Wednesday, October 28, 2009

காலத்தின் அருமை

காலத்தின் அருமை

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்" என்று கேட்டார் போப். "ஆறு மாதம்" என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். "நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்" என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் "ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறைஅதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்". போப்பாண்டவர் சிரித்தபடி "ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…" என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். "நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்" என்று அழகான விளக்கம் அளித்தார்.

"பிறகு", "பிறகு" என்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.



3 comments:

  1. i think ramesh has sent the above message..and asked me to post in this blog!! but i am not sure..

    Hi all!! who ever sending the message please put your name at the end of the message..so that all others will know who has sent it....

    ReplyDelete
  2. கார்த்திகேயன்October 29, 2009 at 8:34 AM

    அற்புதமான எழுத்துக்கள். ஆழ்ந்த கருத்துக்கள். இரமேஷ்தான் அனுப்பி இருக்கிறான். நேற்று அவன்கூட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்.

    ReplyDelete