வழக்கில் மறுவிவிட்ட தமிழ் பெயர்கள் (சில நெட்டில் சுட்டவை)
பொழில்வாய்ச்சி - பொள்ளாச்சி
குளித்தண்டலை - குளித்தலை
கோவ நாயக்கன் புத்தூர் – கோவன் புத்தூர் - கோயம்புத்தூர்
சென்னப்ப நாயக்கன் பட்டினம் – சென்னை
ஹேமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் பாலம் – பார்பர்ஸ் பிரிட்ஜ்
கருவூர் – கரூர்
ஸ்ரீவலம்வந்தபுரி – சீவலப்பேரி
சோழன் உவந்தான் – சோழவந்தான்
மயிலாடுதுறை – மாயவரம்
சிராப்பள்ளி – திருச்சிராப்பள்ளி
வடவழி - வடவள்ளி, கோவை
சுந்தரபாண்டிய நல்லூர் – சூரலூர் – சூலூர்
அரும்புக்கோட்டை – அருப்புக்கோட்டை
சித்தர் அன்னவாயில் – சித்தன்னவாசல்
இட்டவி (மாவை இட்டு அவி) – இட்டலி – இட்லி
கைகடிப்பட்டிணம் – கடியப்பட்டிணம் (முட்டம்)
சிங்கம்பிடாரி – சிங்கம்புணரி
ஆன் பொருணை நதி – அமராவதி ஆறு
உப்பு இட்ட மங்களம் – உப்பிடமங்கலம்
கால் நாடு காத்தான் – கானாடுகாத்தான்
ஒப்பிலா அப்பன் – உப்பிலியப்பன்
திருஎவ்வுள் – திருவள்ளூர்
பண்டாரெட்டிப்பாளையம் – பண்டாரெட்டி – பண்ணுருட்டி- பண்ருட்டி
சுழியல் – திருச்சுழியல் – திருச்சுழி
திருவரங்கம் – ஸ்ரீரங்கம்
தூற்றிக்குடி – தூத்துக்குடி
வீரச்சாலை – விரையாச்சிலை – விராச்சிலை
சாலை கூடி – சாயல்குடி
கூவலூர் – கூகலூர்
பழம் நீ – பழனி
ஆரைக்கல் - நாமக்கல்
தில்லைவனம் – சிதம்பரம்
கடம்பவனம் – மதுரை
வேணுவனம் – திருநெல்வேலி
ஆர்க்காடு – ஆற்காடு (ஆத்தி மரங்கள் நிறைந்த காடு)
ஏரிக்காடு – ஏற்காடு (ஏரிகள் நிறைந்த காடு)
பைம்பொழில் – பம்புளி (குற்றாலம்)
திருவிடைச்சுரம் – திருவடிசூலம்
கஞ்சிவரம் – காஞ்சிபுரம்
இன்னும் உங்களுக்கு தெரிந்தவைகளை இடுகையில் இடலாம்
பூவிருந்தவல்லி - பூந்தமல்லி
ReplyDeleteதிருமறைக்காடு - வேதாரண்யம் (திருமறை - வேதம் & காடு - ஆரண்யம்)
உதகமண்டலம் - ஊட்டி
தில்லை - சிதம்பரம்
உலகத்திலேயே எந்திரன் படம் ரிலீஸ் ஆகாத ஒரே ஒரு ஊரு நம்ம கரூர் தான். ஆம் நண்பர்களே! பக்கத்தில் இருக்கும் வேலூர், குளித்தலையில் கூட ரிலீஸ் ஆகிவிட்டது. கரூரில் ரிலீஸ் இல்லை.
ReplyDeleteHappy Gandhi Jeyanthi!
ReplyDeletenice information karthi...
what!!..Enthiran not released in Karuvur!!
i heard from the reviews that it would be a mega hit..will wait for this week to see the actual result!
ஆமா மாப்ளே... படத்தை லோக்கல் பாலிடிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணாம விட்டுட்டாங்க.. எல்லோரும் வேலூர், குளித்தலை போய் பாத்துகிட்டு இருக்காங்க.
ReplyDeleteஒரு வழியா கரூர் அவுட்டர்ல இருக்குற வெங்கமேடு ஏ1 & ராமானூர் வெற்றி டூரிங் டாக்கீசில் வெற்றிகரமாக இன்று எந்திரன் வெளியிடப்பட்டது.
ReplyDeleteகொடி கானல் - கொடைக்கானல்
ReplyDelete