நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில் என்னுடன் கல்யாணசுந்தரம் என்றொருவன் படித்தான். இருவரது பெயரும் ’க’ வில் வருவதால் அனேகமாக எல்லா கிளாஸ்களிலும் என் பேட்ச்சிலேயே இருபபான். பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாது. நானும் அந்த கேட்டகிரிதான். எனவே ஒப்பீட்டளவில் அவனை இந்த விவாதத்தில் எடுத்துக்கொள்கிறேன். அய்யர் வீட்டு பையன். சிறந்த வாய்த்துடுக்கானவன். யாரிடமும் பேசி ஜெயிக்க வல்லவன். பல அரியர்கள் வைத்திருந்தான். ஷோக்காளி. நாங்களெல்லாம் அங்கே ரூம் எடுத்து தங்கி படித்துவந்தவர்கள். ஆனால் கலயாணமோ அதே ஏரியாக்காரன் என்பதால் வீட்டிலிருந்து தான் வருவான். எங்களை விட அவனுக்கு உள்ளூரில் தெரிந்த முகங்கள் அதிகம். இருப்பினும் லூட்டி அடிப்பதில் அனைவரையும் மிஞ்சினான். கண்டிப்பாக வாழ்க்கையில் இவன் சிரமப்படுவான் என நான் நினைத்தது உண்டு. ப்ராஜெக்ட் சமயங்களில் கூட காப்பி அடித்தே பாஸ் செய்தான். நாங்கள் இருவருமே படிப்பை முடிக்கும் சமயம் ஓரிரு அரியர்களுடன் தான் வெளியே வந்தோம்.
அதன் பிறகு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் மிகவும் சிரமப்பட்டு எனது அரியரான கணிதத்தை கிரி அண்ணாவிடம் ட்யூசன் போய் படித்து பாஸ் செய்தேன். அதன் ரிசல்ட் வரும் சமயம் மார்க் ஷீட் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது அவனை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே நல்ல கலராக இருக்கும் அவன் இன்னும் பாலீஷாக இருந்தான். கூலிங் கிளாஸ் வேறு. கெட்டப்பே மாறி இருந்தான். அவனை தூரத்தில் பார்த்தபோதே அவன் கண்டிப்பாக இம்முறையும் பெயிலாகி இருப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் 5 பேப்பரையும் ஒரே ஸ்ட்ரோக்கில் பாஸ் செய்திருந்தான். கொஞ்சல் கூட அலட்டலே இல்லாமல். சரி... வெட்டி ஆபீசராக இருந்திருப்பான்.. அதனால் படிக்க நேரம் கிடைத்திருக்கும் என நினைத்து அவனிடம் போய் பேசினேன். பெரிய அதிர்ச்சி என்னவெனில் அவன் அசோக் லைலாண்ட் (ஓசூர்) கம்பெனியில் சொல்லிக்கொள்ளும்படியான உத்தியோகத்தில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தான். இது எப்படி சாத்தியம் என குழம்பினேன். அவனுடன் நான் 2 மணி நேரங்கள் அன்று செலவிட்டேன். எந்த கருத்திற்கும் எதிர் வாதம் செய்யும் அவன் எப்படி செட்டில் ஆனான்? அவனுக்கு உதவிகள் எப்படி கிடைத்தது. இத்தனைக்கும் அந்த கம்பெனியில் அவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நண்பர்களும் கிடையாது. எப்படிடா அந்த வேலை உனக்கு கிடைத்தது என கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு பயோடேட்டாவை தயார் செய்து பல காப்பிகள் எடுத்து பேப்பரில் வரும் விளம்பரங்களை பார்த்து அப்ளை செய்து கொண்டே இருந்தானாம். ஓசூரில் லைலாண்ட் கம்பெனியில் தினக்கூலி அடிப்படையில் ஒரு வேலை கிடைக்க உற்சாகமாக கிளம்பிவிட்டான். அங்கு போயும் சும்மா இருக்கவில்லை. இவனது எதிர்மறையான எண்ணங்களின் விளைவாக எல்லோரிடமும் உத்தியோகம் சம்பந்தமாக முரண்பாடான கேள்விகளை எழுப்ப நீண்ட நாட்களாக அவர்களால் கண்டறிப்படாமல் இருந்து ஒரு தவறை போகிற போக்கில் கண்டுபிடித்திருக்கிறான். உடனே அவனை கம்பெனி QC யாக்கி விட்டார்கள். உருப்படியாக வாழ்க்கையில் செட்டில் ஆக மாட்டான் என நான் நினைத்தது முற்றிலும் தவறாகி விட்டது. ”இறைவன் எல்லா உயிர்களுக்கும் உணவை படைத்திருக்கிறான். ஆனால் அந்த உயிர்களின் கூட்டில் அல்ல” என்பது எனக்கு உறைத்தது. அதுவரை எனக்குள் இருந்த சில கோக்குமாக்குகளை சரிசெய்யத்தொடங்கினேன். கோவில்களுக்கு செல்லவும் ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். எனக்குள் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தேன். தெளிவு பிறந்தது.
முரண்பாடுகளே முன்னேற்றத்திறகான வழி. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை – கண்ணதான்.
wow..fantastic karthi...really very much impresed..you have narrated in a beautiful manner..
ReplyDeleteyeah..as u said each individual is having their own good charecters....but only one thing you need in the life to get move forward...that is INITIATIVE...
just you have to give your try..dont give up at anytime...
சரவணா.. ஏன் என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்கவேண்டும் என சொல்ல வருகிறேன். எல்லோரிடமும் எல்லா நேரத்திலும் ஏன் என்கிற கேள்வி பயனளிக்காது. நமக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இலக்கை அடைந்தபின்பும் கூட....
ReplyDelete