Thursday, February 26, 2009

vedios of the month

old cars show..


Toy Giraffees!!



India Court


Persia court


china court



hanging lamp




naughty girl..



with my friend Mansur



with Raj..



with my friend Raj..


with my boss daughter..


Paulraj and family with his car!!


Cute Baby!

Friday, February 20, 2009

jolly chat

dear Friends,

Today i talked with Asokan and K.Subramani over the phone. I was so happy to talk with them after a long time. I have to say thanks to karthi for giving their mobile numbers.
I can easily recognise asokan voice!!...its still same. He was talking very nicely.. i could see the same asokan like 16 years before.

Even subramani also like the same...i couldnt belive his 3 yrs old son is going to (RMHS) kinder Karten!! how fast the time has gone!!! it seems from quarry all are going to Kochin for a tour..
Guys are enjoying out there!!..

well, guys i willl wrap up here..hope will soon hear from you all..

Thanks again karthi!

Tuesday, February 17, 2009

Bobby Prasath

Hai Anna I m Prasath S/O, Nadarajan - Geologist...................

I m very happy to see this blog, Kindly add me also.....

Thanks


Regards,
prasath

Saturday, February 14, 2009

Happy Valentines Day


காதலர் தினம் வெறும் 'காதலுக்கான தினமாக' மட்டும் இல்லாமல் 'அன்பின் தினமாக' நேசிப்பின் தினமாக' பார்ப்போம்.
என் நாட்டை நேசிக்கிறேன்
என் தாய்மொழியை நேசிக்கிறேன்
என் மக்களை நேசிக்கிறேன்
என்னைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கிறேன்
அதற்கான தினமாக இந்த காதலர் தினம் அமையட்டும் என்று நினைப்போம்.








Monday, February 2, 2009

தூக்கம் விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை
இதோ அயல் தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்...

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்பட தான் முடிகிறது

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேணுமானால்...
வாசனை இருக்கலாம்
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில் தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்கள் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல்தாண்டி வந்திருக்கின்றோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன்கூட்டைக் கலைப்பவன் போல!
விடுமுறை நாட்களில் தான்...
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்துவிட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினம் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு -கோலி என
சீசன் விளையாட்டுகள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிபார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலகக்கோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்...
விசாவும் பாஸ்போர்ட்டும் வந்து...
விழிகளை நனைத்துவிடுகிறது!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழைய சடங்குகள்
மறுத்து போராட்டம்!

பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனக்கூறி வறட்டுப் பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
கண்டிப்பாய் வரவேண்டும்
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே....
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ...ண்ட நட்பு !

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள் தான்!
காற்றிலும் கடிதங்களிலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக் கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்
ஒரு கடலைதாண்டிய
கண்ணிரிலேயே...
கரைந்து விடுகிறார்கள்!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும் தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்... முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹாமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை...
நெருங்கியவர்களின் திடீர் மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைவுகளையும் கண்டு...
மீண்டும்..
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு