Monday, November 14, 2011

ஷாக் அடிக்கும் மின்சாரம்



நம் பாரத திருநாட்டில் மின்சார தட்டுப்பாடு என்பது எல்லா மாநிலங்களிலும் காணப்பட்டாலும் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை உணரப்படவே இல்லை. காரணம் உபரியான மின் உற்பத்தி தமிழகத்தில் இருந்த்தால்தான். நெய்வேலியும் கல்பாக்கமும் மற்றும் பல புனல், காற்றாலை மின்சாரமும் நம் தேவைக்கு போக பிற மாநிலங்களும் விற்பனை செய்யும் வண்ணம் இருந்தன. குறிப்பாக கேரளம் நம்மை நம்பித்தான் இருந்தார்கள்.

ஆனால் நிலமை இன்று தலைகீழாக இருக்கிறது. காரணம் போதுமான திட்டமிடல் இல்லாமை. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு புது புது திட்டங்களை காலத்தே வகுத்திருந்தால் இன்று கையை பிசையத் தேவை இருந்திருக்காது. ஆளும் கட்சிகளும் ஆண்ட கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிக்கொண்டார்களே ஒழிய தீர்வு கிடைக்கவே இல்லை. ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் என ஆரம்பித்த இந்த பிரச்சனை 4 ஆண்டுகளில் தினமும் 6 – 7 மணி நேரங்கள் என வந்து நிற்கிறது.

கூடங்குளம் வந்துவிடும்.. உபரி உற்பத்தி கிடைத்துவிடும்... அனைவரும் கவலை கொள்ளத் தேவை இல்லை என நம்பிக்கொண்டிருந்த வேளையில் அதன் பிரச்சினையை இன்று நாடறியும். தினம் ஒரு கூட்டம் அங்கே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறது. கிட்ட்த்தட்ட 13000 கோடி ரூபாய் பணத்தினை செலவளித்து திறப்பு விழா காணும் நேரத்தில் சோதனைகளை வேதனையுடன் பார்த்து வருகிறது நமது கூடங்குளம் அணு மின்சார நிலையம்.

நிலமைக்கு தீர்வுதான் என்ன? அந்த தீர்வினை யார் எடுப்பது? மக்களின் பிரச்சனை என்ன? அறிஞர்கள் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? பூனைக்கு மணி கட்டுபவர் யார்? உற்பத்தி என்று தொடங்கும்? பலன் என்று மக்களுக்கு கிடைக்கும்? கேள்விகள் விரிந்து கொண்டே இருக்கிறது.




தெலங்கானா விவகரத்தினால் நமக்கு வரவேண்டிய நிலக்கரி நின்று போய்விட்ட்து. இந்த கஷ்டமான சூழ் நிலையில் இது போன்ற திட்டங்களும் கிடப்பில் விடப்பட்டால் நமது மாநிலம் இருளில் மூழ்கிவிடும். நாட்டை ஆளும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை. தமிழகத்தினை ஆளும் கட்சிகளுக்கு தேசிய செல்வாக்கு இல்லை. சென்ற ஆட்சியில் கிடைத்த செல்வாக்கினை எப்படி பயன் படுத்தினார்கள் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது.

மின்சாரம் தட்டுப்பாட்டால் ஜெனரேட்டர்கள் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருவதால் டீசல் இழப்பும் சுற்றுசூழல் மாசும் அடுத்த பிரச்சனைக்கு அடி போடுகிறது. தினம் உயரும் டீசல் விலையால் மின்சார உற்பத்தியின் விலையும் அதிகரித்து அதன் சுமையும் மக்கள் தலையில் விடிகிறது.

எது எப்படியோ நமக்கு மின்சாரம் வேண்டும். பிரச்சனைகளை வளர்க்காமல் போர்க்கால நடவடிக்கைகளை மத்திய மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் 10 ஆண்டுகளின் மின் தேவையை கணக்கில் கொண்டு இன்றே திட்டங்களை வகுக்க வேண்டும். தீர்வுகள் காணப்பட வேண்டும். பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். நம் நாடு வளரும் வல்லரசு என்பது இதில் தான் உள்ளது.

3 comments:

  1. கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் நிலமை சீராகிவிடும் என்று எனக்கு தோன்றவில்லை ... மாறாக ஆபத்துகளே அதிகாரிக்கும் என்று எண்ணுகிறேன் ... ஜப்பான் கடலோர அணு உலைகளில் இன்றும் கதிரியக்கங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறது என்று டிவியில் காட்டுகிறார்கள் ... தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் அவர்களே ஆபத்தில் சிக்கியிருக்கும் நிலமையில் , ஊழல் கரை படிந்திருக்கும் நம் நாட்டில் கண்டிப்பாக பாதுகாப்பு முறைகள் முழுமையாக பின்பற்றபட போவதில்லை , நாளை எதேனும் இயற்க்கை சிக்கல் வந்தால் நம் கதி?

    ReplyDelete
  2. கார்த்திகேயன்November 14, 2011 at 8:27 PM

    மிகவும் சரியாகத்தான் சொன்னீர்கள் ராஜா.. ஆனால் ஜப்பானை விடவும் நமது உலைகள் பாதுக்காப்பனது என கலாம் சொல்லி இருப்பது யோசிக்க வைக்கிறது. மேலும் ஜப்பான் இயற்கையிலேயே பூகம்ப ஆபத்து உள்ள நாடு. அங்கு அணு உலை என்பது மிகவும் ஆபத்தானது. நம் நாட்டில் ஏற்கனவே பல அணு மின் நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அரசு என்ன செய்யப்போகிறது என பார்க்கலாம்.

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா

    ReplyDelete
  3. //அரசு என்ன செய்யப்போகிறது என பார்க்கலாம்.

    எனது கணிப்பின்படி அரசாங்கம் இந்த அணுமின் உலையை திறந்து விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன் .. தென்மாவட்டங்களில் தினமும் நடக்கும் தேவையற்ற நீண்ட நேர மின்தடை அப்படிதான் நினைக்கவைக்கிறது ...

    ReplyDelete