Monday, September 19, 2011
இந்தியா உண்மையில் சாம்பியன்தானா?
இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து அடிவாங்கி சொதப்பி சுண்ணாம்பாகி இந்தியா வந்து சேர்ந்தும் விட்ட நிலையில் இந்த கேள்வி அவசியமா?
அவசியம்தான். பிள்ளைப்பூச்சியை அதுவும் சொந்த மண்ணில் அடித்துவிட்டு நான் பெரிய ஆளுன்னு சொல்லிக்கிறதுல பெருமை இல்லை. சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர்கான், ஹர்பஜன் என இந்த அறுவர் படை ஒன்றாக சேர்ந்து ஒரு போட்டியிலேனும் ஆடி இருந்தால் தெரிந்து இருக்கும் சேதி. நம் துரதிர்ஷ்டம் சிங்கம் பசுக்கூட்டத்தை தனித்தனியா சாப்பிட்டதை போல ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக போராடி காயப்பட்டு திரும்பியும் விட்டனர். மிச்சம் இருந்த கோலி, தோனி, ரெய்னா மூவரும் தங்கள் பங்கிற்கு போராடி தோற்றனர். அணியின் சுவர் டிராவிட் மட்டும் வழக்கம்போல் சிறப்பாக ஆடி கேவலமான தோல்வியை கவுரவமாக்கினார்.
டெல்லிப்புயல் சேவாக்கின் ஓபனிங் இல்லை எனில் அணியின் நிலமை நடனம் ஆடுவது கண் கூடாக தெரிகிறது. ரஹானேவை ஆகா ஓகோ என சொன்னவர்கள் அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது லீக் மேட்ச் கூட ஆட தெரியாவர் என சொல்ல தோன்றியது. அனைத்து ஷாட்களும் எட்ஜ் வாங்கியது. சும்மா பேட்டை சுழற்ற எங்கெங்கோ பட்டு அதிர்ஷ்டத்தில் பவுண்டரியை தொட்டதை விபரமறிந்தவர்களின் கணிகளில் தெரியும். பார்த்தீவின் ஆட்டத்தில் இருந்த நேர்த்தி ரஹானேவிடம் சுத்தமாக இல்லை. கிடைத்த வாய்ப்பில் சொதப்பினார். ஜெயிக்க வாய்ப்பிருந்த ஆட்டத்தில் எல்லாம் வருண பகவான் ஆடி இங்கிலாந்தினை காப்பாற்றினார். கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் கோலியும் தோனியும் எங்கள் அணி சாம்பியன்தான் என நிரூபிப்பது போல் ஆடினர். தொடர் வெற்றிகள் கண்டபொழுது நாம் ஆடிய ஆட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தோல்விகள் நம்மை திருத்திக்கொள்ள உதவும்.
அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது போல தெரிகிறது. கும்ளே இடத்தை நெருங்க இவருக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு நிறைய உழைப்பும் அதிர்ஷ்டமும் தேவை. தமிழர்களுக்கு இது மிகவும் குறைவு. முனாப் எடுபடவே இல்லை. பிரவீன் எளிதில் களைத்துவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஜடேஜாவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆட்டத்தில் அனுபவம் தெரிகிறது. பார்க்கலாம்.
டிராவிட் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆடப்போவதில்லை. இது நம்மை பெரிதாக பாதிக்க போவதில்லை. ஏனெனில் அவர் ஒரு நாள் போட்டிகள் ஆடி வருடம் 2 ஆகிறது. அணியில் அனுபவசாலிகள் இல்லை என்பதாலும் டெஸ்டில் சிறப்பாக ஆடியதாலும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால்தான் இதுதான் என் கடைசி ஆட்டம் என அறிவித்துவிட்டார். சச்சினும் ஒரு நாள் போட்டிகள் ஆடுவதை வெகுவாக குறைத்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் இந்த இருவரின் பங்களிப்பு மிகவும் குறைவு (உலக கோப்பை அணியில் சச்சினின் பங்களிப்பு தவிர).
இப்போதைக்கு அணிக்கு தேவை சேவாக், கம்பீர். ஜாகீர், ஹர்பஜன் மற்றும் யுவராஜ் மட்டுமே. இவர்கள் அணிக்கு திரும்பி விட்டால் அணி பழைய நிலைக்கு திரும்பி விடும். மேலும் மேற்கிந்தியதீவுகளோ அல்லது இங்கிலாந்தோ நமது இந்திய கால நிலைக்கு முற்றிலும் எதிரானது. எகிறும் பிட்ச்களில் நம் ஆட்கள் தடுமாறியதெல்லாம் அந்தக்காலம். ஷார்ட் பிட்ச் போடும் போது ரெய்னா தடுமாறுவது எளிதில் அவரால் திருத்திக்கொள்ளப்படும்.
வீரர்களுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படவில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. யாருக்கு ஓய்வு கிடைக்கிறதோ இல்லையோ தோனிக்கு சுத்தமாக ஓய்வில்லை. அடுத்து சாம்பியன் லீக்கிற்கு தயாராக வேண்டும். மெஷின் கூட இப்படி தொடர்ந்து உழைக்குமா என தெரியவில்லை.
எது எப்படியானாலும் அணிக்கு ஒரு லெக் ஸ்பின்னர் தேவை. காயமுற்ற அனைத்து வீரர்களும் சீக்கிரம் குணம் அடைந்து அணிக்கு திரும்ப வேண்டும். இந்தியா உண்மையிலேயே சாம்பியன்தான் என அனைவரும் உணர ஒரு பேயாட்டம் தேவையிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
//எது எப்படியானாலும் அணிக்கு ஒரு லெக் ஸ்பின்னர் தேவை.
ReplyDeleteபல வருடங்களாகவே அணிக்கு சரியான லெக் ஸ்பின்னர்கள் தேவை இருந்தது, ஆனால் சரியான வீரர்தான் கிடைக்கவே இல்லை..
இந்திய அணியினை பற்றிய உங்கள் பார்வை அருமை நண்பரே... தோல்விகள் வந்தால்தானே குறைகள் தெரிய வரும்... அதை நிவர்த்தி செய்து மீண்டும் வெற்றி பாதைக்கு சீக்கிரமே திரும்பினாள் நலம்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா..
ReplyDeletepls no comments abt the team... sure they get well soon.. timebeing, we juz get relax with our past worldcup rememberance..
ReplyDeleteWelcome dear.. and thanks for your comments..
ReplyDelete