Sunday, August 25, 2013

பூரண கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)

வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்கு சரியான விஜய ஆண்டு ஆவணி மாதம் 12ம் தேதி புதன் கிழமை அன்று வரும் கிருஷ்ண ஜெயந்தி பூரண ஜெயந்தி ஆகும். அதாவது ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த பொழுது இருந்த திதி, நட்சத்திரம், லக்னம் மற்றும் யோகங்கள் துல்லியமாக பொருந்தி வருவதை குறிப்பிடுகிறேன். பகவான் பிறந்த அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம், ரிஷப லக்னம் மற்றும் ஹர்சன யோகம் இவையனைத்தும் அன்றிரவு நிகழ இருக்கிறது. கிருஷ்ணன் இதே நள்ளிரவில் சிறையில் பிறந்து தனது தகப்பனாரால் இரவோடு இரவாக நந்தகிராமத்திற்கு யமுனையை கடந்து எடுத்து செல்லப்பட்டார். எனவே சரியாக பொருந்தி வரும் தினமான இந்த நல்ல நாளை அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்க வேண்டும். ஏனெனில் இது போன்றதொரு பூரண ஜெயந்தி நாள் வர பல்லாண்டுகள் ஆகலாம்.      


அதே போல வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினம் வருகிறது. குறிப்பாக முந்தய நாளான 8ம் தேதி மாலை 4:50க்கு தொடங்கி மறு நாள் ஞாயிறு 4:00 மணிக்கு முடிவடைகிறது. பகல் பொழுது அதிகமுள்ள திதியே சிறந்தது என்பதால் ஞாயிற்றுக்கிழமை பகல் 12:00 மணிக்கு மேல் கொண்டாட வேண்டும். காலை நேரம் பூஜைக்கு உரிய நேரமாக இல்லை என்பதை மனதில் கொள்ளவும். சதுர்த்தி விரதம் மதியம் 12 மணிக்கு மேல் விடவும்.

No comments:

Post a Comment