வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவர் முதல்வராக நீடிக்க முடியாது. இந்நிலையில், அடுத்து யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி , விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி ஆகிய 3 பேரும் டாப்லிஸ்ட்டில் உள்ளனராம்.
பத்திரிக்கை செய்தி - தினமலர்