Monday, October 15, 2012

கரூரில் ரிலையன்ஸ்



கரூரில் வெற்றிகரமாக கால் பதித்தது ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ். மிக பிரமாண்டமாக கோவை பிரதான சாலையில் இந்த தீபாவளியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணிக்கடையை துவங்கி உள்ளது.

பெரு நகரங்களில் மட்டுமே விற்பனையை துவக்கி செயல்படுத்தி வந்த ரிலையன்ஸ் சிறு நகரங்களிலும் தனது கவனத்தை திருப்பி உள்ளது. 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் கரூரில் துணிக்கடை என்றால் அது தைலாவும் கேபிஎம்மும் தான். கே.பி.எம். நாளைடைவில் சில்லறை விற்பனையை நிறுத்திவிட தைலா கொடி கட்டி பறந்தது. 4 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வந்த 'தி சென்னை சில்க்ஸ்' அனைத்து வாடிக்கையாளர்களையும் தன் பால் ஈர்த்தது.

கோவை சாலை என்பது கரூரின் முக்கிய சாலையாகிவிட்டபடியால் அங்கு கடைகள் பிரம்மாண்டமாக வந்து சேர்ந்தன. அருணாச்சலா ரெஸ்ட்டாரெண்ட், திண்டுக்கல் சாரதி ஹோட்டல், கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் மற்றும் பல வணிக நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் அனைத்து முன்னணி வங்கிகளும் குளிர்பதன வசதியுடன் இந்த சாலையை ஆக்கிரமித்தன. அந்த வரிசையில் வந்திருக்கும் ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் கடையும் நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. சென்னை சில்க்ஸ் மற்றும் தைலாவிற்கு போட்டியாக களத்தில் இன்னொரு ஜாம்பவான்.

2 comments:

  1. இவர்களின் பம்மாத்து வேலையெல்லாம் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பேரு நகரங்களில்தான் எடுபடும் ... நம்ம மக்கள் ஒரு ஆறு மாசம் புது கடை மோகத்தில் அங்கே சென்று பின்னர் அவர்களின் அடாவடி தாங்காமல் புறக்கணித்து விடுவார்கள்

    ReplyDelete
  2. தீபாவளி விற்பனைகள் முடிந்த பின் தான் இவர்களது ஒரிஜினல் வியாபாரம் தெரியும். எப்படியும் தீபாவளிக்கு கல்லா கட்டிவிடுவார்கள். கூட்டமும் அங்கு சொன்னபடி அதிகமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete