சசிகுமார் – இந்த ஒரு வார்த்தைக்காகவே நம்பி போன என்னை மாதிரி எத்தனையோ பேர்களை – அடப்போப்பா..
சரக்கு டம்ளர்குள்ள ஊத்துற ஒயினை வேற ஆங்கிள்ல கிராபிக்ஸ் பண்ணி டைட்டில்ல போடும்போது என்னமோ சொல்லப்போறார்னு பார்த்தால் கடைசி வரை சரக்கு கடைக்குள்ளேயே படத்தை எடுத்து முடிச்சிருக்கிறார்.
கதை – என்ன கதை? ஒரு காலத்திலே விஜய்யோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரெகுலராக எடுத்துக்கிட்டு இருந்த மொக்கை கதைதான். அக்காவை கொன்னவங்களை தம்பி பழி வாங்குறான். ஆவ்வ்வ்வ்....
ஒரே ஆறுதல் இசையும், கேமிராவும். பைக் விபத்தில் அடிபடும் கோணத்தில் கண்களில் இருந்து வரும் ரத்தம் சிலிர்ப்பு. மத்த எல்லா சீன்களும் கடுப்பு. ஒவ்வொரு முறையும் பப், பார்ன்னு காட்டும்போது ரெகுலர் குடிகாரங்ககூட அட போய்யான்னு சொல்றது தியேட்டர்குள்ளேயே கேட்குது.
ஹீரோவும் கிடையாது, ஹீரோயினும் கிடையாது. காமெடிக்கு... எல்லாருமே கிட்டத்தட்ட காமெடியன் தான். க்ரைம் நாவல்களில் ராஜெஷ்குமார் ஸ்டைலில் சில வெவ்வேறு தளங்களில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதை பயணிக்கும், கடைசியில் 3 தளங்களையும் ஒரே அலை வரிசையில் இணைப்பார். அந்த டெக்னிக்கை இயக்குநர் ஓவர் வன்முறையோடு, சொல்லி இருக்கிறார்.
புழுதி பறக்கும் மதுரைத் தெருக்களில் நின்று, சுப்பிரமணியபுரம் கதை சொன்ன சசிகுமார், இந்த முறை சென்னையின் பளபளப்பான கட்டிடங்களையும் கனவுலகம் போன்ற நட்சத்திர ஹோட்டல்களையும் பப்களையும் சுற்றிக் கதைக் களத்தை அமைக்கிறார். பின்னிரவு பார்ட்டிகள், அவற்றில் உல்லாசம் தேடும் இளசுகள், போதையில் அமிழும் பெண்களைத் துரத்தும் பையன்கள் என்று தொடங்கும் கதை மெல்ல மெல்ல விரிந்து அரசியல் களத்துக்கு இடம் பெயர்கிறது. தெய்வநாயகம் (ஏ.எல். அழகப்பன்) என்னும் சக்தி வாய்ந்த அமைச்சரின் பையன் செழியன் (வைபவ்). அமைச்சரின் வலிமையைப் பயன்படுத்தி வைபவும் அவன் நண்பர்களும் இஷ்டத்துக்கும் ஆட்டம் போடுகிறார்கள். ரேஷ்மா (அபர்ணா) என்ற பெண்ணை ஒரு பப்பில் பார்க்கும் செழியன் அவள்மீது காதல் கொள்கிறான். விரைவிலேயே அவளும் காதல்வயப்படுகிறாள். (நல்லவேளை டூயட் எல்லாம் கிடையாது)
இதற்கிடையில் ஒரு காண்டிராக்ட் விஷயமாக அமைச்சருக்கும் பெரிய தொழிலதிபருக்கும் முட்டிக்கொள்கிறது. அந்தத் தொழிலதிபரின் பெண்தான் ரேஷ்மா. இந்த விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணை வைத்தே தொழிலதிபரை வழிக்குக் கொண்டுவர அரசியல்வாதி திட்டமிடுகிறார். சாமர்த்தியமாகக் காய் நகர்த்தும் அமைச்சருக்கு இதில் வெற்றி கிடைக்கிறது. திருமணம் என்ற உற்சாகத்தில் செழியன் மிதக்கும்போது எதிர்பாராமல் தாக்கப்படும் அவன், மர்மமான முறையில் காணாமல் போகிறான்.
அமைச்சர் ஆவேசம் கொண்டு அவனைத் தேட போலீஸ் கமிஷனரை ஏவுகிறார். நேர்மையான அதிகாரியான துணை கமிஷனர் சங்கையாவிடம் செழியனைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. சங்கையாவின் புலனாய்வு வெற்றி அடையும் சமயத்தில் தன் பையனின் கதியை அறியும் அமைச்சரால் ஆபத்து வருகிறது. செழியனின் கதி என்ன, அவனை யார் தாக்குவது? அதன் பின்னணி என்ன? யார் ஈசன்? சங்கையாவுக்கும் அமைச்சருக்குமான மோதலில் வெல்வது யார்? இதுதான் கதை.
சங்கையாவாக சமுத்திரகனி. சூப்பர் நடிப்பு. உடல் மொழியும் அசத்தல். அந்த சின்னப்பையன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அபினாயா இந்த படத்துக்கு பெரிசா தேவையில்லை. சென்னையின் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என எண்ண வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சசி இயக்குனராக ஜெயிக்க இன்னும் நல்ல கதை வேண்டுமே!
வன்முறை அதிகம். ஒரு முறை பார்க்கலாம்.
mmm..good narration karthi..
ReplyDeletei think "man madhan Ambu" could be the only movie we can watch...
அதுவும் சொம்பு ஆயிட கூடாது.. ஹி ஹி ஹி
டிசம்பர் மாசம் கரூர்ல மழை பெய்யுது மச்சி. குளோபல் வார்மிங்.. எல்லாரும் மரம் வளர்க்கனும்.
ReplyDelete