Thursday, December 30, 2010

Saturday, December 25, 2010

Tuesday, December 21, 2010

மச்சங்களும் அதன் பலன்களும்

நானும் ஜோசியமும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன். ஆனால் அதில் சொல்வதற்கு நிறைய இருப்பதால் இப்பொழுது நேரமில்லை. எனவே மச்சத்தை மட்டும் எழுதி இருக்கிறேன்.

நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ அமைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.

கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் பெண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் அளிக்கும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் இந்த மச்சத்திற்கும் சாமுத்திரிகா லட்சணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் பல நேரங்களில் இந்த இரண்டு அம்சத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டது உண்டு. உயரமானவர்கள், குட்டையானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், நெற்றியில் ரேகைகள், கண்கள், நமது சாதாரண பார்வைக்கு தெரியும் மச்சங்கள், முடி, கூந்தல் அமைப்புகள் இவை அனைத்தையும் வைத்து நட்சத்திரம் அல்லது ராசியை கிட்டத்தட்ட நெருங்கி விடுவேன். ரத்த வகை, குணாதியங்களை கண்டறிந்த பின்பு எனக்கு கைரேகை பார்ப்பது என்பது அல்வா சாப்பிடுவதை போல. ஏனெனில் என்னை டெஸ்ட் பண்னத்தான் எதிராளி வந்திருக்கிறான் எனபதைக்கூட கண்ணையும் நெற்றி ரேகையையும் வைத்து கண்டுபிடித்துவிடுவேன்.

கீழ்கண்ட மச்ச பலன்கள் கிட்டத்தட்ட சரியானவை. அவரவர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ளவும். சிகை பலன்களை தனிப்பதிவாக தருகிறேன். காத்திருக்கவும்.

பெண்களுக்கான மச்ச பலன்
நெற்றி நடுவே - புகழ், பதவி, அந்தஸ்து வாய்க்கும்
நெற்றி வலதுபுறம் - தைரியம், பணிவு இல்லாத போக்கு இருக்கும்
நெற்றி இடதுபுறம் - அற்பகுணம், முன்கோபியாவாள்
மூக்கின் மேல் - செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு, பெண்களால் அவமானம் உண்டாகும்
மூக்கின் நுனி - வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் - ஒழுக்கம், உயர்ந்த குணம் (கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்)
மேல் வாய் பகுதி - அமைதி, அன்பான கணவர் கிடைக்கு
இடது கன்னம் - வசீகரம், விரும்பியதை அடைவாள்
வலது கன்னம் - படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் (இரத்த கொதிப்பு வரும்)
வலது கழுத்து - பிள்ளைகளால் யோகம்
நாக்கு - வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் - கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் - சொத்து சேர்க்கை, தயாள குணம் இருக்கும்
தலை - பேராசை, பொறாமை குணம் கொண்டவள்
தொப்புளுக்கு மேல் - யோகமான வாழ்க்கை (கணவன் அதிருஷ்டசாலி)
தொப்புளுக்கு கீழ் - மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் (கணவன் துரதிருஷ்டசாலி)
தொப்புள் - ஆடம்பரம், படாடோபம்
வயிறு - நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு, குறி - ராஜயோக அம்சம், உயர்பதவிகள் (நிர்வாகத்திறமை)
இடது தொடை - தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், முடிவெடுப்பதில் குழப்பம்
வலது தொடை - ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை, தலைக்கணம்
புட்டங்கள் - சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை (தலைமை பொறுப்புக்கு ஏற்றவள்)


ஆண்களுக்கான மச்ச பலன்
புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுளை கொண்டவன்
நெற்றியின் வலது புறம் – தனயோகம் கொண்டவன்
வலது புருவம் – திருமணத்திற்கு பின் / மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம் வரும்
வலது கண் - நண்பர்களால் உயர்வான்
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம் கொண்டவன்
இடது புருவம் - ஏற்ற, இறக்கமான வாழ்க்கை / செலவாளி
மூக்கின் மேல் - சுகபோக வாழ்க்கை கொண்டவன்
மூக்கின் வலதுபுறம் - நினைத்ததை அடையும் அம்சம் கொண்டவன்
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு / பெண்களால் அவமானம் வரலாம்
மூக்கின் நுனி - ஆவணம், கர்வம், பொறாமை, தலைக்கணம்
மேல், கீழ் உதடுகள் - அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) - செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் (இவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்)
வலது கன்னம் - வசீகரம், தயாள குணம் கொண்டவன்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு இருக்கும்
வலது காது நுனி - சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி - தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே - பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை - திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் - சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு - ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு - பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு - பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு, குறி - திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை, தாம்பத்ய சுகம்
புட்டம் - அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு வரும்

Monday, December 20, 2010

ஈசன் – விமர்சனம்

சசிகுமார் – இந்த ஒரு வார்த்தைக்காகவே நம்பி போன என்னை மாதிரி எத்தனையோ பேர்களை – அடப்போப்பா..

சரக்கு டம்ளர்குள்ள ஊத்துற ஒயினை வேற ஆங்கிள்ல கிராபிக்ஸ் பண்ணி டைட்டில்ல போடும்போது என்னமோ சொல்லப்போறார்னு பார்த்தால் கடைசி வரை சரக்கு கடைக்குள்ளேயே படத்தை எடுத்து முடிச்சிருக்கிறார்.

கதை – என்ன கதை? ஒரு காலத்திலே விஜய்யோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரெகுலராக எடுத்துக்கிட்டு இருந்த மொக்கை கதைதான். அக்காவை கொன்னவங்களை தம்பி பழி வாங்குறான். ஆவ்வ்வ்வ்....

ஒரே ஆறுதல் இசையும், கேமிராவும். பைக் விபத்தில் அடிபடும் கோணத்தில் கண்களில் இருந்து வரும் ரத்தம் சிலிர்ப்பு. மத்த எல்லா சீன்களும் கடுப்பு. ஒவ்வொரு முறையும் பப், பார்ன்னு காட்டும்போது ரெகுலர் குடிகாரங்ககூட அட போய்யான்னு சொல்றது தியேட்டர்குள்ளேயே கேட்குது.

ஹீரோவும் கிடையாது, ஹீரோயினும் கிடையாது. காமெடிக்கு... எல்லாருமே கிட்டத்தட்ட காமெடியன் தான். க்ரைம் நாவல்களில் ராஜெஷ்குமார் ஸ்டைலில் சில வெவ்வேறு தளங்களில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதை பயணிக்கும், கடைசியில் 3 தளங்களையும் ஒரே அலை வரிசையில் இணைப்பார். அந்த டெக்னிக்கை இயக்குநர் ஓவர் வன்முறையோடு, சொல்லி இருக்கிறார்.

புழுதி பறக்கும் மதுரைத் தெருக்களில் நின்று, சுப்பிரமணியபுரம் கதை சொன்ன சசிகுமார், இந்த முறை சென்னையின் பளபளப்பான கட்டிடங்களையும் கனவுலகம் போன்ற நட்சத்திர ஹோட்டல்களையும் பப்களையும் சுற்றிக் கதைக் களத்தை அமைக்கிறார். பின்னிரவு பார்ட்டிகள், அவற்றில் உல்லாசம் தேடும் இளசுகள், போதையில் அமிழும் பெண்களைத் துரத்தும் பையன்கள் என்று தொடங்கும் கதை மெல்ல மெல்ல விரிந்து அரசியல் களத்துக்கு இடம் பெயர்கிறது. தெய்வநாயகம் (ஏ.எல். அழகப்பன்) என்னும் சக்தி வாய்ந்த அமைச்சரின் பையன் செழியன் (வைபவ்). அமைச்சரின் வலிமையைப் பயன்படுத்தி வைபவும் அவன் நண்பர்களும் இஷ்டத்துக்கும் ஆட்டம் போடுகிறார்கள். ரேஷ்மா (அபர்ணா) என்ற பெண்ணை ஒரு பப்பில் பார்க்கும் செழியன் அவள்மீது காதல் கொள்கிறான். விரைவிலேயே அவளும் காதல்வயப்படுகிறாள். (நல்லவேளை டூயட் எல்லாம் கிடையாது)

இதற்கிடையில் ஒரு காண்டிராக்ட் விஷயமாக அமைச்சருக்கும் பெரிய தொழிலதிபருக்கும் முட்டிக்கொள்கிறது. அந்தத் தொழிலதிபரின் பெண்தான் ரேஷ்மா. இந்த விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணை வைத்தே தொழிலதிபரை வழிக்குக் கொண்டுவர அரசியல்வாதி திட்டமிடுகிறார். சாமர்த்தியமாகக் காய் நகர்த்தும் அமைச்சருக்கு இதில் வெற்றி கிடைக்கிறது. திருமணம் என்ற உற்சாகத்தில் செழியன் மிதக்கும்போது எதிர்பாராமல் தாக்கப்படும் அவன், மர்மமான முறையில் காணாமல் போகிறான்.


அமைச்சர் ஆவேசம் கொண்டு அவனைத் தேட போலீஸ் கமிஷனரை ஏவுகிறார். நேர்மையான அதிகாரியான துணை கமிஷனர் சங்கையாவிடம் செழியனைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. சங்கையாவின் புலனாய்வு வெற்றி அடையும் சமயத்தில் தன் பையனின் கதியை அறியும் அமைச்சரால் ஆபத்து வருகிறது. செழியனின் கதி என்ன, அவனை யார் தாக்குவது? அதன் பின்னணி என்ன? யார் ஈசன்? சங்கையாவுக்கும் அமைச்சருக்குமான மோதலில் வெல்வது யார்? இதுதான் கதை.

சங்கையாவாக சமுத்திரகனி. சூப்பர் நடிப்பு. உடல் மொழியும் அசத்தல். அந்த சின்னப்பையன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அபினாயா இந்த படத்துக்கு பெரிசா தேவையில்லை. சென்னையின் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என எண்ண வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சசி இயக்குனராக ஜெயிக்க இன்னும் நல்ல கதை வேண்டுமே!

வன்முறை அதிகம். ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, December 18, 2010

ஆழ்ந்த அனுதாபங்கள்

நண்பர்களே!

ஒரு துக்க செய்தி.

நமது சீனியர் நண்பரும் எல்.பி.தர்மராஜின் அண்ணனுமான திரு.எல்.பி.மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. 40 வயதுதானிருக்கும்.

அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.

Tuesday, December 14, 2010

மிஸ்டரின் அட்டூழியங்கள்!

எல்லா வீட்டு த‌ங்க‌ம‌ணிக‌ளின் புல‌ம்ப‌ல்க‌ள்...

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...


=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...



=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.


=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.


=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...


=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...


=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!


=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...


=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...


=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..


=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...


=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.


=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...


=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

Thursday, December 9, 2010

செருப்பு

தலைப்பை பார்த்ததும் நெற்றியை சுருக்குபவர்களே பலர். ஆனால் இந்த செருப்பினை பற்றி நிறைய நாட்கள் நான் மனதில் நினைத்தது உண்டு. என்னடா செருப்பை பற்றிய ஒரு தலைப்பில் கட்டுரையா என நினைக்கும் நண்பர்களே! பரதன் காலத்திலும் சிண்ட்ரெல்லா கதையிலும் இப்படி பல இடங்களில் செருப்பின் மகத்துவமும் முக்கியமும் இருந்திருக்கிறது.

ஒருவரை கேவலப்படுத்த வேண்டுமெனில் அனைவரும் சொல்லும் வாக்கியம் செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை என்பதுதான்.

மிகச்சின்னசிறு வயதில் நான் செருப்பெல்லாம் போட்டிருந்தேனா என்று எனக்கு சரிவர நினைவில்லை. ஆனால் செருப்பினை முதன் முதலில் ஆவலுடன் பார்த்தது பஞ்சாயத்து ஸ்கூலில் அரசாங்கம் இலவசமா கொடுத்த ஒரு ஜோடி தோல் செருப்புதான். வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் கூட இந்த செருப்புதான் அனேகரின் அடையாளங்கள். ராணி மெய்யம்மை வந்ததிற்கு பிறகு கட்டாயமாக நான் ஷுவிற்கு மதமாற்றம் ஆகிவிட்டாலும் கூட செருப்பின் மீது எனக்கு ஒரு காதல் இருந்து கொண்டே இருந்தது.

உயர் நிலை பள்ளி வாழ்க்கையில் ஷூவை நம்மில் அனேகரும் விரும்பவில்லை. சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் கழற்றி வைத்து விடுவோம். முதலில் லெதர் ஷூ பிறகு அதிலும் பிளாஸ்டிக் வந்து சேர்ந்தது. சுதர்சன் முதலில் கழுவும் வகையில் பிளாஸ்டிக்கா இல்லை ரப்பரா என தெரியாத நிலையில் ஒரு ஷூவை வாங்கி வந்து 9 வது படிக்கும் போது காண்பித்தான். அதை பார்த்து எல்லோரும் அதே போல் வாங்கிக்கொண்டோம். கிரிக்கெட் விளையாடும் போது கூட யாரும் ஷூ போட்டுக்கொண்டதில்லை. செருப்புதான்.

10 வது முடித்ததும் நான் செட்டி நாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர்ந்தேன். முதன் முதலில் எனக்கென்று சில பொருட்கள் வாங்குவதற்கா காரைக்குடி பஜாருக்கு போனேன். நம்ப மாட்டீர்கள். நான் முதலில் வாங்கியது எனக்கென ஆசையாய் ஒரு குவாடிஸ் டைப் செருப்புதான். சரவணனும் கதிரேசன் மாமாவும் குவாடிஸ் டைப்தான் போட்டிருப்பார்கள். எனவே அதே போல் தேடியலைந்து வாங்கினேன். ஆனால் தோல் செருப்பு என்பது ரொம்ப நாள் எனக்கு ஒத்து வரவில்லை. தினமும் சைக்கிளில் 6 கிமீ போய் படிக்க வேண்டி இருந்ததால் செருப்பு அடிக்கடி பிய்ந்து விடும். அதனால் அதற்கப்புறம் ரப்பர் செருப்பையே போட்டு வந்தேன். படித்து முடித்து முதன் முதலில் கரூரில் வேலைக்கு சேர்ந்து நான் வாங்கிய 750 ரூபாய் சம்பளத்தில் அப்பாவிற்கு ஒரு வேஷ்டியும் எனக்கு ஒரு செருப்பையுமே முதன் முதலில் வாங்கினேன். 100 ரூபாய்க்கு ஒரு செருப்பு என்பதே அப்பொழுதெல்லாம் ஒரு கனவாக இருந்தது.

பின்பு படிப்படியாக வேலைக்கு போக ஆரம்பித்து எனக்குள்ளே பணம் சேரும்பொழுதெல்லாம் நான் வாங்கும் பொருளில் முதலில் செருப்பே இருக்கும்.

என்னதான் வாசலிலேயே கழற்றிவிடக்கூடியதாக இருந்தாலும் என்னைப்பொருத்தவரை செருப்பு மிக அந்தஸ்தானதே.

Saturday, November 27, 2010

கிரிக்கெட்

தலைப்பை பார்த்ததும் நான் ஏதோ சச்சினை பற்றியோ கங்குலியை பற்றியோ எழுதப்போகிறேன் என நீங்கள் நினைத்தால்.. ஐயாம் சாரி. நான் எழுதப்போவது நம்ம கிரிக்கெட்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாக நான் பார்த்த நம்ம ஊர் கிரிக்கெட்டை பற்றி எழுதப்போகிறேன். ஆனால் இங்கே நான் ஒன்றை குறிப்பிட விரும்புவது என்னவென்றால் நான் 18 வயது வரை மட்டை பிடித்தவன் கிடையாது.. வெறும் பார்வையாளன் தான். அதனால் நான் நிறைய விசயங்களை மனதில் கொண்டவன்.

அனேகமாக கிரிக்கெட் ரத்ததிலேயே ஊறி இருந்தது நம்ம ஸ்ரீராம்க்குதான். சும்மா ஓடி வரும்போது கூட பவுலிங் போடும் ஆக்சன் அவனிடம் இருக்கும். நிறைய புள்ளி விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். அவன் சொல்லித்தான் ஜிம்பாப்வே என்னும் ஒரு நாடு இருப்பதே எனக்கு தெரியும். வெகு ஆரம்ப காலங்களில் ராம்குமார் வீட்டு வாசலில்தான் கிரிக்கெட் நடக்கும். அரச மரம் தாண்டினால் ஃபோர். காம்பவுண்ட் தாண்டினால் இரண்டு. இப்படி நமக்கு நாமே பவுண்டரி லைன் போட்டு விளையாட்டு ஆரம்பிக்கும். முதலில் விருவிருப்பாக நடக்கும் போட்டி முடியும் போது தொய்வாக இருக்கும். ஸ்ரீதர் அண்ணா கூட ஆரம்ப நாட்களில் அங்கு விளையாடி நான் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் 2 டீம்களாக பிரிந்த நமது நண்பர்கள் ஒரு கட்சி அனல் வீட்டு சைடிலும் அடுத்த பெரிய கட்சி பெரிய கிரவுண்டுக்கும் போனது. முருகேசன் அண்ணா, கிரி அண்ணா குரூப் எல்லாம் அங்கே விளையாடுவார்கள். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு கிரிக்கெட் போட்டி எல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு. மைக் செட் வைத்து பெரிய பெரிய டீம்களை எல்லாம் அழைத்து வந்து மேட்ச் நடத்துவார்கள். அனேகமாக அந்த குரூப்பின் அடுத்த செட்டில்தான் பக்காவாக நடத்தப்பட்டது. அதில் செந்தில்தான் காப்டன். அடேங்கப்பா.. கொஞ்ச ஆட்டமா ஆடுவாரு அவரு.. பேட்டிங்கும் தெரியாது.. பவுலிங்கும் பர்ஃபெக்ட் கிடையாது.. கீப்பிங்கும் சுமார்தான். ஆனால் வாய்... வாய் ஒன்றை மட்டுமே முதலீடாக கொண்டு கேப்டனான பெருமை நம்ம செந்திலுக்குதான். ரூல்ஸ் எல்லாம் விரல் நுனியில் இருக்கும். ரூல்ஸ் மட்டும் தான் தெரியும். எதையும் விவாதத்தில் ஜெயிக்கும் திறமை செந்திலுக்கு உண்டு. முருகன் அண்ணா, சங்கர், பன்னீர்தான் கமெண்ட்ரியில் இருப்பார்கள். ரகுராம் மாமாவும் ஸ்ரீதர் அண்ணாவும் அம்பெயர்களாக இருப்பார்கள். குமாரும், அனலும்தான் வேகப்பந்தில் ஜொலித்தார்கள். ராமசுப்புவும் நல்லாத்தான் பவுலிங் போடுவாப்ல. விடிஆர் லெக் ஸ்பின்னும், ப்ரித்வி & சுமன் ஆப் ஸ்பின்னும் நன்றாக போடுவார்கள். ப்ரித்வி நல்லா பேட்டிங்கும் செய்வான். நான் மனோகர், மணிராஜ் எல்லாம் கடைசி காலகட்டங்களில் டீமில் எண்ட்ரி ஆனோம். மணிராஜ் பேட்டிங்கிலும், நான் பவுலிங்கிலும், மனோகர் பீல்டிங்கிலும் பேர் சொல்லும்படி விளையாடினோம். சூப்பர்னு சொல்ல முடியாமல் போனாலும் சுமாராக நான் ஆப் ஸ்பின் போடுவேன். நிறைய முக்கியமான விக்கெட்களை போல்டாக்கி இருக்கிறேன். என்னை அரவணைத்து சொல்லிக்கொடுத்ததில் விடிஆர்க்கும் அனலுக்கும் பெரும் பங்கு உண்டு.

எரியோட்டில் ஒரு மேட்ச் விளையாடப்போனோம். அதில் தோற்றுப்போனோம். அந்த விளையாட்டில் என்னை ஆட வைப்பதாக கூறி கடைசியில் வெளியில் உட்கார வைத்துவிட்டார்கள். அதற்காகவே அடுத்து திண்டுக்கல்லில் நடந்த லீக் மேட்சில் எனக்கு அனல் சிபாரிசின் பேரில் இடம் கிடைத்தது. அதில் பால்ராஜின் சிறப்பான ஆட்டத்தில் நாம் வென்றோம். அதை சிறப்பாக நீச்சல் குளத்தில் குளித்து கொண்டாடினோம் (அக்சயா வித்யாலயா பள்ளியில்).

தரகம்பட்டி, காணியாளம்பட்டி என நிறைய மேட்ச் ஆடி இருந்தாலும் எதிலும் பெரியதாக ஜெயித்தது இல்லை. ஒருமுறை சேர்வைகாரன்பட்டியில் ஜெயித்தோம்.

பெரிய அளவில் சுந்தரம் நினைவு சுழற்கோப்பை போட்டி குவாரியில் நடந்த போது குளச்சலில் இருந்து சுரேஷின் பெரிய டீம் வந்து விளையாடி கரூர் டீமை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது. அது மறக்க முடியாத மேட்ச். டைட்டஸ், ஜாகீர், கான் இப்படி நிறைய நண்பர்களும் நமக்கு கிடைத்தார்கள்.

பெரிய அளவில் சாதிக்கவில்லை எனினும் ஆரம்பத்தில் இருந்தே சுப்பன், பாசித், புஸ் சரவணன், பன்னீர், ஆறுமுகம், ராமசுப்பு, அம்பி என நமது அனைத்து நண்பர்களின் தினசரி வாழ்க்கையில் கிரிக்கெட் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. என் அண்ணா, சங்கர், மதி அண்ணா, சரவணன் மற்றும் சில நண்பர்கள் ஊருக்கு வரும் சமயங்களில் எல்லாம் விளையாட்டில் கலந்து கொண்டது உண்டு. வெளியூரில் இருந்து நம்ம ஊருக்கு வந்து சிறப்பான விளையாட்டின் மூலம் சுரேஷ் (குளச்சல்), புலியூர் சுரேஷ், புலியூர் சந்திரமோகன் போன்ற நண்பர்களும் நம்மில் இணைந்தது உண்டு.

வேறு எந்த நண்பர்களது பெயர்கள் ஏதேனும் விடுபட்டு போய் இருந்தால் நியாபகப்படுத்துங்கள்.

இன்னும் நமக்கெல்லம் பேட், பேடு முதலிய அனைத்து விளையாட்டு உபரகணங்களையில் வாங்கி கொடுத்து நம்மை ஊக்குவித்த ராமனாதன் சார் மற்றும் கம்பெனியையும் மறக்க முடியாது.

இந்த கட்டுரையை திரு. இராமனாதன் ஐயா (ஜி.எம்) அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வழக்கம்போல படித்துவிட்டு அடுத்த சைட்டிற்கு போவதற்கு முன் உங்கள் இடுகைகளை இட்டுவிட்டு செல்லுங்கள். நன்றி.

Monday, November 22, 2010

படித்ததில் பிடித்தது - அம்மாவின் கைகள்

சில வருடங்களுக்கு முன்பு**, **வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின்
வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின்
புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று
நினைத்து**,**அதைப்பற்றிக்
கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது**,**அதேபோன்ற கைகளின்
புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.
*

*

**அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார்.
புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது**, **அது வயதான ஒரு பெண்ணின் கைகள்
என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள்
சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக
இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை**, **ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே
இருந்தது.**

**அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என்
அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின்
கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்**?" **என்று கேட்டேன்.**

"**அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின்
கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட**, **அந்தக் கைகளைக்
காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.**

**அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.
இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால்**, **இதே கை களால் வளர்க்கப்பட்டவன்
உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த
நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.**

**அப்பா பொறுப்பற்ற முறையில்**, **குடித்து**, **குடும்ப வருமானத்தை அழித்து**
32**வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று
பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக
வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது**,*
*பாத்திரம் கழுவுவது**, **துணி துவைப்பது**, **நாய்களைப் பராமரிப்பதுபோன்ற
வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும்
வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம்
செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.**

**இரவு வீடு திரும்பிய பிறகு**, **சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து
உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர்
இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள்
அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில்
யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
**

**அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம்**, **நம்பிக்கை
கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி
நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே
இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை
வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை
உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில்
மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.**

**ஆனால்**, **நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க
முடியாமல்**,**விடுவிடுவென
எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே
இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ**, **அணைத்துக்கொள்ளவோ இல்லை.
அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை.
வீட்டில் சாமி கும்பிடவோ**, **கோயிலுக்குப் போய் வழிபடவோ**, **அதிக ஈடுபாடு
காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும்
என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.**

**சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.
ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன்.
கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று
போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று
அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல
சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால்
திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா
கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது
என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து
சுற்றவும்**, **புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள்
சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான்
செய்திருக்கிறார்கள். ஆனால்**,**அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே
இல்லை.**

**கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து**, **நோயாளியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு
**, **ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன்
பிறகு**, **என்னைத்
திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி**, **ராணுவத்தில் வேலைக்குச்
சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே
வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும்**, **அம்மா ஒருபோதும்
எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும்
என்று நினைத்து**, **தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.**

**முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன்**, '**எனக்கு ஒரே ஒரு வாட்ச்
வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று
ஆசைப்பட்டேன். ஆனால்**, **அது நடக்கவே இல்லை. அதன் பிறகு**, **எனக்குள் இருந்த
கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே
எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை
அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச்
சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா**?' **என்று கேட்டார்.**

**அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல
அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய
ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா**, **நான் திருமணம் செய்து
டெல்லி**, **பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில்
எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நான் கூடவே இருந்தேன்.**

'**நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே
இல்லை**?' **என்று கேட்டேன். அம்மா**, '**அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன்
என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால்**, **அன்று நான் கோபப்பட்டு இருந்தால்**, *
*என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்**' **என்று சொல்லி**, **தன் கையை
என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.**

**அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது.
எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து
தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
பிறகு ஒருநாள்**, **எனது கேமராவை எடுத்து வந்து**, **புகைப்படம்
எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால்**, **இந்தக் கைகள் என்னை
வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக்
கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர**, **வேறு நான் என்ன
செய்துவிட முடியும்**?" **என்றார்.**

**ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு
வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை.
உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான்
இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும்**, **ஆதரவு தரவும்
**, **அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம்.
அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.**

**இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன்.
சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன்.
அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம்
அத்தனை கைகளையும் வணங்கி**, **தீராத நன்றி சொன்னது.**

'**கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு
சேர்ந்துகொள்ளத்தான்**' **என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம்
உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்**
?

**முடிவு நம்மிடமே இருக்கிறது!*



"Be Happy and Make Others Happy".

Thursday, November 18, 2010

List of RTO districts in Tamilnadu

TN-01 Chennai Central (Ayanavaram} [PIN Codes 600006,07,08,10,23,31,34,81,105]
TN-02 Chennai West (Anna Nagar) [PIN Codes 600029,30,40,49,101,102,106, Mugappair East & West]
TN-03 Chennai North East (Tondiarpet)
TN-04 Chennai East (Basin Bridge) [PIN Codes 600001,03,09,13,19,21,79,81,104,108,112]
TN-05 Chennai North (Vyasarpadi) [PIN Codes 600011,12,38,39,82,99,110,118]
TN-06 Chennai South East (Mandaveli)
TN-07 Chennai South (Thiruvanmiyur) [PIN Codes 600002 (except Anna Salai), 600004,05,18,20,22,25,28,36,42,85,86,90,96,113,28, Palavakkam, Kotivakkam]
TN-09 Chennai West (K.K. Nagar) [PIN Codes 600015,17,24,32,33,35,78,83,89,97,98]
TN-10 Chennai South West (Valasarawakkam) [PIN Codes 600026,87,89,92,93,94,111, Porur, Ramapuram]
TN-18 Red Hills, Chennai
TN-19 Chengalpattu
TN-20 Tiruvallur
TN-21 Kanchipuram
TN-22 Meenambakkam
TN-23 Vellore
TN-24 Krishnagiri
TN-25 Thiruvannamalai
TN-27 Salem Central
TN-28 Namakkal
TN-29 Dharmapuri
TN-30 Salem West
TN-31 Cuddalore
TN-32 VillupuramUlundurpet
TN-33 Erode
TN-34 Thiruchengode
TN-36 Gobichettipalayam
TN-37 Coimbatore South (Attupalam,Podanur,ukkadam,Kuniamuthur,)
TN-38 Coimbatore North([[Chinniampalayam,Kalapatti,, Peelamedu ,Nanjundapuram

Singanallur,Selvapuram,Chinniampalayam,Ramanathapuram,Race cource,Sulur west,Sitra(airport),Nellambur,Somanur,Irugur]])
TN-39 Tiruppur North
TN-40 Mettupalayam
TN-41 Pollachi
TN-42 Tiruppur South, Udumalpet
TN-43 Uthagamandalam, The Nilgiris
TN-45 Tiruchirapalli
TN-46 Perambalur
TN-47 Karur
TN-48 Sri Rangam (Tiruchirapalli)
TN-49 Thanjavur
TN-50 Mannargudi
TN-51 Nagapattinam
TN-52 Sankagiri
TN-54 Salem East
TN-55 Pudukottai
TN-56 Perundurai
TN-57 Dindigul
TN-58 Madurai South & Tirumangalam
TN-59 Madurai North
TN-60 Periyakulam (Theni)
TN-61 Ariyalur
TN-63 Sivagangai
TN-64 Madurai Central
TN-65 Ramanathapuram
TN-66 Coimbatore Central (R S puram,Gandipuram(Cross cut road,Dr.Najappaa road,Bharatiyar road,100 feet road),Flower market,saibaba colony,Sivananda Colony)
TN-67 Virudhunagar
TN-68 Kumbakonam
TN-69 Tuticorin
TN-70 Hosur
TN-72 Tirunelveli
TN-73 Ranipet (Vellore)
TN-74 Nagercoil
TN-75 Marthandam
TN-76 Tenkasi
TN-/N State Transport Undertakings
TN-/G State Government Vehicles

Sunday, November 14, 2010

மைனா விமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம். ஆனால் நல்ல படங்களுக்கே உண்டான சோகமான முடிவு. என்ன... நாம் முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

இதுவரை மனிதர்களின் காலடி கூட படாத இடங்களில் எல்லாம் கேமரா பயணப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யாருமே நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பனின் ஊர் போடி மெட்டு. அவனின் ஏரியாவில் இந்த படத்தின் கதை நடக்கிறது. கோவைக்காரர்களுக்கு சற்றிலும் குறையாத குசும்புக்காரர்கள் போடிக்காரர்கள். நையாண்டி அவர்களுக்கு கைவந்த கலை. இந்த படத்திலும் அவர்களது நையாண்டியை நன்கு ரசிக்கலாம். சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் இறுக்கமாக நகரும் கதையை சற்று இயல்பாக்குவதே இவர்கள்.

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், அருமையான நடிப்பால் நம்மை தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

இந்த மாதிரி படங்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவிடம் கொடுத்து விட வேண்டும். பின்னி பெடலெடுத்து விடுவார். இமானும் குறைச்சல் இல்லை. ஆனால் மேஸ்ட்ரோவின் கைவண்ணமே தனி. பாடல்கள் நன்கு படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம்.

எல்லாரும் பாக்கலாம்.

Monday, November 1, 2010

தீபாவளி வந்தாச்சுப்பா…

“தீபாவளி” இந்த வார்த்தையை கேட்டதும் உடம்பு சிலிர்த்தடங்குவது என்னால் மறக்க முடியவில்லை. கட்டுரை எழுதி நாளாகிவிட்டது. இந்த முறை எழுதிவிடுவது என்கிற முனைப்புடன் பொட்டியை தட்ட ஆரம்பித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பே சில்லு வண்டுகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊசிப்பட்டாசுகள் வெடிக்க ஆரம்பிக்கும்போதே தீபாவளி களை கட்டி விடுகிறது. குவாரி முருகன் டெக்ஸ்டைல்சும், மாஸ் டைலரும் பிஸி என சொல்வது மிக ஆச்சரியமாக நிகழும். நன்கு தைக்க தெரிந்த ஒரே டைலர் என்பதாலும் துபாயில் துணி தைத்தவர் என்பதாலும் அனேகமாக ஊரில் துணி எடுத்து தைக்கும் நபர்களின் ஒரே சாய்ஸ் அவர்தான். துணிக்கடையே இல்லை என்று ஒரு பேச்சு வந்துடக்கூடாதுன்னு நம்ம ஊர் மக்களையும் நம்பி ஒரு துணிக்கடை இருக்குன்னா அது நம்ம முருகன் கடைதான். (கடை பேர்ல ஒரு டவுட் இருக்கு. தெரிஞ்சவங்க கிளியர் பண்ணலாம்).

தீபாவளின்னாலே பட்டாசுதானே! முதலில் கவுண்டர் கடையில் லூஸுல விக்கும் பட்டாசுதான் சக்கை போடு போட ஆரம்பிக்கும். அப்புறம் ஒவ்வொரு கடை வாசலிலும் ஒரு கட்டிலை விரிச்சி பட்டாசு விற்கப்படும். டைலர் மாஸ் கூட பட்டாசு விற்றார். பின்னாளில்தான் எனக்கு தெரியும் பட்டாசு வியாபாரம் கொள்ளை லாபம் என்று. தீபாவளிக்கு முதல் நாள் அதிக பட்சம் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டு குஜிலியம்பாறை போய் ஒரு குரூப் பட்டாசு வாங்கும். அனேகமாக என் அண்ணா செட்டில் இருக்கும் அனைவரும் போய் வாங்கி வருவர். ஒரு கூடை நிறைய பட்டாசுடன் வீட்டுக்கு வந்ததும் கண்கள் விரிய அதை எடுத்து தொட்டுப்பார்த்துக்கொள்வேன். காலைலதான் வெடிக்கனும்னு அப்பா சொன்னதும் சிறு முகவாட்டத்துடன் இருந்தாலும் எப்படா விடியும்னு இருப்பேன். எதிர்வீடு ஸ்ரீராம் & கோ ஏற்கனவே 200 ரூபாய்க்கும் மேல் வாங்கிய பட்டாசுடன் காத்திருப்பார்கள். நாங்கள் எங்கள் வீட்டில் எழுந்து கங்கா ஸ்னானம் முடித்து சாமி கும்பிட்டுவிட்டு வெடிக்க வருவதற்குள் ஒரு ரவுண்டு வெடித்து முடித்து காபி குடித்துக்கொண்டு இருப்பர்கள் செல்லப்பா மாமா வீட்டில். அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் பட்டாசு குப்பையை எந்த வீடும் மிஞ்சியதில்லை.

ஸ்ரீராம் வீட்டிற்கு ஆப்பக்கூடலில் இருந்து வரும் சொந்தக்காரர்களான ராஜூ, முகுந்த், (இன்னொருத்தர் பேர் மறந்து போச்சே) எல்லாரும் 7 மணி அளவில் பிள்ளையார் கோவிலுக்கு போய் கும்பிட்டுவிட்டு அங்கும் வெடி வெடித்து விட்டு வருவர். அப்பொழுதெல்லாம் சன் டிவி இல்லை என்பதால் டிடி மட்டுமே பொழுதை போக்கி வந்தது. அதிக பட்சம் ஒரு பட்டிமன்றமும், ஒரு சினிமாவும் போட்டுவிட்டு கல்லா கட்டி விடுவர். அதனால் நமக்கு நிறையவே நேரம் இருந்தது. 10 மணி அளவில் அனேகமாக எல்லா பட்டாசும் காலியாகி இருக்கும். பிஜிலி வெடி, ஓலை பட்டாசு மட்டும் கையில் இருக்கும். டொப்பு டொப்புன்னு அதை வெடிக்கிறது தான் ரொம்ப நேரம் நடக்கும். ரயில் வெடி, டபுள் ஷாட், ட்ரிபிள் ஷாட், சரவெடி, டாம்டாம், லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு இப்படி ரக பட்டாசுகளே அன்னாளில் பிரசித்தம். இன்று இருப்பது போல வானத்தில் ஜாலங்கள் காட்டும் மத்தாப்பு வகை பட்டாசுகள் அபூர்வம். இதில் குண்டு செந்தில் ஒரு முறை வெடித்த புல்லாங்குழல் வெடி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. சுந்தரம் அண்ணா மட்டும் ஒரே ஒரு 1000வாலாவை வெடித்து விட்டு வாசலை குப்பையாக்கிவிடுவார். வெங்காய வெடிகூட ஒரு சில முறை வெடித்து பார்த்தது உண்டு. ஆனால் இது மிக டேஞ்சரான வெடி என்பதால் அரசாங்கம் விற்க தடை விதித்து விட்டது.

எல்லா பட்டாசும் காலியான பின்பு எல்லோர் வீட்டு வாசலில் இருக்கும் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து வந்து ஒரு பேப்பரில் மருந்தினை கொட்டி நாலு மூலையிலும் நெருப்பு வைத்து அது “புஸ்”னு வருவதை கைகொட்டி ரசித்தது ஒரு காலம். ஒரு துப்பாக்கியும் சில பொட்டு வெடிகளும் இருந்து விட்டால் மனசுக்குள் ஜெய்சங்கர்னு எல்லாருக்கும் நினைப்பு வந்துடும்.

தீபாவளி அன்று சில சமயங்களில் மழை வந்து கெடுத்து விடும். ஒரு வயசு வந்ததும் தீபாவளி அன்று கிரிக்கெட் பிரபலமானது. அது இல்லை எனில் எங்காவது ட்ரிப் போவது (பொன்னனியாறு டேம், அழகாபுரி டேம்) என்.
தீபாவளி அன்று கறிக்கடைகளில் பெரியவர்கள் கூட்டம் அலைமோதும். அன்று அனேகர் வீட்டில் கறிக்குழம்புதான். இன்னும் 4 நாளில் தீபாவளி வரப்போகிறது. இதுவரைக்கும் ஒரு பட்டாசு கூட வெடித்து நான் பார்க்கவில்லை (சத்தம் கேட்கவும் இல்லை). தீபாவளி அன்று கூட காலையில் வெள்ளென எழுந்து மேற்சொன்ன கலாச்சார வடிவில் இங்கு யாருமே கொண்டாடுவதில்லை. தீபாவளி அன்று இரவுதான் வான வேடிக்கைகளை பார்க்க இயலும். டிவி அனேகரது பொழுதுகளை தின்றுவிட்டது. நமது அற்புதமான நேரத்தை கபளீகரம் செய்தது டிவிதான்.

இன்று கண்ணுக்கு அழகாக எவ்வளவு காஸ்ட்லியான வெடிகள் வெடிக்கப்பட்டும் அதை பார்க்கும் எனக்கு சிறு வயதில் டாம் டாம் வெடித்ததின் சிலிர்ப்பு ஏனோ வரவில்லை.

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Friday, October 22, 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்

வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல

இருந்தே செய்யணும். Eதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,

இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.

எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.


"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க

பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்

இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள

முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"


"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50

நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே

"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம்.

இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.

இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.

இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.

எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?

நான் கடைசியா சொன்னேன் பாருங்க...

டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,

கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.

சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.

அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,

உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."

இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,

"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".

இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Thursday, October 21, 2010

பண்டைய கணக்கீட்டு முறைகள்

நம் தமிழினத்தின் பண்டைய கணக்கீட்டு முறைகள்:

சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு (3960 அடி)
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம் (15840 அடி = 3 x 5280 = 3மைல்கள் )
(கூப்பிடு - காது - காதம்?)
காற்றில் ஒலியின் விரைவு நொடிக்கு 1089 அடி.
தோராயமாக 1100 அடி
ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு = 24 x 60 x 1100 = 1584000 அடிகள் = 100 காதங்கள்.
அதாவது ஒரு காதம் என்பது ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் 100 இல் ஒரு பங்கு.

நம்மூர் மாட்டு வண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼ அடியாகும். வட்டத்தின் சுற்றையும் பரப்பையும் கணிக்க உதவும் 22/7 என்ற கூட்டுத்திறனை அகற்றுவதற்காக இந்த விட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கணிதப்படி இந்த மாட்டுவண்டிச் சக்கரத்தின் சுற்று = x விட்டம் = 22/7 x 21/4 அடி = 66/4 அடி = 16.5 அடி x 4 = 66 அடி = இன்றைய நில அளவைச் சங்கிலியின் நீளம் x 10 = 660 அடி = 1 பர்லாங் x 8 = 5280அடி = 1 மைல். 66 அடி x 66 அடி = 4356 ச.அடி. = 10 சென்றுகள் x 10 = 43560 அடி = 1 ஏக்கர். குமரி மாவட்டத்தில் ஓர் ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் என்பது சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் நடைமுறையிலிருந்தது. 43560 அடி x 2½ = 108900 ச.அடி = 330 அடி x 330 அடி . இன்றுள்ள 10 மீட்டர் = 32.8 அடி என்றிருப்பதை 33 அடி எனக் கொண்டால் 10000 ச.மீ. கொண்ட எக்டேர் பண்டைத் தமிழ் ஏருக்குச் சமமாகும். 2.75 அடி கொண்ட, கையாட்சிக்கு உகந்த, நம்மூர் தச்சு முழக்கோல் x 4 = 11 அடி. 12 தச்சு முழக்கோல் = 33 அடி = 10 மீட்டர். இன்று சாலைகளின் நீளத்தை அளக்க சக்கரம் பதித்த ஒரு கோலைத் தள்ளிச் செல்வது போல் அன்று மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

திருமண பொருத்தம்

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1. அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2. பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3. கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4. கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5. ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6. மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7. மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8. திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9. புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10. புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11. பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12. ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13. மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14. பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15. உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16. உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17. அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18. சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19. சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20. சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21. விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22. விசாகம் 4 ம் பாதம் சதயம்
23. அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24. கேட்டை திருவோணம், அனுஷம்
25. மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26. பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27. உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28. உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29. திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30. அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31. அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32. சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33. பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34. பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35. உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36. ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி


திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1. அஸ்வனி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2. பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3. கார்த்திகை 1 ம் பாதம் சதயம்
4. கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் சதயம்
5. ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6. மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7. மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8. திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9. புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10. புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11. பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12. ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2
13. மகம் சதயம்
14. பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15. உத்திரம் 1 ம் பாதம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16. உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17. அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18. சித்திரை 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 2, 3, 4, மகம்
19. சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1, மகம்
20. சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21. விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22. விசாகம் 4 ம் பாதம் அவிட்டம், சதயம், சித்திரை
23. அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24. கேட்டை கார்த்திகை 2, 3, 4
25. மூலம் உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26. பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27. உத்திராடம் 1 ம் பாதம் உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28. உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29. திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30. அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 1, மூலம்
31. அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32. சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33. பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34. பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35. உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36. ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

Monday, October 18, 2010

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

POINTS ON HOW TO IMPROVE YOUR LIFE

Personality:
1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't over do; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.

Community:
15. Call your family often
16. Each day give something good to others
17. Forgive everyone for everything
18. Spend time with people over the age of 70 & under the age of 6
19. Try to make at least three people smile each day
20. What other people think of you is none of your business
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life:
22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything
24. Do the right things
25. However good or bad a situation is, it will change
26. No matter how you feel, get up, dress up and show up
27. The best is yet to come
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful
29. When you awake alive in the morning, thank GOD for it
30. If you know GOD you will always be happy. So, be happy.

Sunday, September 26, 2010

ஊர்களும் – பேர்களும்

வழக்கில் மறுவிவிட்ட தமிழ் பெயர்கள் (சில நெட்டில் சுட்டவை)

பொழில்வாய்ச்சி - பொள்ளாச்சி
குளித்தண்டலை - குளித்தலை
கோவ நாயக்கன் புத்தூர் – கோவன் புத்தூர் - கோயம்புத்தூர்
சென்னப்ப நாயக்கன் பட்டினம் – சென்னை
ஹேமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் பாலம் – பார்பர்ஸ் பிரிட்ஜ்
கருவூர் – கரூர்
ஸ்ரீவலம்வந்தபுரி – சீவலப்பேரி
சோழன் உவந்தான் – சோழவந்தான்
மயிலாடுதுறை – மாயவரம்
சிராப்பள்ளி – திருச்சிராப்பள்ளி
வடவழி - வடவள்ளி, கோவை
சுந்தரபாண்டிய நல்லூர் – சூரலூர் – சூலூர்
அரும்புக்கோட்டை – அருப்புக்கோட்டை
சித்தர் அன்னவாயில் – சித்தன்னவாசல்
இட்டவி (மாவை இட்டு அவி) – இட்டலி – இட்லி
கைகடிப்பட்டிணம் – கடியப்பட்டிணம் (முட்டம்)
சிங்கம்பிடாரி – சிங்கம்புணரி
ஆன் பொருணை நதி – அமராவதி ஆறு
உப்பு இட்ட மங்களம் – உப்பிடமங்கலம்
கால் நாடு காத்தான் – கானாடுகாத்தான்
ஒப்பிலா அப்பன் – உப்பிலியப்பன்
திருஎவ்வுள் – திருவள்ளூர்
பண்டாரெட்டிப்பாளையம் – பண்டாரெட்டி – பண்ணுருட்டி- பண்ருட்டி
சுழியல் – திருச்சுழியல் – திருச்சுழி
திருவரங்கம் – ஸ்ரீரங்கம்
தூற்றிக்குடி – தூத்துக்குடி
வீரச்சாலை – விரையாச்சிலை – விராச்சிலை
சாலை கூடி – சாயல்குடி
கூவலூர் – கூகலூர்
பழம் நீ – பழனி
ஆரைக்கல் - நாமக்கல்
தில்லைவனம் – சிதம்பரம்
கடம்பவனம் – மதுரை
வேணுவனம் – திருநெல்வேலி
ஆர்க்காடு – ஆற்காடு (ஆத்தி மரங்கள் நிறைந்த காடு)
ஏரிக்காடு – ஏற்காடு (ஏரிகள் நிறைந்த காடு)
பைம்பொழில் – பம்புளி (குற்றாலம்)
திருவிடைச்சுரம் – திருவடிசூலம்
கஞ்சிவரம் – காஞ்சிபுரம்


இன்னும் உங்களுக்கு தெரிந்தவைகளை இடுகையில் இடலாம்

Sunday, September 19, 2010

முரண்பாடுகள்

நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில் என்னுடன் கல்யாணசுந்தரம் என்றொருவன் படித்தான். இருவரது பெயரும் ’க’ வில் வருவதால் அனேகமாக எல்லா கிளாஸ்களிலும் என் பேட்ச்சிலேயே இருபபான். பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாது. நானும் அந்த கேட்டகிரிதான். எனவே ஒப்பீட்டளவில் அவனை இந்த விவாதத்தில் எடுத்துக்கொள்கிறேன். அய்யர் வீட்டு பையன். சிறந்த வாய்த்துடுக்கானவன். யாரிடமும் பேசி ஜெயிக்க வல்லவன். பல அரியர்கள் வைத்திருந்தான். ஷோக்காளி. நாங்களெல்லாம் அங்கே ரூம் எடுத்து தங்கி படித்துவந்தவர்கள். ஆனால் கலயாணமோ அதே ஏரியாக்காரன் என்பதால் வீட்டிலிருந்து தான் வருவான். எங்களை விட அவனுக்கு உள்ளூரில் தெரிந்த முகங்கள் அதிகம். இருப்பினும் லூட்டி அடிப்பதில் அனைவரையும் மிஞ்சினான். கண்டிப்பாக வாழ்க்கையில் இவன் சிரமப்படுவான் என நான் நினைத்தது உண்டு. ப்ராஜெக்ட் சமயங்களில் கூட காப்பி அடித்தே பாஸ் செய்தான். நாங்கள் இருவருமே படிப்பை முடிக்கும் சமயம் ஓரிரு அரியர்களுடன் தான் வெளியே வந்தோம்.

அதன் பிறகு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் மிகவும் சிரமப்பட்டு எனது அரியரான கணிதத்தை கிரி அண்ணாவிடம் ட்யூசன் போய் படித்து பாஸ் செய்தேன். அதன் ரிசல்ட் வரும் சமயம் மார்க் ஷீட் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது அவனை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே நல்ல கலராக இருக்கும் அவன் இன்னும் பாலீஷாக இருந்தான். கூலிங் கிளாஸ் வேறு. கெட்டப்பே மாறி இருந்தான். அவனை தூரத்தில் பார்த்தபோதே அவன் கண்டிப்பாக இம்முறையும் பெயிலாகி இருப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் 5 பேப்பரையும் ஒரே ஸ்ட்ரோக்கில் பாஸ் செய்திருந்தான். கொஞ்சல் கூட அலட்டலே இல்லாமல். சரி... வெட்டி ஆபீசராக இருந்திருப்பான்.. அதனால் படிக்க நேரம் கிடைத்திருக்கும் என நினைத்து அவனிடம் போய் பேசினேன். பெரிய அதிர்ச்சி என்னவெனில் அவன் அசோக் லைலாண்ட் (ஓசூர்) கம்பெனியில் சொல்லிக்கொள்ளும்படியான உத்தியோகத்தில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தான். இது எப்படி சாத்தியம் என குழம்பினேன். அவனுடன் நான் 2 மணி நேரங்கள் அன்று செலவிட்டேன். எந்த கருத்திற்கும் எதிர் வாதம் செய்யும் அவன் எப்படி செட்டில் ஆனான்? அவனுக்கு உதவிகள் எப்படி கிடைத்தது. இத்தனைக்கும் அந்த கம்பெனியில் அவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நண்பர்களும் கிடையாது. எப்படிடா அந்த வேலை உனக்கு கிடைத்தது என கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு பயோடேட்டாவை தயார் செய்து பல காப்பிகள் எடுத்து பேப்பரில் வரும் விளம்பரங்களை பார்த்து அப்ளை செய்து கொண்டே இருந்தானாம். ஓசூரில் லைலாண்ட் கம்பெனியில் தினக்கூலி அடிப்படையில் ஒரு வேலை கிடைக்க உற்சாகமாக கிளம்பிவிட்டான். அங்கு போயும் சும்மா இருக்கவில்லை. இவனது எதிர்மறையான எண்ணங்களின் விளைவாக எல்லோரிடமும் உத்தியோகம் சம்பந்தமாக முரண்பாடான கேள்விகளை எழுப்ப நீண்ட நாட்களாக அவர்களால் கண்டறிப்படாமல் இருந்து ஒரு தவறை போகிற போக்கில் கண்டுபிடித்திருக்கிறான். உடனே அவனை கம்பெனி QC யாக்கி விட்டார்கள். உருப்படியாக வாழ்க்கையில் செட்டில் ஆக மாட்டான் என நான் நினைத்தது முற்றிலும் தவறாகி விட்டது. ”இறைவன் எல்லா உயிர்களுக்கும் உணவை படைத்திருக்கிறான். ஆனால் அந்த உயிர்களின் கூட்டில் அல்ல” என்பது எனக்கு உறைத்தது. அதுவரை எனக்குள் இருந்த சில கோக்குமாக்குகளை சரிசெய்யத்தொடங்கினேன். கோவில்களுக்கு செல்லவும் ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். எனக்குள் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தேன். தெளிவு பிறந்தது.

முரண்பாடுகளே முன்னேற்றத்திறகான வழி. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை – கண்ணதான்.

Monday, September 13, 2010

படித்ததில் பிடித்தது - சிலம்பாட்டம்

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.


சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.


அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.


ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.


சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.


சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.


கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.


"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.


சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.


சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.


சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.


இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.


தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.


""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.


ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.


பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்!

கே பாலசந்தர் இயக்கிய பூவிலங்கு படத்தின் மூலம் (1984) தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன படம். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 31, 2010

இதுங்க எல்லாம் எங்க உருப்பட போகுது?

என்னாடா டாபிக்கே சரியில்லைன்னு நினைக்கிற மக்காள்.. முழுசா படிச்சிட்டு சொல்லுங்க.

காலை எழுந்தவுடன் படிப்பு.. இதெல்லாம் காலேஜ் முடிக்கிற வரைக்கும்தான். அதுக்கப்புறம் ஒரு வருசமாவது வீட்டில சும்மா இருக்குறது தான் ஸ்டைலு. கரெக்ட்டா அப்பா 7:30 மணிக்கு வேலைக்கு போனதும் டான்னு முழிப்பு வந்துடும் நமக்கு. அப்புறம் சாவகாசமாக குளிச்சு ரெடியாகி ஒரு 7 ரூபாய் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டு (சுயமாகவா சம்பாதிக்கிறோம்.. அப்பாவுதுதானே) ஒரு ஸ்டைலோட வாக்கிங் கிளம்பினம்னா டார்மெண்ட்ரி வந்துடும். யாரும் அந்த நேரத்துக்கு இருக்க மாட்டாங்க. அப்படியே வராதுன்னு தெரிஞ்சும் வரும்ங்கிற நம்பிக்கைல போஸ்ட் ஆபீஸ் வரை போய் லெட்டர் இருக்கான்னு பாத்துட்டு வீட்ல இருந்து கொண்டு வந்த டோக்கன்ல பரமானந்தம் கபே ல ஒரு டீ சாப்பிட்டுவிட்டு திரும்ப அதே டார்மென்ட்ரிக்கு வந்தம்னா (போகிறதுக்கு வேற இடம் இல்லங்குறது வேற விசயம்) அனேகமாக எல்லாரும் வந்து அசெம்பிள் ஆய்டுவாங்க. ஒரு அரை மணி நேரம் வெறும் கடலை போட்டுட்டு எல்லாரும் வந்தாச்சான்னு ஒரு பார்வை பாத்துட்டு ”வாங்கப்பா மேல போலாம்”ன்னு யாராவது ஒருத்தர் ஆரம்பிச்சா வெள்ளாட்டு மந்தை கணக்கா எல்லாரும் மேல போய்ட வேண்டியதுதான். இதுக்கும் மேல இதை யூஸ் பண்ண முடியாதுங்குற ஸ்டேஜ்ல ஒரு 3 கட்டு சீட்டை எடுத்து வி.டி.ஆர் பாய்ண்ட் போட ஆட்டம் ஆரம்பிக்கும். 320 பாயிண்ட்க்கு 5 ரூபா. 8 பேர் சேந்தாலே 40 ரூபாய்தான் கேபிடல். .அந்த 5 ரூபாயை காப்பாத்த இழுக்குற இழுவை ஆண்டவனுக்கு அழுகை வந்துடும். செந்தில், சிசுபால், விடிஆர், சுப்பன், பிருதிவி, தர்மா (கோழின்னு இவனுக்கு எவண்டா பேர் வச்சது?), பன்னீர், அனலு இப்படி பல ஜெனரேசன் கலந்து அடிக்க மேட்ச் விருவிருப்பாய்டும். ஒரு வழியா 5 கை அவுட்டாகி மிச்சம் இருக்குறவங்க சீட்டை வச்சு அவுங்க கேம் ஆட ஆரம்பிச்சுடுவாய்ங்க. மணி 2 ஆகுற போது 2 கை மட்டும் இழுத்துகிட்டு நிக்கும். எவனுக்கும் பசிக்காது. ஒரு வழியா காம்ப்ரமைஸ் ஆகி கைக்காசு குடுத்தோ இல்லை பாகம் பிரிச்சோ ஆட்டம் முடியும்.

அப்பால வீட்டுக்கு போய் செமத்தியா சாப்புட்டு ஒரு தூக்கம் (டயர்ட் ஆய்டும்லப்பா). ஒரு 4 மணிக்கு எழுந்து (கண்டிப்பா நமக்கெல்லாம் காபி கிடையாது) அப்படியே கிரவுண்ட்க்கு வந்தம்னா செக்யூரிட்டி ரூம்ல பதுக்கி வச்சுருக்குற பேட், பேடு எல்லம் எடுத்துகிட்டு ஒரு ஆட்டம் (இந்த ஆட்டத்துக்கு செலவு ஒன்னும் இல்லை. அதிகப்படிய கடலை மிட்டாய்தான்). அப்புறம் கைகால் எல்லாம் கழுவிட்டு நேரா கிளப்புக்கு வந்தா எல்லா பேப்பரும் படிக்க வேண்டியது (எனக்கு தெரிஞ்சு காலைல படிக்க வேண்டிய பேப்பரை எல்லாம் சாயங்காலம் படிச்ச கோஷ்டி உலகத்திலேயே நாம மட்டும்தான்). அப்புறம் இருட்டினதுக்கு அப்புறம் கிளப்புக்கு வெளிய இருக்குற தொட்டில உக்காந்துகிட்டு ஊர் கதை பேச வேண்டியது. 9 மணிக்கு மேல கிளப் மூடிடுவான். அதனால அதுக்குள்ள கிளம்பி வீட்டுக்கு போய் அப்பா ஆரம்பிக்குறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சு கேட்டும் கேட்காத மாதிரி தூங்கிட வேண்டியது. அடுத்த நாளும் அதே வாழ்க்கை.

இந்த பீரியட்ல நம்மளை பார்த்து அனேகம் பேர் மனசில நினைச்ச ஒரு விசயம் என்னன்னா??? டைட்டிலை படிங்கப்பா..........

Thursday, August 26, 2010

நம்ம ஊர் தெய்வங்கள்

நம்ம ஊரில் காவல் தெய்வங்களாக முனியப்பசாமியே அறியப்பட்டாலும் வடக்கில் கோலோச்சியது மாரியம்ம்னே. எனக்கு தெரிந்து முனியப்பனுக்கு ஒரு முறை திருவிழா எடுத்தார்கள். அதற்கப்புறம் இல்லை. (அந்த திருவிழாவின் போதுதான் இப்போது இருக்கும் 7 கன்னிமார் சிலையும் பெரிய முனியப்பன் சிலையும்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு மரத்தின் கீழ் (என்ன் மரம் என்று யாருக்காவது தெரியுமா?) சாதாரண கோவிலாக இருந்தது அந்த திருவிழாவிற்கு பிறகு தினமும் சிலர் வந்து செல்லுமளவிற்கு ஒரு வழிபாட்டுத்தலமானது. அந்த கோவில் ஏரியாவில் ஒரு சிறிய சுனை இருந்தது. அதில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். தண்ணீர் வற்றும் சமயங்களில் கம்பெனியில் இருந்து வண்டியில் நிரப்புவார்கள். நம்ம கம்பெனியின் கிடாவெட்டு ஒன்று வருடத்திற்கொருமுறை நடக்கிறது.

நம்மில் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட சமயங்களில் அடிக்கடி சென்ற இடம் இந்த கோவில்தான். ஒரு சில முறை மருந்து குடோன் வரை சென்றதுண்டு. இந்த கோவிலின் பின்பக்கம் சில பாறைகள் இருக்கும். அதில் ஏறி விளையாண்டதுண்டு. இந்த கோவிலின் பக்கத்தில் உள்ள தரிசுக்காடுகளில் அரைப்பரீட்சை லீவுகளிம் பொன்வண்டு பிடித்தல் பெரிய பொழுதுபோக்கு. இந்த கோவிலுக்கு அடுத்து பார்த்தால் நம்ம கரட்டுக்கோட்டை பெருமாள் கோவில். இது காவல் தெய்வமாக இல்லை எனினும் நம்ம ஊரின் சிறந்த கோவில்களில் இதுவும் ஒன்று. 3ம் வகுப்பு படித்த சமயம் (1985) செல்வபெருமாள் வாத்தியார் தலைமையில் அனைவரும் அணிவகுத்து இந்த மலைக்கு சென்றோம். அப்பொழுதெல்லாம் இங்கு பெரிய கோவில் இல்லை. படிக்கட்டுகளும் கிடையாது. மிட்டய்களை வாங்கிக்கொண்டு அங்கு போய் ஜாலியாக சுற்றிவிட்டு பின்பு நடராஜா என ஊர் வந்தோம். அதற்கு பிறகு அங்கு போகும் வாய்ப்பு இல்லை. திடீரென 1995ல் அங்கு ஒரு பிரம்மண்டமான மலைக்கோவில் தனியொரு நபரால் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஸ்வாமி பிரமேனந்தா மஹராஜ் ( நம்ம பிரேமானந்தா தான்) தலைமையில் நடைபெற்ற விழா அது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி விழாவாகும். அந்த விழாவிற்கப்புறம் ஒரு முறை திருவிழாவும் ந்டந்தது. பறவை என்னும் மஞ்சு விரட்டு போட்டி கூட நடத்தப்பட்டது. அந்த கோவிலில் சின்ன வயசில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் பெரிய கோடீஸ்வரர் ஆனதும் அவர் கட்டியது ஆகும். அவருக்கு இன்றும் திருச்சியில் பெரிய இரும்பு கம்பெனி ஒன்று இருக்கிறது.

இதெல்லாம் எப்பொழுதாவது ஒரு முறைதான் ந்டந்தது. ஆனால் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மட்டும் வருடம் தவறாமல் சிற்ப்பாக ந்டந்தது. அந்த ஏரியா மக்களின் அபிமானத்தை பெற்ற அந்த கோவில் திருவிழா நடக்கும் சமயம் குப்பாயி அம்மாள் கிணற்றில் இருந்து ஒரு வேல் எடுப்பார்கள். தாரை தப்பட்டை கிழிய கிழிய அந்த வேல் கோவில் வந்து சேரும். இந்த வேலை அனைவரும் எடுக்க இயலாது. அருள் வருபவருக்கு மட்டுமே சாத்தியம். அந்த வேல் வந்ததும் விழா இனிதே களைகட்டும். மஞ்சள் நீர் ஊற்றும் விழாவன்று காலணிக்குள்ளும் எல்லா இடத்திலும் வலம் வரும். அனைவரும் ஒருவர்மேல் ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவோம். பிறகு இரவு சினிமா காட்சிகள். திடீர் டீக்கடை, பெட்டிக்கடைகள் சகிதம் திருவிழா இனிதே முடியும். கடைசி நாளன்று சிலர் கிடாயும் வெட்டுவர். ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் இந்த கோவிலின் அருகில் ந்டைபெறும் கண் கட்டிக்கொண்டு முட்டி உடைத்தல் வெகு பிரசித்தம். நம்மில் அனைவருமே முயற்சி செய்திருப்போம் என நினைக்கிறேன். ஒரு முறை அர்ஜுனன் அடித்தான்.

அதற்கு அப்புறம் பார்த்தால் சந்தப்பேட்டை சக்தி வினாயகர் கோவில். கோவில் பெரிய விளம்பரம் இன்றி அன்றில் இருந்து இன்று வரை சாதாரணமாகவே இருக்கிறது. ஒரு வேளை பூஜை நடக்கிறது என நினைக்கிறேன். கடைசியாக நம்ம செல்வ வினாயகர் கோவில். கம்பெனி கோவில் என்பதால் பூஜைக்கும் புனஸ்காரத்திற்கும் பஞ்சமே இல்லை. இராமனாதன் செட்டியார் உடைக்கும் தேங்காய்க்கு க்யூவில் நின்றவர்கள் நிறைய பேர். என்னையும் சேர்த்துதான். 2 முறை கும்பாபிசேகம் நடைபெற்ற கோவில் இது. முதலில் வினாயகர் கோவிலும் பின்பு முருகன் மற்றும் ஐயப்பன் கோவிலும் கட்டப்பட்டன. வினாயகர் கோவில் மட்டும் இருந்த சமயத்தில் கோவிலின் கீழ் ஒரு பைப் இருக்கும். எப்பொழுதும் நல்ல தண்ணீர் வரும். கடுமையாக விளையாடும் நாம் குடிப்பது கை கால் முகம் கழுவுவதும் அங்கேதான். இப்ப அந்த பைப் அங்கே இல்லை. சம தளத்தில் இல்லாமல் 18 படி கட்டி கோவிலை தூக்கி நிறுத்தி இருப்பர்கள். இந்த அமைப்பில் இது மாதிரி ஒரு பிள்ளையார் கோவில் இது வரை நான் எங்கும் கண்டதில்லை. பரீட்சை நடக்கும் சமயங்களில் ஸ்கூலின் பின்புறம் இந்த இந்த் கோவிலின் மர நிழல்கள்தான் படிக்கும் தளம். திடீரென்று சூலபுறத்தில் இருந்து சில முஸ்லீம்கள் இந்த கோவிலுக்கு வருவதுண்டு. அவர்களை பொறுத்தவரை அது குவாரி டூர். இந்த கோவிலின் முன்புறம் கார்த்திகை மாதம் கொளுத்தப்படும் சூந்து பிரசித்தம். சூடு தனியும் முன்பே அந்த எரிந்த கொள்ளிக்கட்டைகளுக்கு ஏக டிமாண்டு இருக்கும். எடுத்துக்கொண்டுபோய் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தில் செருகி வைத்தால் நன்கு காய்க்கும் என்பது ஐதீகம். “கார்த்திகை மாசம் கம்பஞ்சோறு கைவிட்டுப் பார்த்தால் நெல்லுச்சோறு” என்னும் பாட்டு அன்று எல்லோராலும் பாடப்பட்டது.

இன்னும் சுவராஸ்யங்கள் தொடரும்

Monday, August 23, 2010

பிடித்த‌ ஜொள்ளு க‌விதை!

இத்தனை பொண்ணுங்களுக்கு
மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய்...எப்படிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காதகுறையாக
விரட்டி விட்டதை....!!!



நான் அழகா இல்லை
என் ட்ரெஸ் அழகா என
கேட்கிறாய்... உனக்கு பொய்
சொன்னா பிடிக்காது எனத்
தெரிந்தும் சொல்கிறேன்...
நீதாண்டி செல்லம் அழகு...!!


என் பர்த்டே க்கு என்னடா
தரப்போறே என உரிமையோடு
நீ கேட்கும் போதெல்லாம்
உனக்கு என்னையே தர
ஆசையாகத்தான் இருக்கிறது...
ஆனாலும் உன் ஹைஹீல்ஸ்சை
நினைத்தால் தான்
யோசனையாக இருக்கிறது...



ஏன் அவகிட்டே மட்டும்
இளிச்சு இளிச்சு பேசற என
கோபமாகக் கேட்கும்போது
எப்படி சொல்லுவேன்....
உனக்கு முன்னமே
நான் ரூட் விட்ட
ஃபிகர் அவள் என...



எனக்கு இந்த பல் எடுப்பா
இருகாடா.... எனக் கவலையாகக்
கேட்கிறாய்...
எடுப்பாய் இருப்பது பல்
மட்டும் இல்லை என பார்வைதாழ்த்தி
சொல்ல நினைத்தாலும்
உன் கிள்ளல் பொறுக்க முடியாதென
தீர்மானித்து சொல்கிறேன்..
அதாண்டி குட்டி உனக்கு அழகே....!!

Sunday, August 15, 2010

வம்சம் – விமர்சனம்

தேவர் சமுதாயத்தின் மண்ணின் மனத்துடன் ஒரு படம். கள்ளர், மறவர், அகமுடையார் என இப்படி தேவர் சமுதாயத்தின் உட்பிரிவில் உள்ள மறவர் இன மக்களின் துடிப்பான கதை. கதைக்களம் சிங்கம்பிடாரி (இப்பொழுது சிங்கம்புணரி என்று பெயர் மாற்றப்பட்ட ஊர்). கதையின் நாயகன் அறிமுகம் கலைஞர் குடும்ப வாரிசு அருள்நிதி. நாயகி நம்ம சுனைனா. நாயகிக்கு அறிமுகம் தேவையில்லை. இயக்கம் நம்ம ‘பசங்க’ பாண்டிராஜ். இயக்குனர்க்கு இது 2 வது படம்.

காலம் காலமாக நமது தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான கோவிலும் திருவிழாவும் தான் கதையின் முக்கால்வாசி நேரத்தை ஆக்கிரமித்துள்ளது. மஞ்சு விரட்டு, பொங்கல், கிடாவெட்டு என 10 நாள் ஆக்கிரமிக்கும் திருவிழா கொண்டாட்டங்கள். அதன் இன்னொரு முகத்தை மக்களின் வக்கிர எண்ணங்கள், அன்பு, பாசத்தை அற்புதமாக காட்டி இருக்கிறார்கள். நாயகனுக்கு உடல்மொழி இன்னும் ஒத்துழைத்து இருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும். எனினும் அவரது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கே உரிய வெயிலில் நன்றாக காய்ந்து போய் இருக்கிறார் சுனைனா. பசங்க படத்தில் சொக்கன் வாத்தியாரக வந்தவர்தான், ஜெயப்பிரகாஷ் இந்த படத்தில் வில்லன்.

கோவில்களில் தரப்படும் முதல் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் போது வம்சத்தின் பெயரை சொல்லி அழைப்பர். அப்பொழுது அந்த வம்சத்தின் வாரிசுகள் அனைவரும் வந்து அந்த மரியாதையை ஏற்றுக்கொள்வர். இது இன்றளவும் நடந்து வரும் ஒரு நிகழ்வு. அந்த வகையில் புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.

அதன் பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும் கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார்.

ஆனால் தந்தை செய்தததின் 'பலனை' அனுபவித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன் நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள்நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள்? என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.

கதை பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.

படத்தில் உண்மையாக ஜெயப்பிரகாசின் நடிப்பு மெச்சத்தக்கதாகவே உள்ளது. அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை மனிதர் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு. பரவாயில்லை. மாட்டிற்கும் பூனைக்கும் அசின், த்ரிசா என பெயரிட்டது கூட ஒரு காமெடிதான்.
பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும், கதைக்கு தேவையான அளவே பாடல்கள் உள்ளன. பின்னணி இசை பிரம்மாதம். ஆனால் வசன உச்சரிப்புகள் அனைவருக்கும் புரியுமா என தெரியவில்லை. புதுக்கோட்டைக்காரன் என்கிற முறையில் எனக்கு புரிந்தது. ஆனால் சென்னைக்காரர்களுக்கு கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்கும் போது தான் புரியும். 2 தடவை பார்க்கலாம் இந்த படத்தை.

நான் கல்லூரி படிக்கும் சமயம் சிங்கம்புணரியில் என் நண்பனது அழைப்பிற்கிணங்க அந்த ஊர் திருவிழாவின் மஞ்சுவிரட்டினை பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்வை 20 வருடங்கள் கழித்து நேரில் பார்த்தது போன்ற பரவசம்.

இரண்டாவது படத்திலும் ஜெயித்துவிட்டார் நம்ம பாண்டிராஜ். அடுத்த படத்திலும் இதே நேட்டிவிட்டியுடன் வெற்றி பெறவேண்டும் என நமது நண்பர்கள் சார்பில் வாழ்த்துவோம்.

பாரதிராஜாவுக்கு அடுத்து ஒரு பாண்டிராஜ். தமிழ் சினிமா நல்லா இருக்கும் இது போன்ற இயக்குனர்களால்.

Wednesday, August 11, 2010

Monday, August 9, 2010

வள்ளல்களும் வாழ்ந்த நாடுகளும் – தெரிந்த விசயங்களும் தெரியாத உண்மைகளும்

1. பாரி
2. ஆய்
3. அதியமான்
4. நள்ளி
5. மலயன்
6. பேகன்
7. ஓரி

பாரி – வள்ளல்களிலியே இவர்தான் பெரிய வள்ளலாக சிறப்பு பெற்றிருக்கிறார். இவர் ஆண்ட நாடு பறம்பு மலை. தற்காலத்தில் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இவர் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவரின் மகள்களே அங்கவை, சங்கவை. இந்த பிரான்மலை இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் இருக்கிறது. உறங்காப்புளி என்னும் புளிய மரம் இங்கு விசேசம். சாதாரண புளியமரங்கள் இரவில் இலை மூடி உறங்கும். உறங்காப்புளி எப்பொழுதும் இலை திறந்தே இருக்கும். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்று அறியப்பட்டவன்

ஆய் - இவன், பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். வேள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பெயர்களாலும் இவன் அழைக்கப்படுகிறான். பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான். சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்று அழைக்கப்படுகிறான். அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான்

அதியமான் - அதியமான் நெடுமான் அஞ்சி” கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் “அதியமான் பொகுட்டெழினி”. அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரியை குறிக்கிறது. தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. கரும்பு பயிரிடுதலை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் அளித்தவர் இவரே. அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர்தான் அவ்வைக்கு கனி கொடுத்தவர். இவருடைய வழித்தோன்றல்கள் அனைவருமே அதியமான் என பெயர் கொண்டவர்கள்தாம். தொண்டைமான் போல. சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று. இந்த பெருஞ்சேரல் இரும்பொறைதான் கரூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சேர மன்னன். அவர்கள் காலத்தில் நமது ஊரின் பெயர் வஞ்சி.
நள்ளி - வளம் செறிந்த கண்டீர நாட்டைச் சேர்ந்தவன் நள்ளி.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது என்ற கொள்கை உடையவன். நளிமலை நாடன் நள்ளி என்னும் பெயரை பார்க்கும்பொழுது இவனும் மலை நாட்டை ஆண்டவன் என தெரிகிறது. தோட்டி மலை எனவும் இந்த மலை அறியப்படுகிறது.
மலயன் - மலையமான் திருமுடிக்காரி என்பது இவன் முழுப்பெயர் ஆகும். இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரர். 'தடக்கை வேல் காரி' என்று சிறப்பிக்கப் படுபவர்; உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது.

பேகன் - பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை
உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான்.
குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன்
மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன் விலை உயர்ந்த கலிங்கப் பட்டாடையை அதற்குப் போர்த்தினான். ஆனால் இந்த அரசன் கட்டிய மனைவியை தவிக்க விட்டு மாற்றான் தோட்டத்து மல்லிகையை நாடியவன் என கபிலர் எனும் புலவர் தன் பாட்டில் சொல்லி இருக்கிறார். ஆவியர் எனும் குடியில் பிறந்த இவனும் மலையக நாட்டினை ஆண்ட அரசனாவான்.

ஓரி - ஓரி என்பவன் அக்கொல்லிமலையை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன். அவனது வில் திறனால் வல்வில் ஓரி எனப்பட்டான். அவனுக்கு ஆதன்ஓரி என்றும் பெயர் உண்டு. மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. அதே நேரத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்ற இடத்தில் அதியனையும், சோழனையும், பாண்டியனையும் போரில் முறியடித்தான். சோழனும், பாண்டியனும் தமது போர் முரசுகளையும் கொற்றக் குடைகளையும் முடி முதலிய கலன்களையும் இழந்து ஓடினர். சேரன் பெற்ற வெற்றி மிகப்பெரும் வெற்றி. அதோடு அவன் விடவில்லை. அவர்களுக்கு உதவிய அதிகனைச் துரத்திச் சென்றான். அவனுடன் அவனுடைய தானைத் தலைவன் பிட்டன் கொற்றனும் இருந்தான். இவர்கள் முன் நிற்க இயலாமல் அதியமான் அஞ்சி தகடூர்க் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டான். தகடூரை முற்றுகையிட்டான் சேரன். பின்னர் ஏற்பட்ட போரில் அதிகமான் மார்பிலே வேல் தைத்து இறந்து வீழ்ந்தான். இதை ஒளவை பார்த்தாள் பதறினாள்.

மொத்தத்தில் சில வள்ளல்கள் சூழ்ச்சியாலும் சிலர் போரினாலும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதில் பாரியும் ஓரியும் மிக ஒழுக்க சீலர்களாகவும் அடுத்தவன் நாட்டிற்கு ஆசைப்படாதவனாகவும் இருந்திருக்கின்றான். அதியமான் இன்னொரு வள்ளலுக்காக உயிரை இழந்ததன் மூலம் மிகப்பெரிய வள்ளலாகிறான். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று எதுவெனில் அனைத்து வள்ளல்களுமே சிற்றரசர்கள்தான். மேலை மலையக நாடுகளை ஆண்டிருக்கிறார்கள். அந்த மலைகள் இன்றைய காலகட்டத்திலுமே பெரும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது (கொல்லிமலை, பிரான்மலை). அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நோக்கினால் அது வெறும் காடுகளாகவே இருந்திருக்கும்.
இன்னும் சிந்திப்போம்!