இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை
இதோ அயல் தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்...
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்பட தான் முடிகிறது
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேணுமானால்...
வாசனை இருக்கலாம்
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில் தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்கள் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல்தாண்டி வந்திருக்கின்றோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன்கூட்டைக் கலைப்பவன் போல!
விடுமுறை நாட்களில் தான்...
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்துவிட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினம் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு -கோலி என
சீசன் விளையாட்டுகள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிபார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலகக்கோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்...
விசாவும் பாஸ்போர்ட்டும் வந்து...
விழிகளை நனைத்துவிடுகிறது!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழைய சடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனக்கூறி வறட்டுப் பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
கண்டிப்பாய் வரவேண்டும்
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே....
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ...ண்ட நட்பு !
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள் தான்!
காற்றிலும் கடிதங்களிலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக் கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்
ஒரு கடலைதாண்டிய
கண்ணிரிலேயே...
கரைந்து விடுகிறார்கள்!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும் தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்... முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹாமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை...
நெருங்கியவர்களின் திடீர் மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைவுகளையும் கண்டு...
மீண்டும்..
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு
one more intresting "Kavithai"...very touching one...
ReplyDeleteDhamaya your question is answered here..
This is also one of the reason for many of us not comming back to India.
கவிதை மிக அருமை.. அயல் நாடுகளில் வேலை செய்பவரின் மன நிலையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறது இந்த கவிதை. அருமை.
ReplyDeletehi saravanan,
ReplyDeletenice kavithai. sorry saravanan. i feel bad. dont worry. konja nal athai,mamava unkuda kootitu pogalam illaya. so, they are also happy. i dont know this is possible or not. just i said my opinion. any mistake pl. forget that.
போன தலைப்பிலேயே மேலோட்டமாக இதை பற்றி பேசினோம். இப்போது ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது. மாப்ள கார்த்தி சொன்னது போல புலிவால் கதை தான். இன்னும் சில வருடங்கள் அவ்வாறு தான் செல்ல வேண்டும்,, இந்த அயல்தேசத்து ஏழையின் வாழ்க்கை.
ReplyDeleteYes ..Annal...
ReplyDeleteDubai is very badly affected by the global recession..
how is singapore? how is the job cut happening there? I wish you dont have that kind of problem in your company...
my company(Japanese) not practised to retrench people..But all the benefits affected..maybe another 6 months Market, willbe worse.. See how!!!
ReplyDeleteநண்பர்களே.. நிலைமை இங்கும் சிரமம் தான். நிறைய ஏற்றுமதி நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. வாங்கும் சக்தி அமெரிக்காவில் குறைந்து வருகிறது. இனிமேல் ஹோட்டல் தொழில் தவிர அனைத்தும் சிரமத்திற்கு உள்ளாகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பார்ப்போம். ஆனால் வேலை தெரிந்த நபர்களுக்கு என்றும் பயமில்லை. ஒரு சிறு செய்தி. இன்று நடந்த இலங்கை தமிழர்களுக்கான பந்த் 100% வெற்றி. சென்னை சில்க்ஸ் கடை திறந்த நாள் முதல் இன்று தான் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டில் கொத்தமல்லி கூட விற்கப்படவில்லை. ஒரு டீ கூட குடிக்க கடை இல்லை. ஒரு கடை கூட பஜாரில் திறக்கப்படவில்லை. இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ReplyDeletegood information karthi....yes be a tamililan we need to support our tamil eelam people in srilanka..
ReplyDeleteyes dhamaya..but my parents are not willing to come here...thats the problem..
ReplyDeletehope they will be intrested to come only after we have our kids..;)
நேற்று நடந்த பந்த் மாலை 4 மணிவரை நீடித்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. மக்கள் நடமாட்டம் நன்றாகவே இருந்தது. அனைத்து வணிக அமைப்புகளும் நேற்று இந்த பந்த்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தது. பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருந்த அருண் & வள்ளுவர் ஹோட்டல்கள் கூட மூடியே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பத்திரிகள், மெடிக்கல் கடைகள் தவிர வேறொன்றும் இல்லை. பிரம்மச்சாரிகள்தான் சாப்பிட வழியின்றி சிரமத்திற்காளாயினர். மாலை 5 மணிக்கு மேல் Tiffin கடைகள் வழக்கம்போல் இயங்கின.
ReplyDeletelast sunday i spoke to Senthil...he said Bazith flied to arab country (maybe Saudi??)
ReplyDeletethanks for your recent information annal..
ReplyDeletethanks to you too karthi..
As a common people, tamilians shows their anger against Lanka....let see what is happenning...
நண்பர்களே! கடந்த வாரத்தில் மிகுந்த வேலைப்பளு காரணமாக என்னால் அடிக்கடி நமது வலைப்பூவில் மலர முடியவில்லை. இனி ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்புறம் நண்பர்களே.. வேறு என்ன விசேசம்? பாசித் அங்கு போனது எனக்கும் தெரியாது. நாளை நான் பைராம்கானிடம் பேசுகிறேன். மணிராஜ் அடுத்த வாரம் இறுதியில் கரூர் வருவதாக உள்ளான். அந்த நேரத்தில் ஒரு சின்ன கெட் டு கெதர் மாதிரி எங்காவது செல்லலாம் என உள்ளேன். இது குறித்து இங்கு உள்ள நமது நண்பர்களிடமும் பேசி வருகிறேன். பார்ப்போம்.
ReplyDeleteநண்பர்களே.. நேற்று ஜீனத் அக்காவிடம் பேசினேன். பாஸித் அபுதாபிக்கு சென்றது தெரிய வந்தது. இது உங்கள் தகவலுக்காக
ReplyDelete