Friday, July 2, 2010

சில சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் "உதிரிப் பூக்கள்"

* "மழலைப் பட்டாளம்" என்ற திரைப்படத்தை இயக்கியவர் நடிகை லட்சுமி

* இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் திரைப்படம் "அவள் ஒரு பச்சைக் குழந்தை"

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் "காக்கும் கரங்கள்". அவரது நூறாவது திரைப்படம் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி"

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் "வளையாபதி"

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் "சக்சஸ்... வெற்றி!"

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் "கல்லுக்குள் ஈரம்"

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் "பணம் பத்தும் செய்யும்"

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த பின்னணி பாடகர் சந்திரபாபு.

* நடிகை சவுகார் ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. கே. பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 வருடங்கள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* அம்மா என்ற திரைப்படத்துக்கு எழுத்தாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருக்கிறார்.

* 1932ல் வெளியான "இந்திர சபா" திரைப்படத்தில் மொத்தம் 72 பாடல்கள்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேட திரைப்படம், சிவாஜி கணேசன் நடித்த "உத்தம புத்திரன்"

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் "ஏழை படும் பாடு"

* கமல்ஹாசனுக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். பிடித்த விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்.

* கல்யாணம் பண்ணிப்பார், செல்லப்பிள்ளை இரு படங்களில் மட்டுமே சாவித்திரி வில்லியாக நடித்தார்.

* 1936ல் திரையுலகத்துக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் 1977 வரை தொடர்ச்சியாக 41 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றினார்.

* ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷ் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டே திரையுலகில் நுழைந்தார்.

* தமிழில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த "மர்மயோகி". எம்.ஜி.ஆர் நடித்த 136 திரைப்படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைத்தது.

* முழுக்க எடுக்கப்பட்டு தீயிலே நாசமான தமிழ் திரைப்படம் "இன்பசாகரன்"

* தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்", "மரப்பசு" ஆகிய இரு நாவல்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தமானவை.

* ஏதாவது ஒரு விருது வாங்க டெல்லிக்கு தொடர்ச்சியாக 11 வருடங்கள் சென்று வந்தவர் நடிகை சாவித்திரி

* தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதரின் தேனிலவு.

* நடிகர் சத்யராஜ் ஒரு திரைப்படத்துக்கு கதை எழுதி இருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் சுயரூபம்.

* கமல்ஹாசன் அரங்கேற்றம் திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.300/-

* கதாநாயகன் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "அவ்வையார்

* 1953ல் வெளியான "திரும்பிப் பார்" திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் நடித்தார். அந்த வருடத்தின் சிறந்த வில்லனாக ஒரு பத்திரிகையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.

* "சண்டிராணி" என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதியவர் பானுமதி.

* தயாரிப்பாளர் உட்பட முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட "ஒரு தலை ராகம்" 33 வாரங்கள் ஓடி அபார சாதனை புரிந்தது

* துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

* நடிக-நடிகையருக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய "ஓடாதே நில்"

* நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்தது தில்லானா மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்.

* வட்டாரத் தமிழ் மொழியில் வசனம் எழுதப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் "மக்களைப் பெற்ற மகராசி"

* நிஜ தம்பதியரான கலைவாணர் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி, மொத்தம் 75 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

* ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினி பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எஸ். வாசனால் இயக்கப்பட்டது.


* 1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

2 comments: