Sunday, November 24, 2013

சினிமா விமர்சனம் – இரண்டாம் உலகம்

திரைப்பட விமர்சனங்களை எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த படம் என்னை எழுத வைத்துவிட்டது. எந்திரன் என்னும் ஒரு படம் வந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ். ஆனால் கரூரில் உள் நாட்டு அரசியலால் ரிலீஸ் ஆகவில்லை. ஆம். ஆகவில்லை. 15 நாட்கள் கழித்து கரூரில் யாருமே சென்று பார்த்திராத ஒரு டப்பா தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். அப்படி இருந்தும் அந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்ற பொழுது காலையில் போனால் இரவு காட்சிக்குதான் டிக்கெட் கிடைத்தது. டிக்கெட் கிடைத்துவிட்டாலும் தியேட்டர் எப்படா திறக்கும் என காத்திருந்து காட்சிகள் நிரம்பின. இத்தனைக்கும் இந்த படம் கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய ஊரில் ரிலீசாகி பாதிபேர் அங்கு சென்று பார்த்துவிட்டிருந்தனர்.

இந்த முன்னுரையின் தொடர்ச்சியாக நேற்று இரண்டம் உலகம் என்னும் காதல் காவிய படத்திற்கு நாங்களும் எங்கள் நண்பர்களும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அரை மணி நேரம் படம் ஓடியும் சற்றும் புரியாததால் தூக்கம் கண்ணை கட்ட படம் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானோம். கதவை பூட்டி இருந்தார்கள். திறக்க சொல்லி கேட்ட போது தியேட்ட ஊழியர் சொன்னது குபீரென்றது. உங்களுக்காக திறந்தால் எல்லோரும் வெளியே போய்விடும் வாய்ப்பிருப்பதால் இடைவேளை வரை திறக்க இயலாது என சொல்லிவிட்டார். முதல் நாள் காட்சியில் இப்படி பாதியிலேயே முக்கால்வாசி பேர் போய்விட்டதாக அவர் சொன்னபோது அந்த பட தயாரிப்பாளரின் நிலையையும் எங்கள் நிலையையும் நொந்துகொண்டு மீண்டும் படத்தினை பல்லை கடித்துக்கொண்டு பார்த்து தொலைத்தோம். கொடுமை என்னவெனில் இடைவேளையிலும் வெளியே விட முடியாது என சொல்லிவிட்டனர். இப்படி கண்ட படம் எடுத்து நொந்த தயாரிப்பாளர்களை ஒவ்வொரு முறையும் அஜீத்தா வந்து காப்பாற்ற முடியும்?


மக்களே! உஷார். பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானல் ஒருவேளை பிடிக்கலாம். 

No comments:

Post a Comment