Saturday, May 14, 2011
அண்ணா திமுகவிற்கு அமோக வெற்றி!!!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பெறும் சரிவினை சந்தித்துள்ளன. குறிப்பாக திமுகவின் அமைச்சர்கள் கூட சறுக்கியிருக்கிறார்கள். அதிமுக 150 இடங்களிலும், தேமுதிக 29 மற்றும் திமுக 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளான CPM - 10 மற்றும் CPI – 9 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 203 தொகுதிகளின் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள்.
தேமுதிகவின் எழுச்சி
இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. எவ்வளவோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட விஜயகாந்த் 30000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளார். மொத்தமாக அந்த கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பாமகவின் கோட்டையை தகர்த்தது மட்டுமின்றி அதன் தலைவர் கோ.க.மணியையே தோற்கடித்துள்ளது. தமிழக மேப்பில் உச்சத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருந்து கீழே இருக்கும் ராதாபுரம் வரை வெற்றிகளை தட்டிச்சென்றுள்ளது. இந்த கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பெண்களும் அடங்குவர். திருச்செங்கோடு, சூலூர், மதுரை மத்தி, ராதாபுரம், பேராவூரணி, சேந்தமங்கலம், மேட்டூர், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், செங்கம், மயிலாடுதுறை, சேலம் வடக்கு, விருதுநகர், செங்கல்பட்டு, விருகம்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகியவை உள்ளிட்ட 29 தொகுதிகளில் வென்று கட்சியின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற அமைச்சர்கள் இவர்கள் மட்டுமே.
முதல்வர் கருணாநிதி - திருவாரூர்
துணை முதல்வர் ஸ்டாலின் - கொளத்தூர்
துரைமுருகன் - காட்பாடி
ஐ.பெரியசாமி - ஆத்தூர்
எ.வ.வேலு - திருவண்ணாமலை
சுப.தங்கவேலன் - திருவாடானை
தங்கம் தென்னரசு - திருச்சுழி
மைதீன் கான் - பாளையங்கோட்டை
க.ராமச்சந்திரன் – குன்னூர்
இதில் ஸ்டாலினின் வெற்றி மிகவும் பிரச்சினைக்கு பிறகு நள்ளிரவே முடிவு தெரிந்தது. மைதீன்கான் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) தபால் வாக்க்குளால் தப்பித்தார். வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகனும், திருச்சியில் கே.என்.நேருவும், விழுப்புரத்தில் பொன்முடியும், விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், வெள்ளகோவில் சாமினாதனும், குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தோற்ற அமைச்சர்களில் முக்கியமானவர்கள். ஆரம்பம் முதலே முன்னனியில் இருந்தவர்கள் முதல்வர் கருணாநிதி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, துரைமுருகன் மட்டுமே. திருச்சுழியில் தங்கம் தென்னரசு கடைசி கட்ட சுற்றுக்களில் முன்னிலைக்கு வந்தார். திருவாடானையில் தேமுதிக வேட்பாளர் சுப.தங்கவேலனுக்கு கடுமையான போட்டியை கொடுத்தார்.
கடைசிவரை இழுபறியில் இருந்த தொகுதிகளில் சில.
கொளத்தூர் – ஸ்டாலின்
பாளையங்கோட்டை – மைதீன் கான்
அரவக்குறிச்சி – கே.சி.பழனிச்சாமி
மேட்டூர் – பார்த்திபன் (தேமுதிக)
திருச்சுழி – தங்கம் தென்னரசு
ராமனாதபுரம் – ஜவாகிருல்லா
ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தவர்களில் சிலர்.
கருணாநிதி – திருவாரூர்
ஜெயலலிதா – ஸ்ரீரங்கம்
விஜயகாந்த் – ரிஷிவந்தியம்
சரத்குமார் – தென்காசி
பாலபாரதி – திண்டுக்கல்
விஸ்வனாதன் - நத்தம்
மரியம் பிச்சை – திருச்சி
மைக்கேல் ராயப்பன் – ராதாபுரம்
செந்தில்பாலாஜி – கரூர்
பாப்பா சுந்தரம் – குளித்தலை
வைகை செல்வன் – அருப்புக்கோட்டை
பாண்டியராஜன் – விருதுநகர்
அருண் பாண்டியன் – பேராவூரணி
முத்துக்குமரன் – புதுக்கோட்டை (கம்யூ)
தினகரன் – சூலூர் (தேமுதிக)
செங்கம் – சுரேஷ் (தேமுதிக)
வால்பாறை – ஆறுமுகம் (கம்யூ)
சிவகங்கை – குணசேகரன் (கம்யூ)
உசிலம்பட்டி – கதிரவன் (பார்வேர்டு ப்ளாக்)
கோபிசெட்டிபாளையம் – செங்கோட்டையன்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
திருச்செங்கோடு – சம்பத்குமார் (தேமுதிக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
ஐ.பெரியசாமி – ஆத்தூர் (திமுக)
சக்கரபாணி – ஒட்டன்சத்திரம் (திமுக)
முதுகுளத்தூர் – முருகன்
முத்துராமலிங்கம் - திருமங்கலம்
முக்கியமாக பல தேமுதிக வேட்பாளர்கள் ஆரம்பம் முதலே முன்னிலையில்தான் இருந்தனர்.
திமுக கூட்டணியில் இருந்து 7 இடங்களில் போட்டியிட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து கொங்கு இளைஞர் பேரவை சார்பில் போட்டியிட்ட உ.தனியரசு பரமத்தி வேலூரில் வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் அனைத்து தொகுதிகளுலும் திமுக தோல்வியடைந்துள்ளது. திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். புதுக்கோட்டையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மன்னர் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே கம்யூனிச கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து எதையும் எதிர்பாராமல் உழைத்த முத்துக்குமரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெரி.அரசுவை வென்றுள்ளார்.
மொத்தத்தில் மின்வெட்டு, வெறும் இலவச அறிவிப்புகள், படோடாபம், தொழில் வளர்ச்சியின்மை போன்ற பெரும் காரணிகளே இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது. நூல் விலையேற்றம் கொங்கு வட்டாரத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு அம்மா ஆட்சியை இல்லையில்லை நல்லாட்சியை தந்து தமிழகத்தினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
yes machi..DMK is been washed out...expected defeat..but unexpected aappu!!
ReplyDelete" Amma" Jayalalita Wins
ReplyDeletein the recent Election in india
and Becomes the CM again,
And all the Public say...
????
“The Mummy Returns”
//இதையெல்லாம் கருத்தில் கொண்டு அம்மா ஆட்சியை இல்லையில்லை நல்லாட்சியை தந்து தமிழகத்தினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவேண்டும்.
ReplyDelete//
good one...
maaps... i expect JJ could win (my support JJ too)... But huge win, unexpected to everyone..Mr MK cant sit in Assemby in opponent head as a Party leader in his life.the worse thing, he was beaten by Captain... onemore thing..,, anybody see Vadivelu... Missing...
ReplyDeleteவாடா மாமா.. ரொம்ப நாளா ஆளையே காணோமே?
ReplyDeleteமாமா.. ஆட்டம் ஜாஸ்தியானா அஸ்திவாரம் பாதிக்கும்டா. அதுதான் இது. மேலும் எதிர்கட்சி தலைவராக அமர திமுகவிற்கு தகுதி இல்லை. அந்த இடத்தில் தேமுதிக தான் அமரும். எப்பொழுதுமே இரண்டாவதாக வரும் கட்சி எதிர்கட்சி என கொள்ளப்படும். ஆளும்கட்சி அல்லது எதிர்கட்சி அந்தஸ்து இன்றி இருப்பது திமுக ஆரம்பித்து இதுதான் முதல்முறை.
மேலும் ஒரு செய்தி: கரூர் சட்டமன்ற உருப்பினர் திரு.செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராகிறார். 20 வருடங்களுக்கு பிறகு கரூர் அமைச்சர் தொகுதி என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளது.
கருத்துக்களுக்கு நன்றி சரவணா..
மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாள் மந்திரிகளுக்கும் மக்கள் மந்திருச்சி விட்டுடுவாங்க என்பதற்க்கு இந்த தேர்தல் நல்ல உதாரணம்
ReplyDeleteகேகேஎஸ்எஸ்ஆர்ஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் தோர்க்க முக்கிய காரணம் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் பிரசாரத்தில் எல்லாம் செய்ததை போல ரீல் விட்டதுதான்
தங்கம் தென்னரசை எதிர்த்து இரட்டை இலையிலோ இல்லை முரசு சின்னத்திலோ யாராவது நின்று இருந்தால் அவரும் மண்ணை கவ்வி இருப்பார்... அவருக்கும் தொகுதியில் நல்ல பெயர் கிடையாது ... எதிர்பாராத விதமாக வென்று விட்டார் ...
கருத்துக்களுக்கு நன்றி ராஜா..
ReplyDeleteஇரண்டு அமைச்சர்கள் இருந்தும் தொகுதியை டீலில் விட்டுவிட்டார்கள். அதுதான் இத்தனை பெரிய தோல்விக்கு காரணம். நீங்கள் சொன்னது போல தங்கம் தென்னரசு நூலிழையில்தான் தப்பித்தார்.
இன்னும் ஒரு செய்தி தெரியுமா? திருவாடானை தொகுதியில் கூடை சின்னத்தில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை 7000 வாக்குகள் பெற்றிருக்கிறார். அது முரசிற்கு கிடைத்திருக்க வேண்டிய ஓட்டுகள். தவறுதலாக அங்கே சென்று விட்டது. தேமுதிக வெறும் 900 வாக்குகளில் முன்னாள் அமைச்சரிடம் தோற்றது. இல்லை எனில் தேமுதிகவின் எண்ணிக்கை 30 ஆகி இருக்கும்.