணம். ஆனால் அந்த சம்பவமே இந்த படத்தில் இல்லை. முக்கியமாக அருக்காணித்தங்கத்தின் கதைக்களமே மிஸ்ஸிங்.

பாத்திரத்தேர்வில் பார்த்தால் ப்ரஷாந்திற்கு அடுத்தபடியாக கதையை உணர்ந்து நடித்தவர்களில் ஜெயராமிற்கே (மசச்சாமி) என் மார்க். மற்றவர்கள் எல்லோரும் நாடக வடிவில் நடித்திருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் தடுமாறுகிறது. ஜெயராமை தனியறையில் அடைத்து வைக்க சொல்லும் விஜயகுமார் சொல்லும் டயலாக்கில் “காட்டு பங்களா” என்று வருகிறது. பங்களா என்பது ஆங்கிலம் அல்லவா? சோழர் காலத்து கதையில் ஆங்கிலம் எங்கிருந்து வந்தது?

முக்கியமான வில்லன் பாத்திரமான மாந்தியப்பன் வேடத்தில் ப்ரகாஷ்ராஜ். இந்த மாதிரி கேரக்டர் கிடைத்தால் அல்வா சாப்பிடுவது போல நடிக்கும் இவர் எனோ காய்ச்சலில் இருப்பவர் போலவே முகத்தினை வைத்துக்கொண்டு டயலாக் பேசுகிறார். குஷ்புவின் நடிப்பு பரவாயில்லை. ப்ரசாந்தின் கட்டுமஸ்தான உடல்வாகு அற்புதமாக பொருந்திப்போகிறது. நீண்ட இடைவெளிக்குபின் நடித்திருக்கிறார். பின்னி எடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். முழு ஆளுமையும் இவரே. தலயூர்காளியாக நெப்போலியனும் சோழ மன்னராக சில நிமிடங்கள் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். அனேகமாக டெல்லி கண்ஷ் டயலாக்கே பேசாமல் ஒரு காட்சியில் மட்டும் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். நிறைய பேரின் திறமைகள் இப்படி வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணம் போஸ் வெங்கட், ஸ்னேகா, சீதா, பொன்னம்பலம், ரியாஸ்கான் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ராஜ்கிரணும் நாசரும் சிறப்பாக நடித்திருந்தாலும் சங்கரை “ஷங்க்கர்” என்று சொல்லும் போது தியேட்டரில் நிறைய பேர் தலை சொறிவது நன்கு தெரிகிறது. பொன் வண்ணனும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இயக்கம் தியாகராஜன்.

இசை இளையராஜா. இசையமைப்பு பரவாயில்லை.

ஆள்மயக்கிப்பாறை, தங்கக்கிளி, பன்றிவேட்டை எல்லாமே மிஸ்ஸிங். மேலும் இந்த கதையில் வரும் எல்லோருக்கும் மிகப்பெரிய அரண்மனைகள் இருப்பது போலவும் ஆயிரக்கணக்கில் படைபலம் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அப்படி அரண்மனைகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.. ஆரிச்சம்பட்டி கோட்டையை தவிர. மேலும் மணப்பாறையை ஒட்டியுள்ள வீரப்பூர் தான் கதைக்களம். ஆனால் சினிமாவில் ஒரிஜினல் இடத்தில் படப்பதிவே நடத்தப்படவில்லை. எனவே கதை களத்துடன் ஒட்டவே இல்லை. காட்சியமைப்பும் படு பிரமாண்டமாக உள்ளது. கிராபிக்ஸில் கலக்கி இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் வீடியோ கேம்ஸ் பார்த்த மாதிரி இருக்கிறது.

ப்ளஸ் : ப்ரஷாந்த், ஜெயராம் நடிப்பு, போர் காட்சியமைப்புகள், பின்னனி இசை
மைனஸ் : டூயட் பாடல்கள், அதீத கவர்ச்சி, அளவிற்கு மீறிய பிரம்மாண்டம், அருக்கணித்தங்கமான ஸ்னேகாவின் கதையமைப்பு, நகைச்சுவை காட்சிகள் இல்லாமை

பொன்னர் - சங்கர் = கிராபிக்ஸ் கலக்கல்

6 comments:

  1. i was having a huge expectations on this film..but based on your comment i think its not well executed...
    i guess we can see for one time..

    ReplyDelete
  2. சரவணா படம் நல்லாத்தான் எடுத்திருக்காங்க. ஒரிஜினல் கதை தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம் வரலாம். கதை தெரியாத மக்களுக்கு ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கும். ஒரு தடவை தாராளமாக பார்க்கலாம். காமெடி என்பது கிடையாது. சீரியஸ் கதை.

    அப்புறம் எலெக்சன் முடிஞ்சிடுச்சி. தமிழகம் முழுவதும் 80% வாக்கு பதிவாகி இருக்கிறது. கரூரில்தான் அதிகம் 86%. வாழ்க ஜனநாயகம். ரிசல்ட்டுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Good News... Arul murugan blessed with baby boy last week. I got the call yesterday from him.

    ReplyDelete
  4. wow...good news..congratulations Arulmurugan..

    ReplyDelete
  5. கார்த்திகேயன்April 23, 2011 at 8:11 AM

    சரவணா.. நமது பதிவில் “அண்ணமார்சாமி கதை - பொன்னர் சங்கர்” பதிவு வெகு நபர்களால் தினமும் படிக்கப்பட்டு வருகிறது. கவனித்தாயா?

    எனவே இன்னும் கூட அதை பற்றி விளக்கமாக ஒரு பதிவினை இடலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. ohh yea..i have also just noticed..everybody seems have intrested to read this... you try to write more abt this..it would be sure intresting to read..

    Then whats the news there..!

    ReplyDelete