தலைப்பை பார்த்ததும் நெற்றியை சுருக்குபவர்களே பலர். ஆனால் இந்த செருப்பினை பற்றி நிறைய நாட்கள் நான் மனதில் நினைத்தது உண்டு. என்னடா செருப்பை பற்றிய ஒரு தலைப்பில் கட்டுரையா என நினைக்கும் நண்பர்களே! பரதன் காலத்திலும் சிண்ட்ரெல்லா கதையிலும் இப்படி பல இடங்களில் செருப்பின் மகத்துவமும் முக்கியமும் இருந்திருக்கிறது.
ஒருவரை கேவலப்படுத்த வேண்டுமெனில் அனைவரும் சொல்லும் வாக்கியம் செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை என்பதுதான்.
மிகச்சின்னசிறு வயதில் நான் செருப்பெல்லாம் போட்டிருந்தேனா என்று எனக்கு சரிவர நினைவில்லை. ஆனால் செருப்பினை முதன் முதலில் ஆவலுடன் பார்த்தது பஞ்சாயத்து ஸ்கூலில் அரசாங்கம் இலவசமா கொடுத்த ஒரு ஜோடி தோல் செருப்புதான். வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் கூட இந்த செருப்புதான் அனேகரின் அடையாளங்கள். ராணி மெய்யம்மை வந்ததிற்கு பிறகு கட்டாயமாக நான் ஷுவிற்கு மதமாற்றம் ஆகிவிட்டாலும் கூட செருப்பின் மீது எனக்கு ஒரு காதல் இருந்து கொண்டே இருந்தது.
உயர் நிலை பள்ளி வாழ்க்கையில் ஷூவை நம்மில் அனேகரும் விரும்பவில்லை. சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் கழற்றி வைத்து விடுவோம். முதலில் லெதர் ஷூ பிறகு அதிலும் பிளாஸ்டிக் வந்து சேர்ந்தது. சுதர்சன் முதலில் கழுவும் வகையில் பிளாஸ்டிக்கா இல்லை ரப்பரா என தெரியாத நிலையில் ஒரு ஷூவை வாங்கி வந்து 9 வது படிக்கும் போது காண்பித்தான். அதை பார்த்து எல்லோரும் அதே போல் வாங்கிக்கொண்டோம். கிரிக்கெட் விளையாடும் போது கூட யாரும் ஷூ போட்டுக்கொண்டதில்லை. செருப்புதான்.
10 வது முடித்ததும் நான் செட்டி நாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர்ந்தேன். முதன் முதலில் எனக்கென்று சில பொருட்கள் வாங்குவதற்கா காரைக்குடி பஜாருக்கு போனேன். நம்ப மாட்டீர்கள். நான் முதலில் வாங்கியது எனக்கென ஆசையாய் ஒரு குவாடிஸ் டைப் செருப்புதான். சரவணனும் கதிரேசன் மாமாவும் குவாடிஸ் டைப்தான் போட்டிருப்பார்கள். எனவே அதே போல் தேடியலைந்து வாங்கினேன். ஆனால் தோல் செருப்பு என்பது ரொம்ப நாள் எனக்கு ஒத்து வரவில்லை. தினமும் சைக்கிளில் 6 கிமீ போய் படிக்க வேண்டி இருந்ததால் செருப்பு அடிக்கடி பிய்ந்து விடும். அதனால் அதற்கப்புறம் ரப்பர் செருப்பையே போட்டு வந்தேன். படித்து முடித்து முதன் முதலில் கரூரில் வேலைக்கு சேர்ந்து நான் வாங்கிய 750 ரூபாய் சம்பளத்தில் அப்பாவிற்கு ஒரு வேஷ்டியும் எனக்கு ஒரு செருப்பையுமே முதன் முதலில் வாங்கினேன். 100 ரூபாய்க்கு ஒரு செருப்பு என்பதே அப்பொழுதெல்லாம் ஒரு கனவாக இருந்தது.
பின்பு படிப்படியாக வேலைக்கு போக ஆரம்பித்து எனக்குள்ளே பணம் சேரும்பொழுதெல்லாம் நான் வாங்கும் பொருளில் முதலில் செருப்பே இருக்கும்.
என்னதான் வாசலிலேயே கழற்றிவிடக்கூடியதாக இருந்தாலும் என்னைப்பொருத்தவரை செருப்பு மிக அந்தஸ்தானதே.
machi...superb..the way you have written is excellent..
ReplyDeletenalla eluthu nadai...
நன்றி சரவணா.. நமது ப்ளாக் ஆரம்பித்து 2 வருடம் முடியப்போகிறது. ஆச்சர்யமாக உள்ளது.
ReplyDelete