Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்!

கே பாலசந்தர் இயக்கிய பூவிலங்கு படத்தின் மூலம் (1984) தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன படம். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. ohh...just now i also read in paper...very sad news..he is so young....but he is good hearted guy..may his soul rest in peace!

    ReplyDelete
  2. கார்த்திகேயன்September 9, 2010 at 8:08 AM

    எனக்கு தெரிஞ்சு அறிமுகமான முதல் படத்திலயும் காலேஜ் ஸ்டூடண்ட் கடைசி படத்திலயும் காலேஜ் ஸ்டூடண்ட். நல்ல பெர்ஃபார்மர். புகைப்பழக்கத்தினால் உயிர் போய்விட்டது.

    ReplyDelete
  3. yea..today the great singer Sornalatha also died due to heart attack...shocking news though..
    i think this month is not a good month! (9/11!!)

    ReplyDelete
  4. Not heart attack machi. Due to lungs problem. She also not married. So she may aware about that problem. So nice voice. We missed a great singer.. i lover her solo songs and those are always in my favorite list.

    may her soul rest in peace!

    ReplyDelete