நம் சூரிய குடும்பம், பிராண சக்தி மண்டலம் (Cosmic Energy Zone) என்னும் மண்டலத்தை அடைந்து ஒவ்வொரு 10,000 ஆண்டுகளுக்கும் தேவையான பிராண சக்தியை நிறைத்துக் கொள்கின்றது. அது போன்றதொரு நிகழ்வு எதிர்வரும் 2012ஆம் ஆண்டு நிகழ இருக்கிறது. நமது சூரிய குடும்பம் அந்த பிராண சக்தி மண்டலத்தை நோக்கி அதன் ஈர்ப்பு சக்தியால் மணிக்கு பல கோடி மைல்கள் வேகத்தில் பின்னொக்கி போய்க்கொண்டிருக்கிறது. அதன் விளைவே நாம் கடந்த சில வருடங்களாக காலம் வெகமாக நகர்வதாக உணர்வது. அந்த மண்டலத்தின் கதிர்வீச்சு கடந்த சில ஆண்டுகளாகவே பூமியில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது, அதனாலேயே இப்போது, பிறக்கும் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்படும் ஞான உணர்வு ஆகும். அவ்வாறு நாம் அந்த பிராண சக்தி மண்டலத்தை நெருங்கும் போது, (பிராண வாயு மண்டலத்தில்) பூமியில் உள்ள நம் மனித குலம் பலவிதமான நோய்களை சந்தித்து மரண நிகழ்வுகளை சந்திக்கவும் நேரும். அப்படி 2012ல் பிராண சக்தி மண்டலத்தை அடையும் போது நம் சூரிய குடும்பம் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளும் அப்போது நம் பூமி மூன்று நாட்கள் இருளில் மூழ்கும், அதுவே கலியுகத்தின் முடிவுகாலமாகும். அப்போதுதான் யுக பிரளயம் ஏற்படப் போகிறது அப்போது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டுபேர் மாண்டு போவார். பின்னர் சூரிய குடும்பம் தன் இயல்பான பாதையில் வேகத்தில் பயணிக்கும்.
இயற்கையின் படைப்புகளான மலை, மரம், கடல், ஆறு, செடி, கொடி என்ற அனைத்து பஞ்ச பூத தத்துவங்களுக்கும் மனிதனைப் போல் பேசும் சக்தியைத் தவிர அனைத்து உணர்வுகளும் உண்டு. இதுவரை மனிதன் செய்து வந்த அனைத்து இயற்கைக்கு புறம்பான செயல்களுக்கும் இயற்கை பதில் சொல்லும் காலம்தான், யுக பிரளயமாகும். யுக பிரளய காலமான அம்மூன்று நாட்களில் உலகில் பூகம்பம் ஏற்படும். கடல் கொந்தளிக்கும், ஆழி பேரலைகள் உருவாகும், எரிமலை, பெரு வெள்ளம், அக்கினி அலைகள் ஏற்படும் மலைகள் வெடித்து சிதறும், பூமிக்குள் உள்ள கந்தக பாறைகள் எரிந்து பூமி உட்புதைந்து போதல், போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு உலக வரைபடம் பல மாற்றங்கள் அடையும், தீவுகள் முற்றிலும் அழிந்து போகும், கடலோர நகரங்கள் அழியும் என்பதை அறியவும், நாம் நமது உயிர் தியானத்தால் எப்படி நம்மைக் காத்துக்கொள்ளலாம் எனில், நாம் உயிரையே கடவுள் என தியானிக்கும் போது, உயிராகிய கடவுளுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்படும் என்ற பேருண்மையை உணரவேண்டும். மேலும் உயிரை தியானிக்கும் போது உயிர் உடலில் கவனத்தை வைக்கும் போது உயிருக்கு பிராண வாயு தேவையில்லை, ஆனால் Cosmic Energy-யினை உயிர் உடல் தனக்கு தேவையான அளவு கிரகித்து நம் ஊன் உடலுக்கு சக்தியை அளிக்கிறது. Cosmic Energy-யினை ஊண் உடல் ஏற்காது. ஆனால் நம் உயிர் உடல் ஏற்றுக்கொள்ளும். நாம் உயிரில் கவனம் வைக்கும் போது உயிர் உடல் ஊன் உடலை தனதாக தன்போல் உயிர் உடலுக்குத் தேவையான Cosmic Energy-யினை கிரகித்து ஊண் உடலை உயிர் உடலாக மாற்றிக் கொள்கிறது. அதனாலே அனைவரையும் பல்வேறு அமைப்புகளும் தியானம் கற்க வலியுறுத்துகின்றன.
http://www.sammatham.com