Tuesday, December 21, 2010

மச்சங்களும் அதன் பலன்களும்

நானும் ஜோசியமும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன். ஆனால் அதில் சொல்வதற்கு நிறைய இருப்பதால் இப்பொழுது நேரமில்லை. எனவே மச்சத்தை மட்டும் எழுதி இருக்கிறேன்.

நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ அமைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.

கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் பெண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் அளிக்கும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் இந்த மச்சத்திற்கும் சாமுத்திரிகா லட்சணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் பல நேரங்களில் இந்த இரண்டு அம்சத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டது உண்டு. உயரமானவர்கள், குட்டையானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், நெற்றியில் ரேகைகள், கண்கள், நமது சாதாரண பார்வைக்கு தெரியும் மச்சங்கள், முடி, கூந்தல் அமைப்புகள் இவை அனைத்தையும் வைத்து நட்சத்திரம் அல்லது ராசியை கிட்டத்தட்ட நெருங்கி விடுவேன். ரத்த வகை, குணாதியங்களை கண்டறிந்த பின்பு எனக்கு கைரேகை பார்ப்பது என்பது அல்வா சாப்பிடுவதை போல. ஏனெனில் என்னை டெஸ்ட் பண்னத்தான் எதிராளி வந்திருக்கிறான் எனபதைக்கூட கண்ணையும் நெற்றி ரேகையையும் வைத்து கண்டுபிடித்துவிடுவேன்.

கீழ்கண்ட மச்ச பலன்கள் கிட்டத்தட்ட சரியானவை. அவரவர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ளவும். சிகை பலன்களை தனிப்பதிவாக தருகிறேன். காத்திருக்கவும்.

பெண்களுக்கான மச்ச பலன்
நெற்றி நடுவே - புகழ், பதவி, அந்தஸ்து வாய்க்கும்
நெற்றி வலதுபுறம் - தைரியம், பணிவு இல்லாத போக்கு இருக்கும்
நெற்றி இடதுபுறம் - அற்பகுணம், முன்கோபியாவாள்
மூக்கின் மேல் - செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு, பெண்களால் அவமானம் உண்டாகும்
மூக்கின் நுனி - வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் - ஒழுக்கம், உயர்ந்த குணம் (கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்)
மேல் வாய் பகுதி - அமைதி, அன்பான கணவர் கிடைக்கு
இடது கன்னம் - வசீகரம், விரும்பியதை அடைவாள்
வலது கன்னம் - படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் (இரத்த கொதிப்பு வரும்)
வலது கழுத்து - பிள்ளைகளால் யோகம்
நாக்கு - வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் - கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் - சொத்து சேர்க்கை, தயாள குணம் இருக்கும்
தலை - பேராசை, பொறாமை குணம் கொண்டவள்
தொப்புளுக்கு மேல் - யோகமான வாழ்க்கை (கணவன் அதிருஷ்டசாலி)
தொப்புளுக்கு கீழ் - மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் (கணவன் துரதிருஷ்டசாலி)
தொப்புள் - ஆடம்பரம், படாடோபம்
வயிறு - நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு, குறி - ராஜயோக அம்சம், உயர்பதவிகள் (நிர்வாகத்திறமை)
இடது தொடை - தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், முடிவெடுப்பதில் குழப்பம்
வலது தொடை - ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை, தலைக்கணம்
புட்டங்கள் - சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை (தலைமை பொறுப்புக்கு ஏற்றவள்)


ஆண்களுக்கான மச்ச பலன்
புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுளை கொண்டவன்
நெற்றியின் வலது புறம் – தனயோகம் கொண்டவன்
வலது புருவம் – திருமணத்திற்கு பின் / மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம் வரும்
வலது கண் - நண்பர்களால் உயர்வான்
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம் கொண்டவன்
இடது புருவம் - ஏற்ற, இறக்கமான வாழ்க்கை / செலவாளி
மூக்கின் மேல் - சுகபோக வாழ்க்கை கொண்டவன்
மூக்கின் வலதுபுறம் - நினைத்ததை அடையும் அம்சம் கொண்டவன்
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு / பெண்களால் அவமானம் வரலாம்
மூக்கின் நுனி - ஆவணம், கர்வம், பொறாமை, தலைக்கணம்
மேல், கீழ் உதடுகள் - அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) - செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் (இவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்)
வலது கன்னம் - வசீகரம், தயாள குணம் கொண்டவன்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு இருக்கும்
வலது காது நுனி - சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி - தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே - பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை - திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் - சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு - ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு - பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு - பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு, குறி - திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை, தாம்பத்ய சுகம்
புட்டம் - அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு வரும்

7 comments:

 1. wow...very intresting..good post karthi..i know this topic is your favourite one...
  i am expecting more episodes from you..!

  ReplyDelete
 2. sure saravana.. i gonna post my experience soon.

  ReplyDelete
 3. கார்த்திகேயன்December 22, 2010 at 10:59 AM

  தனிப்பட்ட முறையில் உப்பை சாப்பிட்டால் கரிக்கும். அதுவே சமையலில் சேர்த்தால் ருசியாகும். அதுபோலத்தான் ஜோசியமும். ஒரே ஒரு பாயிண்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக சொல்லக்கூடாது. பல விசயங்களையும் ஆராய வேண்டும். உயரத்தை கணிக்க வேண்டும். பின்பு மச்சம், முக ரேகைகள், கை ரேகைகள், ஜாதகம் குறிப்பாக நடப்பு தசாபுத்திகள், யோகபலன்கள், உச்ச நீசங்கள், கிரக சேர்க்கைகள் இப்படி எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போதுதான் சரியான விடை கிடைக்கும்.

  அதை விடுத்து குருட்டாம்போக்கில் ஒரே ஒரு விசயத்தை மட்டும் பார்த்து பலன் சொல்லக்கூடாது.

  சாதாரண தலைவலிக்கு பின்பு பெரிய கட்டி இருக்கலாம். அல்லது தூக்கம் விழித்தால் கூட தலைவலி வரும். எனவே தலைவலிக்குண்டான சரியான காரணத்தை ஆராய்ந்தே மருந்து உண்ண வேண்டும். சரிதானே சரவணா...

  ReplyDelete
 4. கார்த்திகேயன்December 22, 2010 at 11:14 AM

  ஸ்ரீராம்க்கு வலது மார்பில் பச்சை மச்சம் இருக்கும். இது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆகும். இவ்வகை மச்சம் கொண்டவர்கள் மீனைப்போன்றவர்கள். உறக்கத்தைக்கூட விடுத்து உழைப்பார்கள். மிகுந்த பாசம் கொண்டவர்கள். ஏக்கங்களும் இருக்கும். உணவை இரசித்து உண்பார்கள். நிறைய பயணங்கள் மேற்கொள்ளுவார்கள். பயணங்களை ரசித்து செய்வார்கள். மிகுந்த முன் யோசனைக்காரர்கள். தான் செலவாளிகள்.

  சரியா ஸ்ரீராம்? வீட்டம்மா எப்படி இருக்காங்கப்பா?

  ReplyDelete
 5. பங்காளி ரமேஷ்க்கு கீழ் தாடை மச்சம் இருக்கும். அதில் முடியும் இருக்கும். சரியா பங்க்ஸ்? அந்த மச்சம் உன்னால் காண முடியாது. கண்ணாடியால் மட்டும் பார்க்கலாம்.

  அந்த மச்சம்தான் இவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும் சாவி.

  ReplyDelete
 6. wow...you are explaining with real time examples..yea i agree we should not blindly believe all this..

  but i believe there is a scientific fact behind all these...

  ReplyDelete
 7. எனது வயறு பகுதியில் தொப்பில்க்கு மேல் மச்சம் உள்ளது அதற்கு என்ன பலன் ?

  ReplyDelete