Wednesday, April 29, 2009

மற்றும் ஒரு கவிதை!

Software Bug!

மீண்டும் மனிதன்
உலகம் தட்டை என்று
சொல்லும் காலம் வந்துவிட்டது..
ஒரு படித்த
கணிப்பொறி இளைஞனின்
புவியியல் சொல்கிறது..
உலகத்தின் பரப்பு 14 அங்குளம்..

இன்று மாலை
உயிர் நண்பனின்
திருமண வரவேற்புவிழா..
வழக்கம் போல் செல்ல முடியாது..
ப்ராசெக்ட் டெட்லைன்..
இமெயில் தான் அக்ஷ்தை
தூவ வேண்டும்..

இரவு உணவிற்கு
காத்துக் கொண்டிருக்கும் குடும்பம்..
செல்ல முடியாது..
மீட்டிங்..
தொலைபேசியில் மனைவியை
சமாதானப்படுத்த வேண்டும்..

மனைவியின் கைபிடித்ததைவிட
மெளசை பிடித்ததே அதிகம்..
பிள்ளைகளின் விரல் தொட்டு
ஸ்பரிசித்ததைவிட
கீபோர்டை ஸ்பரிசித்ததே அதிகம்..

சூரிய வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு..
பொருட்களை பார்க்கையில்
கண்கள் இருண்டுவிடுவதைப் போல..
கணிப்பொறித்திரையையே
பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள்..
குடும்பத்தை பார்க்கையில்
உறவுகள் இருண்டுகிடக்கின்றன..

சிலர் கடமைகளுக்காக..
சிலர் கனவுகளுக்காக..
வாரத்தில் ஏழு நாளும்
வாழ்க்கையை
விற்க தொடங்கிவிட்டோம்..


தொழிற்நுட்பம் மனிதனின் அடுத்த
மதமாகிவிட்ட நிலையில்..
மென்பொருள் பொருளாதாரத்தின்
வேதமாகிவிட்டது..

டாலர்களுக்காக 20 மணிநேரம் தேய
கண்கள் தயாராகிவிட்டது..
நம் ஒவ்வொருவர் வீட்டுத்
திண்ணையிலும் முற்றத்திலும்
வாழப்படாமல் வாழ்க்கை மீந்து
கிடக்கிறது..

எதற்கித்தனை பொருளீட்டு..
மனமே..
நிலாசோறுக்கு ஆசைபடு
நிலவுக்கே போய் சோறுண்ண
ஆசை வேண்டாம்..

நாம்
உறவுகளைவிட்டு பயணப்பட்டு
வெகுதூரம் வந்துவிட்டோம்..
வயிற்றுக்கு மேலே கொஞ்சமேனும்
இதயம் இருந்தால்..
உடனடியாக அலுவலகத்தைவிட்டு
வெளியே வாருங்கள்
பொடிநடையாக வீட்டை
நோக்கிச் செல்வோம்.

மனிதா..
நாம் வாழ்க்கை கரையில்
சில்லறைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம்..
நம் சட்டைப் பையிலிருந்து
கிளிஞ்சல்கள் கொட்டிக்கொண்டிருப்பதை
கவனிக்காமல்...

Monday, April 27, 2009

மே தினம்

இந்த வாரத்தில் மேதினம் வருகிறது. அனைவருக்கும் மேதின நல்வாழ்த்துக்கள். காரல்மார்க்ஸ் என்னும் உன்னதமான தலைவரால் தினம் 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்று இறுதி செய்யப்பட்ட நன்னாள். 1889 ஜூலை 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின்படி மே 1 முதல் தினமும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட்டது. வாழ்க மார்க்ஸியம்.

Tuesday, April 14, 2009

(பழைய) தமிழ் புத்தாண்டு & Easter வாழ்த்துக்கள்!

இணையதள நண்பர்கள் அனைவருக்கும் இனிய (பழைய)தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!. இந்தவருடம் இனிய வருடமாக அமைய கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

என்னதான் தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்டாலும் எனக்கு என்னவோ அதில்உடன்பாடு இல்லை. நான் ஸாஃப்ட்‌வேர்இல் இருப்பதாலோ என்னவோ லாஜிக் இல்லா எந்த விஷயத்தையும் எளிதாக ஏற்க முடிவது இல்லை. என்னை பொறுத்த வரையில் புது வருடம் என்பது முதல் மாதத்தின் முதல் நாள். ஆதலால் ஏன் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? இதுதான் என் கேள்வி!

ok anyway i dont want to get into this controversy...i feel it depends on each individuals!!

ok friends!! புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்

Sunday, April 5, 2009

Prayer for Bobby

hi alll!!
Its really a shocking news that i heard from karthi that Bobby Prasath met with an accident recently.

I was worried and saddened a lott!!.. But luckily karthi told me that "Nothing to worry but he got fractured on both his legs".

I know Bobby very well.. and he is such a charming guy!.. always speaking with smile in his face...

Let us all pray for his speedy recovey and come back to his normal life as early as possible.