Wednesday, April 29, 2009

மற்றும் ஒரு கவிதை!

Software Bug!

மீண்டும் மனிதன்
உலகம் தட்டை என்று
சொல்லும் காலம் வந்துவிட்டது..
ஒரு படித்த
கணிப்பொறி இளைஞனின்
புவியியல் சொல்கிறது..
உலகத்தின் பரப்பு 14 அங்குளம்..

இன்று மாலை
உயிர் நண்பனின்
திருமண வரவேற்புவிழா..
வழக்கம் போல் செல்ல முடியாது..
ப்ராசெக்ட் டெட்லைன்..
இமெயில் தான் அக்ஷ்தை
தூவ வேண்டும்..

இரவு உணவிற்கு
காத்துக் கொண்டிருக்கும் குடும்பம்..
செல்ல முடியாது..
மீட்டிங்..
தொலைபேசியில் மனைவியை
சமாதானப்படுத்த வேண்டும்..

மனைவியின் கைபிடித்ததைவிட
மெளசை பிடித்ததே அதிகம்..
பிள்ளைகளின் விரல் தொட்டு
ஸ்பரிசித்ததைவிட
கீபோர்டை ஸ்பரிசித்ததே அதிகம்..

சூரிய வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு..
பொருட்களை பார்க்கையில்
கண்கள் இருண்டுவிடுவதைப் போல..
கணிப்பொறித்திரையையே
பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள்..
குடும்பத்தை பார்க்கையில்
உறவுகள் இருண்டுகிடக்கின்றன..

சிலர் கடமைகளுக்காக..
சிலர் கனவுகளுக்காக..
வாரத்தில் ஏழு நாளும்
வாழ்க்கையை
விற்க தொடங்கிவிட்டோம்..


தொழிற்நுட்பம் மனிதனின் அடுத்த
மதமாகிவிட்ட நிலையில்..
மென்பொருள் பொருளாதாரத்தின்
வேதமாகிவிட்டது..

டாலர்களுக்காக 20 மணிநேரம் தேய
கண்கள் தயாராகிவிட்டது..
நம் ஒவ்வொருவர் வீட்டுத்
திண்ணையிலும் முற்றத்திலும்
வாழப்படாமல் வாழ்க்கை மீந்து
கிடக்கிறது..

எதற்கித்தனை பொருளீட்டு..
மனமே..
நிலாசோறுக்கு ஆசைபடு
நிலவுக்கே போய் சோறுண்ண
ஆசை வேண்டாம்..

நாம்
உறவுகளைவிட்டு பயணப்பட்டு
வெகுதூரம் வந்துவிட்டோம்..
வயிற்றுக்கு மேலே கொஞ்சமேனும்
இதயம் இருந்தால்..
உடனடியாக அலுவலகத்தைவிட்டு
வெளியே வாருங்கள்
பொடிநடையாக வீட்டை
நோக்கிச் செல்வோம்.

மனிதா..
நாம் வாழ்க்கை கரையில்
சில்லறைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம்..
நம் சட்டைப் பையிலிருந்து
கிளிஞ்சல்கள் கொட்டிக்கொண்டிருப்பதை
கவனிக்காமல்...

25 comments:

 1. எனக்கு வந்த பல மின்னஞ்சல் கவிதைகள் இதே பாணியில் தான் வ‌ருகின்ற‌ன‌.இதிலிருந்து வெளிவாழ் ம‌க்க‌ள் எல்லாம் ம‌ண்ட‌ காஞ்ஜு தான் இருக்காங்க‌னு தெரியுது.

  அப்புற‌ம் ம‌க்களே! கார்த்தியின் ப‌திலில் இருந்து இந்த‌ வார‌ம் அவ‌ன் ‍‍‍‍‍‍ escape!

  நானும் அலுவ‌ல் ப‌ணி நிமித்த‌மாக‌ ஆப்(பு)ரிக்கா செல்கிறேன் (1st May). ம‌றுப‌டியும் வ‌ருவ‌த‌ற்கு ஒரு மாத‌ கால‌ம் ஆகும். ஆனால் இந்த‌ blog மூல‌ம் தொட‌ர்பில் இருப்பேன்.ஆனால் உங்க‌ள் வ‌ருகையை நிறுத்தி விடாதீர்க‌ள்!

  நான் "ஆப்பு"ரிக்கா என்று சொல்வ‌த‌ற்கு ப‌ல‌ சுவார‌ஸ்ய‌மான‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு. வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளில் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 2. Hi saravana,

  how r u? Nice kavithai. Happy journey. take care. Maha okva? thaniya she can manage there?

  Hi karthi, Annal, Ramesh,

  how are you? here all r fine. kirubava abacus classla join panni irukka. Then, no news here. take care.

  ReplyDelete
 3. hey dhamaya! so one more genius(little kiruba) is on the track!! good..always try to put her in some extra useful currucular activities..

  then yeah Maha can manage herself..no worries..infact she will be more happy if im not there!! LOL

  ok yeah..see you soon! take care all!

  ReplyDelete
 4. saravanan!
  In Africa Which Place r u going??? Be Always ALERT in that Country..Maybe u can buy Diamonds from there( Very Cheap),..For more information Pls see movie "AYAN"...LLOLL...

  ReplyDelete
 5. damayanthi!
  We r Fine.. Abacus..? Somewhere i heard..,Wat is that?

  ReplyDelete
 6. அய‌ன் ப‌ட‌த்தை இன்னும் பார்க்க‌வில்லை அன‌ல்.. i am going to visit four countries Nigeria, Kenya, Ghana & Cango..
  i have many intresting news to share..will write shortly..

  then how is the things at your end annal? now i hope things are settling down from the recession..right??

  ReplyDelete
 7. Yess... AYAN says thats CANGO.. still singapore havn't retreive...maybe i think takes 2 months...

  ReplyDelete
 8. கார்த்திகேயன்May 2, 2009 at 1:00 PM

  சரவணா.. ஆப்புரிக்கான்னு சொன்னது கரெக்ட்டா இருக்கு. நீ பாக்கிற் வேலைக்கு அங்க உனக்கு என்ன வேலை?
  அப்புறம் இங்க வெயில் 40 டிகிரிக்கும் மேல அடிக்க ஆரம்பிச்சு இருக்கு. தாங்க முடியல சாமி.
  அனலா.. உலக பொருளாதார சிக்கலில் இருந்து கரூர் விடுபட ஒரு வருடத்திற்கும் மேலாகும் போல இருக்கு. வேலை வாய்ப்புகள் ரொம்ப குறைஞ்சுகிட்டே வருது. இப்படியே போனா சிரமம்தான்.
  அபாகஸ்ன்னா அது ஒரு மாதிரி மூளைய வேகமா வேலை செய்ய வைக்கிற ஒரு டெக்னிக்கலான படிப்பு. நல்ல படிப்புதான்.
  என் அம்மா மே மாதம் 20ம் தேதி கிளம்புவது உறுதியாகிவிட்டது.

  ReplyDelete
 9. கார்த்திகேயன்May 2, 2009 at 1:05 PM

  சரவணா ஆப்பிரிக்க நாடுகளில் பூச்சிகள் தொந்தரவு அதிகமென்று கேள்விப்பட்டு இருக்கிறேன். வறுமை, எய்ட்ஸ், காடுகள், அனகோண்டான்னு வித்யாசமான கண்டம் அது. என் மாமா மகன் கானா நாட்டில்தான் இருக்கிறான். குமாஸி என்னும் ஊரில் ஒரு லெபனான் நாட்டு மரம் வெட்டும் கம்பெனியில் அக்கவுண்டெண்ட் ஆக இருக்கிறான். அவன் சொல்ல நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். போலீஸ் கண்ட்ரோல் இருக்காதாம். போதை மருந்து கடத்தல், விபச்சாரம், கொலை, கொள்ளைன்னு பாதுகாப்பில்லாத நாடுகள் அங்கே அதிகமாம். தவளைகூட 1 கிலோ இருக்குமாம். சாப்பாடு ஒரு பெரிய பிரச்சினை. சரவணன் அங்கு போய்விட்டு வந்து சொல்லும் தகவல்கள் மிகவும் வித்யாசமாக இருக்கும். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 10. கார்த்திகேயன்May 2, 2009 at 1:10 PM

  அங்கு வசிக்கும் இந்தியர்களின் பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? நமது நாட்டு தொலைக்காட்சி ஒன்றுகூட அங்கு தெரியாது. லீவில் இந்தியா வந்து செல்லும் ஒரு நபர் வாங்கி வரும் சில சி.டி.க்கள் தான் அவர்களின் ஒரே பொழுது போக்கு. கம்பெனியை தவிர எங்கு இண்டெர்னெட் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடு.. காடு ..காடுதான். சமையல் பொருட்களும் மிகுந்த் கஷ்டத்திற்கு அப்புறம்தான் கிடைக்கும். கல்வியும் கஷ்டம்தான். நம்ம கலாச்சாரத்திற்கு ஒத்துவராது. இதுல சரவணன் பார்த்துட்டு வந்து சொல்வது தான் சுவராஸ்யம்.

  ReplyDelete
 11. yess..karthi reached Nairobi airport..
  sending message from net cafe..
  dubai to nairabi its arround 3 and half hours journey..from nairobi to Lagos(nigeria) 6 hours journey..i have to go to Lagos ( in nigeria) first..

  will wtite in detail once i reach my client office.

  byee for now

  ReplyDelete
 12. கார்த்திகேயன்May 4, 2009 at 5:35 PM

  உனது பிரயாணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. கார்த்திகேயன்May 4, 2009 at 5:35 PM

  விரைவில் உனது ஆப்புரிக்கா பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 14. Hi saravana,

  happy journey. take care of ur health. i also eagerly awaiting ur information about ur trip.

  take care,bye.

  ReplyDelete
 15. Hi karthi,

  how are u? athai, priya eppadi irukkanga? convey my wishes to them.

  im going to resign my job from Atlantic Fabrics. So, im trying to find another company.

  2010 may be recover all the problems. we have to wait.

  ReplyDelete
 16. Hi Annal,

  how are you? i hope u r doing gud. convey my wishes to ur wife.

  what karthi said correct. Abacus is one of the mental related course. Creativity also. This is 30 months course. I feel she will be gud in maths work etc., then, nothing else Annal. take care. bye.

  ReplyDelete
 17. கார்த்திகேயன்May 6, 2009 at 5:26 PM

  என்ன தமயா.. என்னாச்சு? ஏன் திடீர் முடிவு? கரூர் இப்ப எங்கயும் வேலைக்கு ஆள் எடுப்பது இல்லையே? கொஞ்சம் யேசித்து முடிவெடு.. எங்கள் கம்பெனியில் இந்த வருடம் இன்கிரிமெண்ட் கட் செய்து விட்டார்கள்.. இப்படியே போனால் என்னதான் செய்வது.. ஒன்னும் புரியல.. பாக்கலாம். எவ்வளவு காலம்தான் இப்படியே இருக்கும்னு..

  ReplyDelete
 18. கார்த்திகேயன்May 6, 2009 at 5:28 PM

  அனலா.. சிங்கப்பூரில் இப்ப எப்படித்தான் இருக்கிறது நிலமை? எங்களுக்கெல்லாம் அமெரிக்கா மறுபடியும் பழைய நிலமைக்கு வந்தால்தான் விமோச்சனம்

  ReplyDelete
 19. Hi Karthi,

  I have no interest to work here. so that i have taken this decision. will try. I hope i will get gud job. Here increment Rs.250/- (staff). Rs.209/- (Labour). If they asked to management no order this year what to do? Every year they are telling the same answer. we can't do anything. just feel pannalam. pray pannalam. thatz all. ok karthi bye.

  ReplyDelete
 20. கார்த்திகேயன்May 7, 2009 at 11:18 AM

  சரி தமயா.. இன்னும் கொஞ்சகாலம் பொறுத்து இருக்க வேண்டிய நேரம் இது. பார்க்கலாம்.. இந்த நிலமை எவ்வளோ நாளைக்குன்னு.. கரூர் முழுவது இப்ப ஆர்டர்கள் குறைந்து வருகிறது. நிலமை மோசம்தான்.

  ReplyDelete
 21. yes..once USA & UK market retrieve,, Everything willbe settle... i also dont know, when it will happen!!!! PRAY for it!!!!

  ReplyDelete
 22. கார்த்திகேயன்May 9, 2009 at 1:06 PM

  இன்னும் நாலு நாள்தான் இருக்கு எலக்சனுக்கு.. கத்தரி வெயில்ல கூட கத்தி கத்தி ஓட்டு கேட்டுகிட்டு ஊரே அல்லோலப்படுது.. அடுத்தவாரம் ரிசல்ட் வந்துடும்.. யாரு தேறப்போறாங்கன்னு தெரிஞ்சிடும். கரூர்ல இப்ப போட்டி கடுமையாக இருக்கிறது. கேசிபிக்கு மட்டுமே பிரகாசமாக இருந்த வாய்ப்பு இப்ப தம்பித்துரைக்கும் சாதகமாக தெரிகிறது. தேமுதிக கொஞ்சம் ஓட்டை பிரிச்சிடும். அதனால தொங்கல்லதான் நிலமை இருக்கு. அடுத்த சனிக்கிழமை யாரு ஜெயிச்சாங்கன்னு தெரியும். பாக்கலாம்.

  ReplyDelete
 23. கார்த்திகேயன்May 9, 2009 at 1:09 PM

  விராலிமலை, துவரங்குறிச்சி, வேடசந்தூர் ஓட்டுக்கள்தான் கரூர் தொகுதி யாருக்குன்னு சொல்லும். போன எலக்சன் வரை இந்த தொகுதிகள் எல்லாம் சம்பந்தமே இல்லாம இருந்தது. இப்ப இந்த 3 தொகுதி நிலவரம்தான் கலவரமாக இருக்கு. குவாரி மக்களும் இப்ப பழனி பாரளுமன்ற தொகுதியில இருந்து கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு மாறியாச்சு.

  ReplyDelete
 24. Hai dears, i m entering after long gap. lost week i was in Karnadaka (Chiterdurga, Davengery Dt.) There climat was very good..

  Dear Saro, Kavithi was very feelable,

  Dear Dhama, before resignation think N'no.of times, I feel this not a good time to change, i agree with Karthi's words, so think and act.............

  Dear punks, don't worry life is cicle now it came down,very soon it will go up....nothing will happen...enjoy election.

  ReplyDelete
 25. கார்த்திகேயன்May 10, 2009 at 9:03 PM

  அன்பு நண்பர்களே.. புதுசா “பசங்க”ன்னு ஒரு படம் வந்து இருக்கு. அது எங்க சொந்த ஊரான விராச்சிலைல எடுத்து இருக்காங்க.. படம் ரொம்ப நல்லா இருக்கு.. அனல் மாம்ஸ் உங்க ஊர் குழிபிறைகூட வந்து இருக்குடா.. மறக்காம பாருங்க..

  உங்கள் கவனத்திற்கு: இந்த படத்திற்கு விகடன் விமரிசனக்குழுவில் 50 மார்க் கொடுத்து இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு நாயகன், ஆட்டோகிராப்க்கு அடுத்து இந்த படம் தான் 50 மார்க் வாங்கி இருக்கு.

  ReplyDelete