Wednesday, April 18, 2012
நந்தன ஆண்டு – எப்படி இருக்கும்?
தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் என ஐயாவும் இல்லை இல்லை சித்திரைதான் என அம்மாவும் குடைந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் நமது பாரம்பரிய முறையில் பார்த்தால் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
கடந்த ஆண்டான கர வருடத்தில் காலம் தவறிய மழையினால் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இந்த நந்தன ஆண்டில் எப்படி எப்படி பலன்கள் இருக்கும் என்பதை விளக்கமாக சொல்லிவிடுகிறேன். சுத்த வாக்கிய பஞ்சாங்க கணித முறையில் கீழ்கண்ட பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
நந்தன வருடமானது உலக ஜாதக நட்சத்திரம் உத்திராடம் 1ம் பாதத்தில் கன்னி லக்கினத்தில் 4ம் பாதத்தில் தணுசு ராசியும் வர்க்கோத்திர யோகமும் சூரியன் மகா தசையில் சந்திர புத்தியில் சனியின் அந்தரத்தில் ஆதாயம் 65 ஆகவும் விரையம் 62 ஆகவும் வருவதால் (இலாபம் வெறும் 3 தான்) அரசாங்கத்திற்கு மிகுந்த பொருளாதார இழப்புகளும் தன நாசங்களும் இருக்கும். சிக்கன ஆட்சி நடத்தினால் தப்பலாம். கிழக்கில் மேகங்கள் உற்பத்தி இருப்பதால் 4 மரக்கால் மழையும் இருக்கும். வெள்ளி அன்று வருட ஆரம்பம் வருவதால் வருட ஸ்லோகத்தில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் மேகங்களின் அதிபதியான சுக்கிரன் பலமாக தெரிவதால் மழைக்கு பாதிப்பு இருக்கது என அறியலாம். ஆனால் பருவம் தவறிய மழையாகவே இருக்கும். இதனால் விலைவாசி ஏறலாம்.
பணக்காரர்கள் தன விரையம் அடைந்து ஏழ்மைக்கு வருதலும் முக்கியஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பின் நல்ல நிலைக்கு வருதலும் இருக்கும். சுக்கிரனுக்கு சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் மத்திய அரசுகளில் புதிய மாற்றம் வந்து பழைய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்.
பருப்பு, சர்க்கரை, கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்து விலை குறையும். தென்மேற்கு பருவ காற்று ஜூன் 20 முதல் செப்டம்பர் மாதம் வரை நீடித்து நல்ல மழை கொடுக்கும். குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்னாடகாவில் இதன் பொருட்டு நல்ல மழை இருக்கும். தமிழகத்தினை பொருத்தவரை தென் மேற்கு மழையினால் லாபம் இருக்காது. ஜவ்வாது மலையில் மழை முடிந்தபின்பு பனி அதிகமாக இருக்கும். இதனால் சென்னை, வேலூர், மதுரை, கர்னாடகா, ஊட்டி, கொடைக்கானலில் உறை நிலையினை ஒட்டிய பனி இருக்கும். வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 20ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 10 வரை கன மழை இருக்கும். இந்த மழை தமிழகத்திற்கு இலாபம் தரும்.
அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அதிகம் இருக்கும். காசி, கயா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பாதிப்புகள் தெரியும். மலைப்பிரதேசங்களில் பூமி அதிர்ச்சிகள் உணராலம். இந்த ஆண்டு 13 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி 2 பலமில்லாமல் போகும். 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தினை தாக்கும். இதில் சென்னை, நாகை பலமாக பாதிக்கப்படும்.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பொன் வியாபாரிகள் நஷ்டமடைய நேரிடும். காகிதம் விலை குறையும். பஞ்சு விலை குறைந்து பின் ஏறும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக இருக்கும். வங்கிகளில் புதிய விதி முறைகள் வரும். வாசனை வஸ்துகள் விலை குறையும். விமான விபத்துகள் நிகழும். வெல்லம், சர்க்கரை, இனிப்புகள், கரும்பு, திராட்சை விலை குறைந்து பின் ஏறும். வருடத்தின் பின்பாதியில் சர்க்கரை விலை ஏறும். பூண்டு, வெங்காயம், மஞ்சள், தேங்காய் விலை குறையும். மதுபான விலைகளும் குறையும். மளிகை மற்றும் எண்ணெய் வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும்.
கந்தாய பலன்களில் பார்த்தால் பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், அஸ்தம், சித்திரை, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு பாதிப்புகள் குறையும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு முதல் நான்கு மாதங்களும், ஆயில்யம், உத்திரம், ஸ்வாதி, கேட்டை மற்றும் சதயத்திற்கு மத்திய நான்கு மாதங்களும் அஸ்வினி, விசாகம் மற்றும் உத்திரட்டாதிக்கு கடைசி நான்கு மாதங்களும் கஷ்டம் மற்றும் நிம்மதி குறைவு ஏற்படும். திருவாதிரை, பூரம், உத்திராடம், ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு பலன்கள் தராது அல்லது குறந்த நற்பலன்கள் என அறியவும்.
மொத்தத்தில் நன்மை தீமைகள் கலந்தே வருகிறது. பருவம் தவறிய மழையால் உபத்திரவம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் புதிய வேலைகள் ஆரம்பித்தால் ஜெயமுண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
ஸார் .. ஜோதிடகலையில் நிறைய விஷயம் தெரிஞ்சிவச்சிருக்கீங்க போல .... அருமை
ReplyDeleteநன்றி ராஜா.. ஜோதிடத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று ஒரு 3 வருடம் படித்து தெரிந்தேன். நமது வேதிக் அஸ்ட்ராலஜி மிகவும் துல்லியமானது.
ReplyDeleteI Appreciate the prediction!
ReplyDeleteValga Valamudan.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாப்ளை..
ReplyDeleteMaapley!
ReplyDeleteur prediction is always true for me, u said last time... u r one of the genius
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாம்ஸ்.. ஒரு ருசிகர தகவல்.. தமிழ் வருடங்கள் மொத்தம் 60. சென்னையில் இருக்கும் ”நந்தனம்” என்னும் ஊர் ராஜாஜி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு 60 வருடங்கள் ஆகிவிட்டது. வருடத்தின் பெயரால் ஒரு ஊர் இருப்பது உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
ReplyDelete