Friday, September 7, 2012

சிவகாசி விபத்து – ஒரு தொடர்கதை

சிறுகதைகளுக்கு சீக்கிரம் முடிவு வரும். தொடர்கதைகளோ முடிவு இல்லாமல் நீளும். பிரச்சனைகளில் கூட இது போல சிறுகதைகளும் உண்டு தொடர்கதைகளும் உண்டு. சிவகாசி வெடி விபத்தும் தொடர்கதையினை போன்றதுதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான ஒரு மதிய நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 35க்கும் அதிகமான மக்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். சிவகாசிக்கும் இது போன்ற விபத்துக்களுக்கும் பத்தோடு பதினொன்றாக போய்விட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறியதும் பெரியதுமாக இது போன்ற விபத்துக்கள் அங்கு நடப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இம்முறை விபத்தில் சிறு வித்யாசம். என்னவெனில் பணியாளர்கள் வெறும் 3 பேர்தான் இறந்துள்ளனர். காப்பாற்ற சென்றவர்களில்தான் பலி எண்ணிக்கை முப்பதை தாண்டிவிட்டது.


தீபாவளி வர இன்னும் கொஞ்சம் நாட்களே இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம். மேலும் இந்த ஆலைக்கு உரிமம் கெடு முடிந்து விட்டதால் ஆலையை மூடச்சொல்லி அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் இரவு பகலாக பணி நடந்துள்ளதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட அதிக வட இந்தியர்களை குறைந்த கூலிக்கு ஆசைப்பட்டு பணியில் அமர்த்தி வேலை வாங்கியதாகவும் அவர்களுக்கு இந்த பட்டாசு பணியின் நுணுக்கங்கள் அறியாமையாலும் விபத்து நேர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன, குறைந்த பட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் வெற்றுடம்புடன் வேலை செய்யும் இவர்களுக்கு இறந்த பின்பு இழப்பீடு அளித்து என்ன பயன்? ISO போன்ற தரச்சான்றிதழ்கள் இது போன்ற ஆலைகளுக்கு கட்டாயம் எனவும் வருடத்திற்கு இரு முறை அல்லது மும்முறை தணிக்கைகள் செய்யப்பட வேண்டும் எனவும் சட்டம் கொண்டுவந்தால் குறந்த பட்சம் இந்த மாதிரி விபத்துக்களை குறைக்க இயலும்.

ஆலைக்கு உரிமம் வழங்குவதற்கு முன் அதிகாரிகள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஆய்வுகளை நடத்தினால் மட்டுமே உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.

2 comments:

  1. சார் பலி எண்ணிக்கை நூறை தாண்டும் ... முப்பத்தி ஒன்பது என்பதேல்லாம் பத்திரிக்கைகளும் அரசாங்கமும் சேர்ந்து செய்த ஏமாற்று வேலை

    ReplyDelete
  2. இதுலயும் பொய் கணக்கா... திருந்தவே மாட்டாங்க போல.. இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறாங்கன்னு தெரியல

    ReplyDelete