இத்தனை பொண்ணுங்களுக்கு
மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய்...எப்படிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காதகுறையாக
விரட்டி விட்டதை....!!!
நான் அழகா இல்லை
என் ட்ரெஸ் அழகா என
கேட்கிறாய்... உனக்கு பொய்
சொன்னா பிடிக்காது எனத்
தெரிந்தும் சொல்கிறேன்...
நீதாண்டி செல்லம் அழகு...!!
என் பர்த்டே க்கு என்னடா
தரப்போறே என உரிமையோடு
நீ கேட்கும் போதெல்லாம்
உனக்கு என்னையே தர
ஆசையாகத்தான் இருக்கிறது...
ஆனாலும் உன் ஹைஹீல்ஸ்சை
நினைத்தால் தான்
யோசனையாக இருக்கிறது...
ஏன் அவகிட்டே மட்டும்
இளிச்சு இளிச்சு பேசற என
கோபமாகக் கேட்கும்போது
எப்படி சொல்லுவேன்....
உனக்கு முன்னமே
நான் ரூட் விட்ட
ஃபிகர் அவள் என...
எனக்கு இந்த பல் எடுப்பா
இருகாடா.... எனக் கவலையாகக்
கேட்கிறாய்...
எடுப்பாய் இருப்பது பல்
மட்டும் இல்லை என பார்வைதாழ்த்தி
சொல்ல நினைத்தாலும்
உன் கிள்ளல் பொறுக்க முடியாதென
தீர்மானித்து சொல்கிறேன்..
அதாண்டி குட்டி உனக்கு அழகே....!!
என்னப்பா ரொம்ப நாளா கூட்டத்தையே காணோம்!.. இப்பாவாவது சேருதான்னு பாப்போம்..ஹி ஹி ஹி லொல்லு...
ReplyDeleteகவிதை பிரம்மாதம். ஒரிஜினலா? சுட்டதா?
ReplyDeleteNo Karthi, got through mail only..கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்!...
ReplyDelete