என்னாடா டாபிக்கே சரியில்லைன்னு நினைக்கிற மக்காள்.. முழுசா படிச்சிட்டு சொல்லுங்க.
காலை எழுந்தவுடன் படிப்பு.. இதெல்லாம் காலேஜ் முடிக்கிற வரைக்கும்தான். அதுக்கப்புறம் ஒரு வருசமாவது வீட்டில சும்மா இருக்குறது தான் ஸ்டைலு. கரெக்ட்டா அப்பா 7:30 மணிக்கு வேலைக்கு போனதும் டான்னு முழிப்பு வந்துடும் நமக்கு. அப்புறம் சாவகாசமாக குளிச்சு ரெடியாகி ஒரு 7 ரூபாய் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டு (சுயமாகவா சம்பாதிக்கிறோம்.. அப்பாவுதுதானே) ஒரு ஸ்டைலோட வாக்கிங் கிளம்பினம்னா டார்மெண்ட்ரி வந்துடும். யாரும் அந்த நேரத்துக்கு இருக்க மாட்டாங்க. அப்படியே வராதுன்னு தெரிஞ்சும் வரும்ங்கிற நம்பிக்கைல போஸ்ட் ஆபீஸ் வரை போய் லெட்டர் இருக்கான்னு பாத்துட்டு வீட்ல இருந்து கொண்டு வந்த டோக்கன்ல பரமானந்தம் கபே ல ஒரு டீ சாப்பிட்டுவிட்டு திரும்ப அதே டார்மென்ட்ரிக்கு வந்தம்னா (போகிறதுக்கு வேற இடம் இல்லங்குறது வேற விசயம்) அனேகமாக எல்லாரும் வந்து அசெம்பிள் ஆய்டுவாங்க. ஒரு அரை மணி நேரம் வெறும் கடலை போட்டுட்டு எல்லாரும் வந்தாச்சான்னு ஒரு பார்வை பாத்துட்டு ”வாங்கப்பா மேல போலாம்”ன்னு யாராவது ஒருத்தர் ஆரம்பிச்சா வெள்ளாட்டு மந்தை கணக்கா எல்லாரும் மேல போய்ட வேண்டியதுதான். இதுக்கும் மேல இதை யூஸ் பண்ண முடியாதுங்குற ஸ்டேஜ்ல ஒரு 3 கட்டு சீட்டை எடுத்து வி.டி.ஆர் பாய்ண்ட் போட ஆட்டம் ஆரம்பிக்கும். 320 பாயிண்ட்க்கு 5 ரூபா. 8 பேர் சேந்தாலே 40 ரூபாய்தான் கேபிடல். .அந்த 5 ரூபாயை காப்பாத்த இழுக்குற இழுவை ஆண்டவனுக்கு அழுகை வந்துடும். செந்தில், சிசுபால், விடிஆர், சுப்பன், பிருதிவி, தர்மா (கோழின்னு இவனுக்கு எவண்டா பேர் வச்சது?), பன்னீர், அனலு இப்படி பல ஜெனரேசன் கலந்து அடிக்க மேட்ச் விருவிருப்பாய்டும். ஒரு வழியா 5 கை அவுட்டாகி மிச்சம் இருக்குறவங்க சீட்டை வச்சு அவுங்க கேம் ஆட ஆரம்பிச்சுடுவாய்ங்க. மணி 2 ஆகுற போது 2 கை மட்டும் இழுத்துகிட்டு நிக்கும். எவனுக்கும் பசிக்காது. ஒரு வழியா காம்ப்ரமைஸ் ஆகி கைக்காசு குடுத்தோ இல்லை பாகம் பிரிச்சோ ஆட்டம் முடியும்.
அப்பால வீட்டுக்கு போய் செமத்தியா சாப்புட்டு ஒரு தூக்கம் (டயர்ட் ஆய்டும்லப்பா). ஒரு 4 மணிக்கு எழுந்து (கண்டிப்பா நமக்கெல்லாம் காபி கிடையாது) அப்படியே கிரவுண்ட்க்கு வந்தம்னா செக்யூரிட்டி ரூம்ல பதுக்கி வச்சுருக்குற பேட், பேடு எல்லம் எடுத்துகிட்டு ஒரு ஆட்டம் (இந்த ஆட்டத்துக்கு செலவு ஒன்னும் இல்லை. அதிகப்படிய கடலை மிட்டாய்தான்). அப்புறம் கைகால் எல்லாம் கழுவிட்டு நேரா கிளப்புக்கு வந்தா எல்லா பேப்பரும் படிக்க வேண்டியது (எனக்கு தெரிஞ்சு காலைல படிக்க வேண்டிய பேப்பரை எல்லாம் சாயங்காலம் படிச்ச கோஷ்டி உலகத்திலேயே நாம மட்டும்தான்). அப்புறம் இருட்டினதுக்கு அப்புறம் கிளப்புக்கு வெளிய இருக்குற தொட்டில உக்காந்துகிட்டு ஊர் கதை பேச வேண்டியது. 9 மணிக்கு மேல கிளப் மூடிடுவான். அதனால அதுக்குள்ள கிளம்பி வீட்டுக்கு போய் அப்பா ஆரம்பிக்குறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சு கேட்டும் கேட்காத மாதிரி தூங்கிட வேண்டியது. அடுத்த நாளும் அதே வாழ்க்கை.
இந்த பீரியட்ல நம்மளை பார்த்து அனேகம் பேர் மனசில நினைச்ச ஒரு விசயம் என்னன்னா??? டைட்டிலை படிங்கப்பா..........
excellent post karthi!..சிரிச்சு சிரிச்சு புண்ணாயிடிச்சு!லாங் லாங் அகோ சோ லாங அகோ என்று அழைக்கப்படுகிற சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை!! but எப்ப கேட்டாலும் சலிக்காது...
ReplyDeleteசீட்டு கட்டு ராஜக்கள் ன்னு சொன்னா, நீ, செந்தில், தர்மராஜ் & அனல் தான்..லெப்ட் ரைட் சென்டர்ன்னு போட்டுத் தாக்கீருவீங்க...
நான் பராக்கு பாக்கிறதோட சரி! but அப்ப ஒவ்வொருத்தரும் அடிக்கிற லந்து செமயா இருக்கும்..so அதுக்காக ஒரு கூட்டம் கூடும்..
நம்ம குவாரி செட்டுல(பெரிய சேவிங் செட்டு தான்) எல்லாரும் எதயாவது உருட்டிகிட்டு தான் இருக்கோம்..யாரும் உருப்படாம போகல...!!! ஹி ஹி ஹி
ஒரு சிகரெட் அட்டையிலேயே 8 பேருக்கு பாயிண்ட் போடற திறமை நம்ம விடிஆர்க்கு மட்டும்தான் உண்டு. இன்னும் இந்த லிஸ்ட்ல கிருஷ்ணகுமார், முருகன்னு சீனியர் செட்டெல்லாம் இருக்கு.
ReplyDeleteஉக்காந்து உக்காந்தே அந்த ஏரியாவே பளபளன்னு ஆயிடுச்சு. மொசைக் போட்டாக்கூட இவ்வளோ பாலீஷ் வராது... ஹா..ஹா..
Maapley!
ReplyDeleteur presentation very gud..,and funny.. in 904 murugesan , (my neighbour & my cricket team captain) is best and rummy i think krishnakumar is best..i play very very little.. karuvachi always play very serious and play too long in a game.., but finally sure he loose. VDR & me beginning of the game sure loose.. maapley i think mostly @ middle of the game...
மாம்ஸ் கிருஷ்ணகுமார் நல்லா விளையாடுவாரு. ஆனால் கடைசி வரை இழுத்து ஒன்னு மொத்த காசும் எடுப்பார்.. இல்லாட்டி விட்டுடுவாரு.. பிரிக்கிற வேலையே கிடையாது.
ReplyDeleteசீசன் டைம்ல (தீபாவளி, பொங்கல்) ஊருக்கு வரும் எங்க அண்ணன், ராம்குமார் எல்லாரும் சேர்ந்து 5 ரூபா ஆட்டத்தை 10 ரூபாய்க்கு ஏத்தி விட்டுடுவாங்க. ராமசுப்புவும் நல்லா விளையாடுவாப்ல.
hi annal, how are you! good to see you here!
ReplyDeleteஅப்புறம் கார்த்தி..இந்த தடவையும் ரமதான் correct டா friday தான் வருது..வேற எதாவது நாளா பாத்து வந்தா ஒரு நாள் extra leave கெடைக்கும்னு பார்த்தா அதுக்கும் ஆப்புதான் போல..
anyway advance happy Eid to you all!