போனவாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சித்தன்னவாசல் மற்றும் புதுக்கோட்டையில் இருக்கும் நூற்றாண்டு கால அருங்காட்சியகத்திற்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வெளியில் பார்க்கும்போது ஒன்றும் பிரமிப்பை ஏற்படுத்தாத அந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றால் உண்மையிலேயே மிகவும் அற்புதமான புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்பினை சொல்லும் வகையில் இருந்தது. வெறும் 5 ரூபாய்தான் நுழைவுச்சீட்டு. 50 ரூபாய் கொடுத்தாலும் தகும். வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் பார்ர்க வேண்டிய இடம் இந்த அருங்காட்சியகம்.
சித்தன்னவாசல் என்பது புதுகையிலிருந்து விராலிமலை செல்லும் சாலையில் 15கி,மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமணர்கள் இங்கு குகை கோவிலை உருவாக்கி பூஜைகள் செய்து வந்திருக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த சமணர் படுக்கைகளையும் அங்கு போனால் பார்க்கலாம். குகையினுள் தாவர எண்ணைகளை பயன்படுத்தி வண்ணங்களை உருவாக்கி ஓவியங்களையும் தீட்டி இருக்கிறார்கள். எவ்வளவோ கேட்டும அதனை புகைப்படம் எடுக்க அங்கு இருந்தவர் அனுமதிக்கவில்லை. அவரோட நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குப்பா..
உங்கள் பார்வைக்கு சில படங்கள்.
அருங்காட்சியகம்
சித்தன்னவாசல்
ராஜேஷ் பக்கத்திலே இருப்பவர்தான் அந்த நேர்மையாளர்.
ReplyDeleteசித்தன்னவாசல் குகையினுள் சென்று ‘ஓம்’ என ஒலி எழுப்பினால் அந்த அறையே ஒரு அதிர்வு ஏற்பட்டு சிலிர்க்க வைக்கிறது. முயற்சி செய்து பாருங்களேன்.
nice pictures Karthi, good to see Rajesh after a long time. all the pictures are very clear.
ReplyDeleteonly studied in history!!!