Saturday, November 27, 2010

கிரிக்கெட்

தலைப்பை பார்த்ததும் நான் ஏதோ சச்சினை பற்றியோ கங்குலியை பற்றியோ எழுதப்போகிறேன் என நீங்கள் நினைத்தால்.. ஐயாம் சாரி. நான் எழுதப்போவது நம்ம கிரிக்கெட்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாக நான் பார்த்த நம்ம ஊர் கிரிக்கெட்டை பற்றி எழுதப்போகிறேன். ஆனால் இங்கே நான் ஒன்றை குறிப்பிட விரும்புவது என்னவென்றால் நான் 18 வயது வரை மட்டை பிடித்தவன் கிடையாது.. வெறும் பார்வையாளன் தான். அதனால் நான் நிறைய விசயங்களை மனதில் கொண்டவன்.

அனேகமாக கிரிக்கெட் ரத்ததிலேயே ஊறி இருந்தது நம்ம ஸ்ரீராம்க்குதான். சும்மா ஓடி வரும்போது கூட பவுலிங் போடும் ஆக்சன் அவனிடம் இருக்கும். நிறைய புள்ளி விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். அவன் சொல்லித்தான் ஜிம்பாப்வே என்னும் ஒரு நாடு இருப்பதே எனக்கு தெரியும். வெகு ஆரம்ப காலங்களில் ராம்குமார் வீட்டு வாசலில்தான் கிரிக்கெட் நடக்கும். அரச மரம் தாண்டினால் ஃபோர். காம்பவுண்ட் தாண்டினால் இரண்டு. இப்படி நமக்கு நாமே பவுண்டரி லைன் போட்டு விளையாட்டு ஆரம்பிக்கும். முதலில் விருவிருப்பாக நடக்கும் போட்டி முடியும் போது தொய்வாக இருக்கும். ஸ்ரீதர் அண்ணா கூட ஆரம்ப நாட்களில் அங்கு விளையாடி நான் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் 2 டீம்களாக பிரிந்த நமது நண்பர்கள் ஒரு கட்சி அனல் வீட்டு சைடிலும் அடுத்த பெரிய கட்சி பெரிய கிரவுண்டுக்கும் போனது. முருகேசன் அண்ணா, கிரி அண்ணா குரூப் எல்லாம் அங்கே விளையாடுவார்கள். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு கிரிக்கெட் போட்டி எல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு. மைக் செட் வைத்து பெரிய பெரிய டீம்களை எல்லாம் அழைத்து வந்து மேட்ச் நடத்துவார்கள். அனேகமாக அந்த குரூப்பின் அடுத்த செட்டில்தான் பக்காவாக நடத்தப்பட்டது. அதில் செந்தில்தான் காப்டன். அடேங்கப்பா.. கொஞ்ச ஆட்டமா ஆடுவாரு அவரு.. பேட்டிங்கும் தெரியாது.. பவுலிங்கும் பர்ஃபெக்ட் கிடையாது.. கீப்பிங்கும் சுமார்தான். ஆனால் வாய்... வாய் ஒன்றை மட்டுமே முதலீடாக கொண்டு கேப்டனான பெருமை நம்ம செந்திலுக்குதான். ரூல்ஸ் எல்லாம் விரல் நுனியில் இருக்கும். ரூல்ஸ் மட்டும் தான் தெரியும். எதையும் விவாதத்தில் ஜெயிக்கும் திறமை செந்திலுக்கு உண்டு. முருகன் அண்ணா, சங்கர், பன்னீர்தான் கமெண்ட்ரியில் இருப்பார்கள். ரகுராம் மாமாவும் ஸ்ரீதர் அண்ணாவும் அம்பெயர்களாக இருப்பார்கள். குமாரும், அனலும்தான் வேகப்பந்தில் ஜொலித்தார்கள். ராமசுப்புவும் நல்லாத்தான் பவுலிங் போடுவாப்ல. விடிஆர் லெக் ஸ்பின்னும், ப்ரித்வி & சுமன் ஆப் ஸ்பின்னும் நன்றாக போடுவார்கள். ப்ரித்வி நல்லா பேட்டிங்கும் செய்வான். நான் மனோகர், மணிராஜ் எல்லாம் கடைசி காலகட்டங்களில் டீமில் எண்ட்ரி ஆனோம். மணிராஜ் பேட்டிங்கிலும், நான் பவுலிங்கிலும், மனோகர் பீல்டிங்கிலும் பேர் சொல்லும்படி விளையாடினோம். சூப்பர்னு சொல்ல முடியாமல் போனாலும் சுமாராக நான் ஆப் ஸ்பின் போடுவேன். நிறைய முக்கியமான விக்கெட்களை போல்டாக்கி இருக்கிறேன். என்னை அரவணைத்து சொல்லிக்கொடுத்ததில் விடிஆர்க்கும் அனலுக்கும் பெரும் பங்கு உண்டு.

எரியோட்டில் ஒரு மேட்ச் விளையாடப்போனோம். அதில் தோற்றுப்போனோம். அந்த விளையாட்டில் என்னை ஆட வைப்பதாக கூறி கடைசியில் வெளியில் உட்கார வைத்துவிட்டார்கள். அதற்காகவே அடுத்து திண்டுக்கல்லில் நடந்த லீக் மேட்சில் எனக்கு அனல் சிபாரிசின் பேரில் இடம் கிடைத்தது. அதில் பால்ராஜின் சிறப்பான ஆட்டத்தில் நாம் வென்றோம். அதை சிறப்பாக நீச்சல் குளத்தில் குளித்து கொண்டாடினோம் (அக்சயா வித்யாலயா பள்ளியில்).

தரகம்பட்டி, காணியாளம்பட்டி என நிறைய மேட்ச் ஆடி இருந்தாலும் எதிலும் பெரியதாக ஜெயித்தது இல்லை. ஒருமுறை சேர்வைகாரன்பட்டியில் ஜெயித்தோம்.

பெரிய அளவில் சுந்தரம் நினைவு சுழற்கோப்பை போட்டி குவாரியில் நடந்த போது குளச்சலில் இருந்து சுரேஷின் பெரிய டீம் வந்து விளையாடி கரூர் டீமை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது. அது மறக்க முடியாத மேட்ச். டைட்டஸ், ஜாகீர், கான் இப்படி நிறைய நண்பர்களும் நமக்கு கிடைத்தார்கள்.

பெரிய அளவில் சாதிக்கவில்லை எனினும் ஆரம்பத்தில் இருந்தே சுப்பன், பாசித், புஸ் சரவணன், பன்னீர், ஆறுமுகம், ராமசுப்பு, அம்பி என நமது அனைத்து நண்பர்களின் தினசரி வாழ்க்கையில் கிரிக்கெட் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. என் அண்ணா, சங்கர், மதி அண்ணா, சரவணன் மற்றும் சில நண்பர்கள் ஊருக்கு வரும் சமயங்களில் எல்லாம் விளையாட்டில் கலந்து கொண்டது உண்டு. வெளியூரில் இருந்து நம்ம ஊருக்கு வந்து சிறப்பான விளையாட்டின் மூலம் சுரேஷ் (குளச்சல்), புலியூர் சுரேஷ், புலியூர் சந்திரமோகன் போன்ற நண்பர்களும் நம்மில் இணைந்தது உண்டு.

வேறு எந்த நண்பர்களது பெயர்கள் ஏதேனும் விடுபட்டு போய் இருந்தால் நியாபகப்படுத்துங்கள்.

இன்னும் நமக்கெல்லம் பேட், பேடு முதலிய அனைத்து விளையாட்டு உபரகணங்களையில் வாங்கி கொடுத்து நம்மை ஊக்குவித்த ராமனாதன் சார் மற்றும் கம்பெனியையும் மறக்க முடியாது.

இந்த கட்டுரையை திரு. இராமனாதன் ஐயா (ஜி.எம்) அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வழக்கம்போல படித்துவிட்டு அடுத்த சைட்டிற்கு போவதற்கு முன் உங்கள் இடுகைகளை இட்டுவிட்டு செல்லுங்கள். நன்றி.

9 comments:

  1. ha ha ha..nice post karthi...ம‌ல‌ரும் நினைவுக‌ள்......

    ஆமா..கிரிக்கெட்டுனாவே குவாரில‌ எல்லா டிச்கெடும் அவுட்டுதான்...ஹி ஹி ஹி..that time that was the only time pass for all..அதுக்காக‌ HM கிட்ட‌யும் மிஸ் கிட்ட‌யும் வாங்குன‌ விளாசுக‌ள‌யும் ம‌ற‌க்க‌ முடியாது..

    ReplyDelete
  2. Thanks Saravana.. I am expecting some more comments from our friends..lets see..

    ReplyDelete
  3. lotz of memories!.. wait.. maybe tomorow i share..

    ReplyDelete
  4. You are most welcome raja anbu analan... (Remember.. you gave this name in our dindugal match and we won the match)

    ReplyDelete
  5. மெட்ரிகுலேசன் வாத்தியார் ஒருத்தர் நம் கூட விளையாடுவார். பவுலிங் மட்டும் ஃபாஸ்ட்டாக இருக்கும். அவர் பேர் மறந்து போச்சே!

    அப்புறம் லேப் செந்திலும் சில முறை நம்முடன் ஆடியதுண்டு.

    ReplyDelete
  6. enna karthi malarum ninaivugala supper, continue, let me also join when feel free, dont stop these things, since i came back to Quarry (Near by Karikkali)

    ReplyDelete
  7. Welcome paulraj.. thanks for your comments. So many memorable items to be shared. Lets see..

    ReplyDelete
  8. karthi, nan sankar, chief Reporter from Dinakaran. article good. dai dindugul atchayavil nan oru six adichen. atha nee sollala. but poramaya kuda irukkalam. ok. no problem. padichathu, nam ellarum sernthu velayadiyathu pol irunthathu.

    ReplyDelete
  9. solla maranthuten karthi, AMMMAVIN KAIGAL katturai very good.

    ReplyDelete